குத்பா - (2020/06/12)
இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்)
குத்பா நிகழ்த்தியவர்: கலாநிதி. அஷ்ஷைக் அப்துல்லாஹ் இப்னு அவ்வாத் அல்ஜுஹனி
இன்றயை குத்பாவிலிருந்து...
ஆரம்பமாக இமாமவர்கள் முஸ்லீம்கள் அனைவரையும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும் அவனை நன்கு வழிப்படுமாறும் அவன் விலக்கியவற்றை விட்டும் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் உபதேசம் செய்தார்.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். (அல்குர்ஆன்: 3:102)
நிச்சயமாக வார்த்தைகளில் சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வார்த்தையாகும். அல்லாஹ்வை நீங்கள் உளப்பூர்வமாக விரும்புங்கள். அல்லாஹ்வின் வார்த்தையை ஓதுவதை, அவனை நினைவுபடுத்துவதை விட்டும் சடைவடைந்து விட வேண்டாம். உங்களின் உள்ளங்கள் இருகி விட வேண்டாம். அல்லஹ்வை வணங்குங்கள். அவனோடு யாரையும் கூட்டுச் சேர்க்காதீர்கள். அவனை பயப்பட வேண்டிய முறைப்படி பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவனைப் பற்றி கூறுகின்ற விடயங்களில் உண்மையாக இருங்கள். யாருடைய நோக்கம் மறுமை வாழ்வாக இருக்கிறதோ அவர்களை அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவர்களின் உள்ளங்களில் போதும் என்ற தன்மையை ஏற்படுத்துவான். உலகமும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து வரும். யாருடைய இலக்கு உலகமாக இருக்கிறதோ அவரின் காரியங்களை அல்லாஹ் சிதறடித்து விடுவான். வறுமையை அவரின் கண்முன் காட்டுவான். அல்லாஹ் உலகத்தில் அவருக்கு எதை நாடினானோ அதனையே பெற்றுக்கொள்வார்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உலகத்தை சோதனையாக ஆக்கி இருக்கிறான். மறுமையை இறுதியான தங்குமிடமாக ஆக்கி இருக்கிறான். மறுமையில் நன்மையை பெற்றுக்கொள்வதற்காக உலக சோதனையை காரணமாக ஆக்கி இருக்கிறான். மறுமையின் நன்மையை உலக சோதனைக்கு பகரமாக ஏற்படுத்தி இருக்கிறான். அல்லாஹ் கொடுப்பதத்திற்காக வேண்டி எடுக்கிறான். கூலி கொடுப்பதற்காக வேண்டி சோதிக்கிறான். நிச்சயமாக அந்த சோதனை வேகமாக சென்று விடும்.
நிச்சயமாக இந்த உபதேசங்கள் சங்கையானதாகும், பெறுமதி வாய்ந்ததாகும். அல்லாஹ்வை பற்றிய அச்சம்தான் இறுதி வரை மிஞ்சும். அது அல்லாத சகலதும் அழிந்து விடும். அல்லாஹ்வை வழிப்படும் இறைநேசர்களை அவன் கண்ணியப்படுத்துகிறான். பாவம் செய்யும் அவனது எதிரிகளை வழிதவறச் செய்கிறான். அல்லஹ்வின் அடியானே! இறைவனை அஞ்சிக்கொள், அவனை சந்திக்கும் வரை அதிலே உறுதியாக இரு. அதிலே இறுதியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய். உனது தவறுகளை அவன் மன்னிப்பான். நலவுகளையும் பரகத்துகளையும் உன்னிடத்தில் கொண்டுவருவான். பாவங்கள் செய்வதை எச்சரிக்கை செய்கிறேன். நிச்சயமாக அது அல்லாஹ்வின் கோபத்தையும் அவனையும் தண்டனையும் இறங்க காரணமாக ஆகிவிடும். அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனையையும் விட்டு நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.
நிச்சயமாக ஒரு முஸ்லிம் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகளார் மீது ஸலவாத் சொல்வது கடமையாகும். அல்லஹ்வை மகிழ்ச்சியான நேரங்களில் நினைவு கூர்வதை விட்டுவிட்டு துன்பமான நிலைமைகளில் மாத்திரம் நினைவு கூர்வது கூடாது.
முற்றும்...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.