கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.



- இலங்கை மாணவர் ஒன்றியம் -

இன்றைய கால கட்டம் மனித உயிரினங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான காலகட்டமாக மாறியுள்ளது. 2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து வரலாற்றை புறட்டிப் போடும் அளவிற்கு உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இன்றும் அதன் தாக்கம் உலகநாடுகள் பூராகவும் வியாபித்துள்ளது.

   
    Covid – 19 என்ற பெயரில் அழைக்கப்படும்  Corona தொற்று நோய் வைரஸ் கிருமி என்ற ஒன்று உலக மக்களை ஆட்டி வைப்பதை பார்க்கின்றோம். உலக சுகாதார ஸ்தாபனம் உயிராபத்தான ஓர் நோயாக Corona virus ஐ அறிவித்துள்ளது.  சீனாவின் வுஹான் மாநிலத்தில் தோற்றம் பெற்றதாக சொல்லப்படும் இந் நோய்கிருமி இன்று சுமார் 130 இற்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.  12,000 இற்கும் அதிகமானோர்  இதனால் இறந்திருக்கின்றார்கள்.

    
ரஷ்யா, இத்தாலி, இங்கிலாந்து, அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை  ஆட்டங்கான வைத்துள்ளதோடு உலக பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளன.  எங்கும், எதிலும் அச்சம் நிறைந்ததாக மக்கள் தமது அன்றாட வாழ்வை கழித்து வருகின்றனர்.   பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பொதுவிடுமுறைகளை பல நாட்டு அரசாங்கங்கள் அறிவித்துள்ளன. பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு கல்வியல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமாகியுள்ளன. பொதுச் சந்தைகள், மார்க்கெட்களில் பொருட்கள் காலியாகி சர்வதேச ரீதியில் பஞ்சம் ஏற்படுமோ என்ற நிலையில் உலகமே ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு செக்கனையும் பீதியில் கழிக்கின்றது.

    Corona virus இல் இருந்து மக்களை பாதுகாக்க பன்நாட்டு அரசாங்கங்கள்  பொதுமக்களை பின்பற்றி நடக்குமாறு பல அறிவிறுத்தல்களை வழங்கியுள்ளனர்.  எமது தாய் நாடான இலங்கையிலும் கூட கௌரவ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலமையிலான அரசாங்கம் Corona virus இற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மக்களை பாதுகாத்து Corona virus  இற்கு எதிராக  பாதுகாப்பு நடவடிக்கைகளில்  24 மணி நேரமும்  களப்பணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    இலங்கை சுகாதார அமைச்சு, இடர் முகாமைத்துவ பணியகம், இலங்கை பாதுகாப்பு அமைப்பு, போலிஸ், இராணுவம் என்பன மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி Corona virus அற்ற இலங்கையாக மாற்றுவதற்கு தமது உயிரையும் துச்சமென மதித்து  இன்று  பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்ண உணவின்றி போதிய தூக்கமின்றி இரவுபகலாக பாடுபடும் பாதுகாப்பு துறையினருக்கு நாட்டு மக்களாகிய நாம் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும்.

    Corona virus ஆனது  மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதன் மூலமாக, கைலாகு, கட்டிப்பிடித்தல்,  விரல்களால் வாய், மூக்கை  தொடுதல் போன்ற இன்னும் பல செயற்பாடுகள் மூலம்  ஏனையவர்களுக்கு தாவுகின்ற கிருமியாகும். இதன் காரணமாக Corona virus  ஒருவரது உடலில் நுழைந்து 14 நாட்கள் அல்லது அதற்கு பின்னரான காலங்களிலேயே செயற்பட ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக Corona virus தொற்றுக்கு ஆளான ஒருவருடன் தொடர்பாக இருக்கும் பிள்ளைகள், மனைவி, பெற்றோர், உறவினர், கடைக்காரர், சந்தை வியாபாரி, உணவகம் என அவர் தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் தொற்றுக்குள்ளாகி அவர்கள் மூலம் விரித்தியடைந்து செல்வதை அவதானிக்கலாம். (இது தொடர்பான பூரண அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதை கவனிக்கவும்)

    
இப்படியான பரவலாக்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நோய்த் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இப்படியான Corona virus தொற்றை கட்டுப்படுத்த இப்போதுள்ள ஒரே வழி மக்கள் ஒன்று கூடுவதை தற்போதைக்கு தடுத்து நிறுத்துவதாகும். அந்த அடிப்படையில் நாட்டில் ஊரடங்கு போடப்பட்டு மக்கள் மிக மிக அத்தியவசியத் தேவைகளை தவிர வேறு எதற்கும் வெளியிறங்கக் கூடாது என அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளது.


கோரோனா ஒரு சாமனா?

    Corona virus இன் விபரீதம் தெரியாத சிலர் இன்று அரசாங்கம் விடுத்துள்ள சட்டத்திற்கு கட்டுப்படாமல் பாதுகாப்பு பிரிவினரை சங்கடத்திற்கு உள்ளாக்குவதை பார்க்கின்றோம். இதன் காரணமாக தேவையுள்ள கற்பிணி பெண்கள், அவசர நோயாளிகள் பலர் கஷ்டங்களுக்கு ஆளாகின்றனர்.  பாதுகாப்பு படையினரை கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். தொல்லை தாங்காமல் சில பகுதியில் பாதுகாப்பினர் பலரை நையப்புடைத்தும் உள்ளனர். 

    இப்படியான போக்கு நம் தேசத்திற்கு உகந்த ஒன்று கிடையாது. நாட்டை நேசிக்கும்  ஒரு குடிமகன் நாட்டு சட்டத்தை மதிப்பது அவசியமாகும். நமது பாதுக்காப்பிற்காகவே இப்பாதுகாப்பு நடவடிக்கை என்பதை புரிய வேண்டும்.  வீடுகளிலே தங்கி நின்று  Corona virus  வராமல் போராட வேண்டும்.  அதுவே இப்போதைக்கு நாம் எமது பாதுகாப்பிற்கு செய்யும் தற்காப்பாகும்.

    இதல்லாம் புரியாத இளைஞர்கள்  இவற்றை உதாசீனம் செய்வதை பார்க்கிறோம்.  ஊரடங்கின் போது அதற்கு மீறியவர்கள் சுமார் 800 பேர் நாடுபூராகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். Corona virus ஐ தடுப்பதா? அல்லது இப்படியான காவாலிகளை தடுப்பதா? என்ற  பாதுகாப்பு பிரிவினரின்  அங்கலாய்ப்பையும், அவர்கள் பக்க நியாயங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்களை பெற்றோர்கள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். இல்லாது போனால் நாளை உங்கள் மகன் மூலம் நீங்களும் Corona virus தொற்றுக்கு ஆளாக நேரிடும். உங்கள் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சையளிப்பட்டு  உங்கள் இயல்பு நிலையே பாதிப்புக்குள்ளாக வேண்டி வரும்.  ஒருவர் செய்யும் இந்த வேலையால் சுகாதாரத்துறை, பாதுகாப்புத்துறை, பொதுமக்கள் என பலரும் அசௌகரியங்களுக்கு ஆளாவதை நாம் உணர வேண்டும்.

    பெற்றோர்களே உங்கள் பிள்கைள் விடயத்தில், உங்கள் உறவுகள் விடயத்தில்  கவனயீனமாக இருந்தால் நாளை சட்டம் உங்களை இருகரம் கொண்டு அடக்குகின்ற போது  பொதுச் சட்டத்திற்கு மாறு செய்த விடயத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கதியாக நிற்க வேண்டி வரும் என்பதை புரிந்து செயற்படுங்கள். முடியுமான வரை  அரசாங்கத்திற்கு பக்கபலமாய் செயற்படுங்கள்.


ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நாம் எப்படி செயற்படுவது?

    வீடுகளில் நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள  அமைதியாக இருப்பது அவசியமாகும். அதனால் ஏற்படும் நன்மைகளை மேலே சுருக்கமாக பார்வையிட்டோம்.  இதனால் தேசிய பாதுகாப்பிற்கு எமது ஒத்துழைப்பை வழங்கி, Corona virus அற்ற நாடாக இலங்கையை மாற்ற கைகோர்க்க புறப்படுவோம். அதே போன்று இப்படியான ஊரடங்கு காலத்தில் குடும்பங்களோடு சங்கமித்த நாம் எமது மார்க்கம் கூறும் வழிகாட்டல்களை  கடைப்பிடித்தாலே அனைத்து அம்சங்களும் சரிவர நடைமுறைக்கு வரும். இப்படியான காலங்களில் பின்வரும் செயற்பாடுகளை நம் பின்பற்றி செயற்படுவோம்.


01.    ஜமாஅத்தாக தொழுகைகளை நிறைவேற்றலாம்.

