நாளும் ஒரு நபி மொழி 19 || Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA


19 عَنْ أَنَسٍ  عَنِ النَّبيِّ  قَالَ: ' لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ'. صحيح البخاري رقم الحديث 13 وصحيح مسلم رقم الحديث 71- (45) واللفظ للبخاري.



(19) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

ஆதாரம் : புஹாரி : 13, முஸ்லிம் : 45 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

(இந்நபிமொழியின் அறிவிப்பாளர் பற்றி 2ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)



ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள விருப்பம் என்பது சுயநினைவுடன் ஏற்படும் விருப்பமாகும். மாறாக இயற்கையானதோ அல்லது பலவந்தமாக ஏற்படுத்திக்கொண்ட விருப்பமோ அல்ல.

(2) ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை விரும்புவதற்கான அடையாளங்களிலுள்ளது அவனுக்கு ஈருலகிலும் பயன்தரக்கூடியதை காட்டிக் கொடுப்பதும், அவனை நோவினை செய்யாமலிருப்பதுமாகும்.

(3) ஒரு முஸ்லிமை அவனது அறிவியல், சமூக நிலைக்கேற்ப மதிப்பதை இந்நபிமொழி தூண்டுகிறது.

(4) பிறர் தனக்கு செய்ய விரும்பாத ஒன்றை ஒரு முஸ்லிம் ஒருபோதும் அடுத்தவர்களுக்குச் செய்யக்கூடாது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget