- ஸாஜிதீன் மஃரூப் -
எமது அல் - இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இருந்து கலைமானி, முதுமானி போன்ற பட்டப்படிப்புகளை முடித்துவிட்டுச் செல்லும் மாணவர்களான அஹ்மத் அப்பாஸி, நிம்ரான் ஷாபிஈ, ரஸ்லான் நூரி ஆகியோர்க்கான 9வது விடுகை விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் 08-02-2019 அன்று ரியாத் மாநகரில் அமைந்துள்ள ரப்வா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. எமது ஒன்றியத்தின் தலைவர் மௌலவி றிஸ்மி அப்பாஸி (PhD Reading) தலைமையில் இரவு 08.30 இற்கு ஆரம்பமான இந் நிகழ்வில் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அழைப்பாளர் மப்ஹூம் ( பஹ்ஜி ) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
தொடர்ந்து இந் நிகழ்விற்கான வரவேற்புரையினை எமது பல்கலைக்கழகத்தில் முதுமானிப்பட்டப்படிப்பின் இறுதியாண்டில் கற்கும் இல்ஹாம் கபூரி அவர்கள் ஆற்றினார்கள். அதனை அடுத்து தலைமையுரை தலைவர் றிஸ்மி அப்பாஸி (PhD Reading) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
அவ்வுரையில் எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்பான விடயங்களை மீட்டியதோடு, விழாவின் கதாநாயகர்கள் நாட்டில் தஃவாவில் ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தி அவர்களுக்கு நல்லுபதேசம் வழங்கி தனதுரையை நிறைவு செய்தார்.
எமது மாணவர் ஒன்றிய உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், சாஜுதீன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந் நிகழ்வில் அடுத்த நிகழ்வாக விழாவின் கதாநாயகர்களின் உரை இடம் பெற நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பிரகாரம் விழா கதாநாயகர்களது வாழ்கை வரலாற்றை சுருக்கமான முறையில் கவிதைகளாக வடித்து பின்னனி குரல் வழங்கி அவற்றை படக்கோர்ப்பு செய்து சகோதரர் வஸீம் ஹூஸைன் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அன்வாரி ஆகியோர் திரையிட்டிருந்தனர்.
பின்னர் அஹ்மத், நிம்ரான், ரஸ்லான் ஆகியோர் தங்களது பல்கலைகழக நாட்களை எம்மோடு பகிர்ந்து கொண்டனர். ஆரம்பம் முதல் தற்போதைய நிகழ்வுவரை இங்கு கடந்து விட்ட நாட்களை மனவேதனையோடு எம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.
அடுத்து எமது மாணவர் ஒன்றியம் தொடர்பான விபரணத் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் 15 வருடம் பூர்த்தியடைந்துள்ள எமது மாணவர் ஒன்றியத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் விபரிக்கப்பட்டன.
மன்னர் ஸூஊத் பல்கலைக்கழக மாணவர்கள், ரியாத் தமிழ் தஃவா ஒன்றிய உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் அடுத்ததாக பிரதம அதியின் உரை இடம் பெற்றது. அதில் மார்க்க கல்வியை கற்றவர்களது முக்கியத்துவம், இலங்கையில் அவர்கள் தஃவா செய்வதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து விழா கதாநாயகர்களுக்கான நினைவுச் சின்னங்கள் கௌரவ அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதியாக சகோதரர் றிஸ்வான் ஹாமி (M.A Reading) அவர்களின் நன்றியுரையுடன் இரவு 10:00 மணியளவில் இவ் விழா இனிதே நிறைவு பெற்றது.

கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.