இப்படியான சூழ்நிலைகளில்  வீட்டில் தொழுவதற்கு மார்க்கம் அனுமதித்துள்ளதை பார்க்கலாம். வீட்டில் மனைவி மக்கள் அனைவரும் ஐவேளைத் தொழுகைகளையும் ஜமாஅத்தாக நிறைவேற்றலாம்.  இதன் மூலம் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் நிறைவேற்றப்படுவதோடு, அதன் மூலம் அல்லாஹ்வின் ரஹ்மத்தும், ஸகீனத் என்ற அமைதியும் எமது குடும்பத்தார் மீது ஏற்படுகின்றது.

02.    குர்ஆன் ஓதுவதையும், மனனம் செய்வதிலும் எம்மை ஈடுபடுத்தலாம்

வீட்டில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் குர்ஆனை மன்னம் செய்ய, அல்குர்ஆனை ஓத இது மிகச் சிறந்த சந்தர்ப்பங்களாகும். இப்படியான செயற்பாடுகள் எம்மை Corona virus போன்ற கொடிய நோய்களிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பை ஏற்படுத்தித்தரும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கென கால நேரங்களை வகுக்கலாம். அதன் படி சிறிய அத்தியாயங்களை கூட நாம் மீட்டல் செய்து கொள்ளலாம்.

03.    இஸ்லாமிய  நூற்களை கற்கலாம்.

மாரக்க அறிவின்மையால் எமது சமூதாயம் அண்மைக்காலமாக பல நெருக்குவாரங்களுக்குள் ஆட்பட்டிருப்பதை அறிந்திருக்கிறோம். தவறாக ஒன்றை நோக்குவது, மார்க்கத்தில் முன்னோர்களது வழிகாட்டலை படிக்காமை போன்ற காரணங்களால் பலர் தவறாக வழிநாடாத்தப்படுகின்றனர். இந்த நிலைகளை நீக்கி மார்க்கத்தைமுறையாக கற்பதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகும். இப்படியான ஒன்றாக இதனை நாம் ஆக்கி இஸ்லாமிய விடயங்களை மிகச் சரியாக எடுத்துக் கூறும் பாடவிதானங்களைக் கற்க இவ்விடுமுறைகளை பயன்படுத்தலாம்.

04.    மனைவியோடு நேரங்களை செலவளிக்கலாம்.


நபியவர்கள் கூறினார்கள்   “உங்கள் மனைவிகளிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் ”
இதன் அடிப்படையில் கணவன், மனைவி ஆகியோர் இன்றைய காலத்தில் இரு துருவங்களாக காணப்படுகின்றனர். தற்போதுள்ள இயந்திர வாழ்க்கை கணவன்,மனைவிகளை பிள்ளைகளுக்காக மாத்திரமும், பணம் சம்பாதிக்க மாத்திரமும் மாற்றியுள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அன்பு, பரஸ்பரம், காதல் என்பன மங்கிப் போய்யுள்ளன. இருவரும் மனம் விட்டுப் பேசி பல நாட்கள் கடந்து விட்ட எண்ணம் அவர்களிடம் தோன்றியுள்ளது. விட்டுக் கொடுப்பு, ஊடல் ஆகிய உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு விட்டன. எனவே இப்படியான சந்தர்ப்பங்களில் எமது உறவுகளை புத்துயிராக்க நல்ல சந்தர்ப்பங்களாக பயன்படுத்தலாம்.

05.    பாடசாலைப் பாடங்களை மீட்டுவதற்கு இவ்விடுமுறைகளை பயன்படுத்தலாம்.

06.    வீட்டுச் சூழலை பெற்றோரும், பிள்ளைகளும் சேர்ந்து சுத்தமாக வைத்திருக்க சிரமதானங்களில் ஈடுபடலாம்.



எனவே மேலுள்ள விடயங்கள் போன்று பல விடயங்கள் உள்ளன. அவைகளை நாம் எமது சக்திக்குட்பட்ட வரை  நிறைவேற்றி அரசாங்கம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை வீடுகளில் இருந்து எம்மை ஆட்பரிக்கும்  Corona virus இல் இருந்தும் ஏனைய பீடைகளிலும் இருந்தும் எம்மை தற்காத்துக் கொள்வதோடு எமக்கு பாதுகாப்பளிக்கும் பாதுகாப்பு பிரிவினர்களுக்கு உணவுகள், குளிர்பானங்கள், தண்ணீர்கள் வழங்கி அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களை கௌரவித்து எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வோம். அதற்கு அல்லாஹூத்தஆலா அருள்பாலிப்பானாக! ஆமின்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget