புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்து லில்லாஹ்... சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ) அவர்கள் மீதும் அவர்களுடைய உம்மத்தின் மீதும் உண்டாவதாக...
இறைவனின் கிருபையால் இந்த வருடமும் ரமழான் மாதத்தை அடைய இருக்கிறோம் ( இன்ஷா அல்லாஹ் ). சென்ற ரமழானில் நம்மோடு இருந்த பலர் தற்போது இல்லாது விட்டாலும் தமக்கு அந்த மாதத்தை அடைகின்ற பாக்கியம் கிடைக்கலாம். எனவே இந்த மாதத்தை பயனுள்ள முறையில் கழிப்பதன் மூலம் பாக்கியம் பெற்ற மக்களாக மாறமுடியும்.
ரமழான் சங்கையான மாதம், குர்ஆன் அருளப்பட்ட மாதம், செய்கின்ற அமல்களுக்கு பல மடங்கு கூலிகள் வழங்கப்பட்டு மனிதனை புனிதனாக்கும் மாதம், சைத்தான் விலங்கிடப்பட்டு நரகத்தின் வாயில்கள் இழுத்து மூடப்படுகின்ற மாதம், சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்ற மாதம், நோன்பு நோற்று அதன் இரவுகளில் நின்று வணங்குவதன் மூலம் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.
இந்த மாதத்தின் உயரிய நோக்கம் இறையச்சம் உடைய மக்களாக மாறவேண்டும், அவ்வாறு மாறிய நாம் ஏனைய காலங்களிலும் இறையச்சத்தோடு வாழவேண்டும்.
நபி ( ஸல் ) அவர்கள் ரமழான் மாதம் வந்தால் சஹாபாக்களுக்கு நற்செய்தி கூறி அவர்களை வணக்க வழிபாடுகளில் ஈடுபட தூண்டுவார்கள். தனது ஆடையை இருக கட்டி இரா வணக்கங்களில் ஈடுபடுவர்கள், அதன்பால் தனது மனைவிமார்களையும் தட்டியழுப்புவார்கள். குறிப்பாக இறுதிப்பத்தை அடைந்தால் அதிகம் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்கள், குர்ஆனை ஓதுவர்கள், வீசும் புயல் கற்றை விட அதிகமாக தர்மம் செய்வார்கள்.
அருள் மழை பொழிந்த இந்த மாதத்தை அடைந்த நாம் வழமையாக செய்கின்ற நல்லமல்களை விட ஒரு படி மேல் ஏறி வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். குறிப்பாக :
ஐவேளை தொழுகைகளை ஜமாத்தோடு நிறைவேற்றல்.
இரவுத் தொழுகை, முன் பின், ஏனைய சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றல்.
காலை மாலை, சந்தர்ப்ப துஆக்களை தினம்தோறும் ஓதிவரல் .
அதிகம் அதிகமாக இறைவனிம் பிரார்த்தித்தல், இஸ்திஹ்பார் செய்தல்.
பெற்றோருக்கு நல்ல முறையில் உபகாரம் செய்தல், குடும்ப உறவுகளை பேணி நடத்தல்.
ஏழை எளியோருக்கு உதவுதல், அதிகமாக தான தர்மங்கள் செய்தல்.
அநியாயம், களவு, பொய், புறம் பேசுதல், பாவமான காரியங்களை விட்டும் ஒதுங்கிக்கொள்லல்.
அதிகம் அதிகமாக குர்ஆனை ஓதுதல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல்.
வீணான கேளிக்கைகளை விட்டும் தவிர்ந்து நடத்தல். நேரத்தை ஒழுங்கான முறையில் பேணி நடத்தல்.
குறிப்பாக நாவை பேணி நடத்தல் வேண்டும், இல்லையனில் உண்ண உணவிருந்தும் பருக பானமிருந்தும் நாம் பசித்து இருந்ததற்கும் தாகித்து இருந்ததற்கும் எந்தவித பயனுமில்லை. யாராவது ஏசினாலும் தான் ஒரு நோன்பாளி என்று பொறுமையாக இருந்து கொள்ளவேண்டும்.
ஆகவே இந்த ரமழான் மாதத்தின் புனிதத்தை உணர்ந்து அந்த நாட்களில் நோன்பு நோற்று, அதன் இரவுகளில் நின்று வணங்கி, பயனுள்ள முறையில் கழித்து, ஈகை திருநாள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாட நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.