வுழூவிற்கான சுன்னத் தொழுகை
உஸ்மான் ன அவர்களின் பணியாளர் ஹூம்ரான் அவர்கள் கூறிப்பிடுகிறார்கள் : 'உஸ்மான் ன அவர்கள்
ஒரு பாத்திரத்தில் நீரை கொண்டு வருமாறு கூறினார்கள். பின்னர் மூன்று முறை இரண்டு மணிக்கட்டுகளின் மீது ஊற்றி கழுவினார்கள்.
பின்னர் தனது வலதுகையை பாத்திரத்தில் இட்டு (நீரை எடுத்து) வாய்க்கு கொப்பளித்து, நாசிக்கு நீர்
செலுத்தினார்கள். பின்னர் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு இரண்டு கரங்களையும்
முழுங்கை வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை மஸ்ஹ் செய்தார்கள். பின்னர்
கரண்டை வரை இரு கால்களையும் கழுவினார்கள். பின்னர் 'யார் இது போன்று வுழூ செய்து பின்னர் எவ்வித உலக
எண்ணங்களும் இல்லாமல் இரண்டு ரக்ஆத்கள் தொழுகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபியவர்கள் கூறியதாக கூறினார்கள். (ஆதாரம் -
புஹாரி : 159)
பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகை அல்குர்ஆன், ஸூன்னா, இஜ்மா மூலம் மார்க்கமாக்கப்பட்டுள்ளது.
இணைவைப்பாளர்கள் காலத்திற்கு என்றும் இடத்திற்கு
என்றும் பெருநாட்களை கொண்டாடக் கூடியவர்களாக இருந்தனர், இஸ்லாம் அவைகளை
இல்லாமல் செய்து அவைகளுக்கு பகரமாக நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்
ஆகிய இரண்டு பெருநாள் தினங்களை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களின் பெருநாள் தினங்கள் இரண்டாகும். அவை
:
ஈதுல் பித்ர் (நோன்புப் பொருநாள்) : இது ஷவ்வால் மாத முதல் நாள் கொண்டாடப்படும்.
ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) : இது துல்ஹஜ் மாத பத்தாவது நாள் கொண்டாடப்படும்.
பெருநாள் தொழுகையின் சட்டங்கள்
சூரியன் உதித்து ஒரு ஈட்டி அளவு (15 நிமிடம்) உயர்ந்ததிலிருந்து சூரியன் அதன் உச்சியை
அடையும் வரை இதன் நேரம் துவங்குகிறது.
தொழுகை : இரண்டு ரக்அத்கள். இரண்டிலும் சத்தமாக ஓத வேண்டும். மேலும் அதான், இகாமத் இன்றி நிறைவேற்றப்படும்.
முதல் ரக்அத்தில் தக்பீரதுல் இஹ்ராமை தவிர்ந்து ஆறு தக்பீர்களும், இரண்டாவது ரக்ஆதில்
நிலைக்கு வரும் தக்பீரைத் தவிர்ந்து ஐந்து தக்பீர்களும் சொல்லப்படும்.
குத்பா : (பிரசங்கம்) தொழுகைக்குப் பின் நிறைவேற்றப்படும்.
பெருநாள் தினத்தில் செய்ய வேண்டிய விரும்பத்தக்க
செயல்கள்
1.குளித்தல், சிறந்த ஆடைகளை அணிதல்.
2.நோன்புப் பெருநாள்; தினமன்று சில பேரீத்த பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிட்டு
விட்டு தொழுகைக்கு செல்லுதல் சுன்னத்தாகும். ஹஜ்ஜூப் பொருநாள் தினத்தில் தொழுகைக்கு
பின்னர் சாப்பிடுவது சிறந்ததாகும்.
3.திடலில் தொழுவது நபி வழியாகும். மேலும் தொழுகைக்குப் போன வழியில்
அல்லாது வேறு வழியில் திரும்பி வருவதும், சுன்னதாகும்.
4.தக்பீர் சொல்வது விரும்பத்தக்கதாகும்.
الله
أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ألله أكبر ولله الحمد
குறிப்பு : கூட்டாக தக்பீர் சொல்லல் கூடாது.
5.பெருநாள் தினங்களில் நோன்பு நோற்பது ஹறாமாகும். அதே போன்று அய்யாமு தஷ்ரீக்குடைய
(துல்ஹஜ் பிறை 11,12,13) நாட்களிலும் நோன்பு நோற்பது ஹறாமாகும்.
6.ஹஜ் பெருநாள் தினத்தில் உழுஹிய்யா கொடுத்தல்.
கிரகணத் தொழுகை
இது சூரிய, சந்திரக் கிரகணங்களின்
போது தொழப்படும் தொழுகையாகும். கிரகணம் ஆரம்பித்ததிலிருந்து அது நீங்கும் வரை உள்ள
நேரத்தில் இத்தொழுகை நிறைவேற்றப்படல் வேண்டும். அதற்குப் பின்னால் அதனை 'கழா'ச் செய்து தொழப்படமாட்டாது.
மக்கள் அறிவதற்கு முன் கிரகணம் நிகழ்ந்து முடிந்து விட்டால் அதற்காக தொழுவிக்கப்படவும்
மாட்டாது.
தொழும் முறை
இது இரண்டு ரக்அத்துக்களாக தொழப்படும்.
முதலாம் ரக்அத்தில் சூறதுல் ஃபாதிஹாவுடன் நீண்ட ஏதாவது ஒரு சூறா ஓதப்படும். பின்பு
நீண்ட நேரம் ருக்கூவிலிருந்து, 'ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்த்' எனக்கூறி நிலைக்கு
வந்து, மீண்டும் சூறத்துல்
ஃபாதிஹாவுடன் இன்னுமொரு நீண்ட சூறாவை ஓதி, ருக்கூவிற்குச் சென்று அதிலே நீண்ட நேரம் தாமதித்து, பின் 'ஸமிஅல்லாஹூ லிமன்
ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் பீஹி மில்அஸ்ஸமாவாதி வமில்அல்
அர்ழி வமில்அமாஷிஃத மின் ஷைஇன் பஃத்' எனக்கூறி நிலைக்கு வந்து, அதிலே அதிக நேரம்
தாமதித்து, பின்பு நீண்ட இரண்டு ஸுஜூதுகளையும்,அதற்கு மத்தியிலுள்ள இருப்பிலும் நீண்ட நேரம் தாமதித்து, இரு ஸுஜூதுகளிலும்
அதிக நேரம் துஆவில் ஈடுபட்ட பின்பு, இரண்டாம் ரக்அத்திற்காக நிலைக்கு வரவேண்டும். முதலாம்
ரக்அத்தில் இரண்டு ருகூஃக்கள், இரண்டு ஸுஜுதுகள் செய்ததைப் போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்துவிட்டு, அத்தஹிய்யாத் ஓதி, ஸலாம் கொடுக்க
வேண்டும்.
கிரகணம் முடிவதற்கு முன்பு தொழுது
முடிந்தால் நீண்ட நேரம் துஆவிலும், திக்ர்களிலும் ஈடுபடுவாரே ஒளிய மீண்டும் தொழவேண்டிய
தேவை இல்லை. தொழும் போது கிரகணம் முடிந்துவிட்டால் தொழுகையை இலேசாகச் சுருக்கி முடித்துக்
கொள்ள வேண்டும்.
மழைவேண்டித் தொழும் தொழுகை
அல்லாஹ்விடத்தில் தொழுகையின்
மூலம் மழையை வேண்டுவது ஒரு வணக்கமாகும். வரட்சி ஏற்பட்டு, மழை பொழியாவிடின்
இத்தொழுகையை நிறைவேற்றுவது சுன்னதாகும்.
தொழும் முறை
இது பெருநாள் தொழுகையைப் போன்று
இரண்டு ரக்அத்துக்களாக நிறைவேற்றப்படும். ஒரு முஸ்லிம் ஜமாத்தாகத் தொழுது, அல்லாஹ்விடம் மழை
வேண்டிப் பிரார்த்திக்கலாம். அல்லது ஜும்ஆப் பிரசங்கத்தில் துஆ கேட்கலாம். அல்லது தொழுகையோ, பிரசங்கமோ இன்றி
துஆக் கேட்கலாம்.
துஆவின் இறுதியில் கிப்லாவை
முன்னோக்கி அவரின் போர்வையை வலது புறத்தை இடதாகவும் இடது புறத்தை வாலதாகவும் திருப்புவது
சுன்னத் ஆகும்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் ன அறிவித்தார்கள். நபி ள அவர்கள் மழை வேண்டி(த் தொழும்
திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
(ஆதாரம் - புஹாரி : 960)
இதன் போது மனிதர்களுக்கு பாவமன்னிப்பு
தேடுமாறும், பாவங்களிலிருந்து தவிர்ந்து நடக்குமாறும் இமாம் உபதேசம் செய்வார்.
நபி ள அவர்கள் மழையைக் காணும்போது : (اللّهُمَّ
صَيِّباً نَافِعاً) பயனுள்ள
மழையாக (ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள். (ஆதாரம் - புஹாரி : 1032)
பெரு மழையால் பாதைகள் துண்டிக்கப்பட்டால் பிரார்த்திப்பது
ஒருவர் நபி ள அவர்களிடம் வந்து
'கால்நடைகள் அழிந்துவிட்டன.
பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி ள
அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது.
பின்னர் ஒருவர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன.
கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி ள அவர்கள்
اللَّهُمَّ
حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا اللَّهُمَّ عَلَى رُءُوسِ الجِبَالِ وَالآكَامِ،
وَبُطُونِ الأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ»، فَانْجَابَتْ عَنِ المَدِينَةِ
انْجِيَابَ الثَّوْبِ
பொருள் : 'யா அல்லாஹ் இம் மழையை எமக்கு பாதகமில்லாமல் சாதகமாக ஆக்குவாயாக, இறைவா! மணற்குன்றுகளின்
மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்று பிரார்த்தனை
செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது'. (ஆதாரம் - புஹாரி
: 1017)
'அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! இன்ஷா அல்லாஹ்
எமது வாழ்வியல் வழிகாட்டி 'முன்றாம் தரத்தில்' அடுத்த விடயங்களை
கற்போம்'
- முற்றும் -
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.