வெலிகம அஹ்மத் அப்பாஸி ஹதீஸ் துறையில் முதுமானி பட்டப்படிப்பை பூர்த்தி




(வஸீம் ஹூஸைன்)

தென்னிலங்கை மாத்தறை மாவட்ட வெலிகமையைச் சேர்ந்த மௌலவி அஹ்மத் அப்பாஸி ஹதீஸ் துறையில் முதுமானிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

ஸஊதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இமாம் முஹம்மத் இப்னு ஸூஊத் இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் இன்று அவரது ஆய்வறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வெலிமக எ. ஜ. முஹம்மத், யும்னா ஆகியோரின் புதல்வரான இவர் தனது ஆரம்ப கல்வியை வெலிகம அறபா கனிஷ்ட வித்தியாலயத்தில் கற்றார். அதன் பின்னர் மார்க்க கல்வியை கற்க வேண்டும் என நோக்கில் காலி இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியில் சேர்ந்து இஸ்லாமிய கற்கைகளை முறையாக கற்றார். 

வெலிகமையை சேர்ந்த மௌலவி பத்ஹூர் ரஹ்மான் அவர்களின் மருமகனான இவர் தனது மார்க்க அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள அல் இமாம் பல்கலைக் கழகத்திற்கு 2005 ம் ஆண்டளவில் நுழைந்தார்.

இங்கு அரபு போதனாசிரியர் கற்கை நெறியில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்து, மார்க்க அடிப்படை பிரிவில் தனது கலைமாணி கற்கை நெறியையும் பூர்த்தி செய்தார். மார்க்க அடிப்படைப்பிரிவில் ஹதீஸ் துறையில் சிறப்புச் சித்தி பெற்ற இவர்கள் 2011 ம் ஆண்டு தனது முதுமாணி கற்கை நெறியை அதே துறையில் தொடர்ந்தார்.

மிகச் சிறந்த நற்குணமும், அளவிற்கே அதிகமான பொறுமையும், மிகச் சிறந்த மார்க்க அறிவும் கொண்டவரான இவர்கள் ஹதீஸ் துறையில் " நூஹ் நபி அவர்கள் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் " என்ற தலைப்பில் சுமார் 600 பக்கங்களை கொண்ட ஆய்வு நூலை சமர்ப்பித்து இன்று அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இமாம் பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் துறை விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் கலாநிதி பஹ்த் அல் ஆமிர் அவர்களது மேற்பார்வையில் செய்யப்பட்ட இந் நூலை பேராசிரியர் அலி ஸப்ன், கலாநிதி ஸயீத் ஸமாஹா ஆகியோரால் விவாதத்திற்கு உப்படுத்தி, இந்த நூலுக்கு விஷேட திறமைச் சித்தியில் முதல் தரத்தை பெறுபேறாக வழங்கினர்.

இதன் போது உரையாற்றிய அவர்கள் " எமது மாணவன் அஹ்மத் இப்னு முஹம்மத் ஜமால்தீன் எழுதிய " நூஹ் நபி அவர்கள் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் " என்ற இந்நூல் சமகாலத்திற்கு அவசியம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது. நூஹ் நபி தொடர்பாக வந்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களையும், ழஈபான ஹதீஸ்களையும், மவ்ழுஃ வான ஹதீஸ்களையும் அதன் தரத்தை உரசி மிக அழகான முறையில் தொகுத்துள்ளார். நூஹ் நபி தொடர்பான ஒட்டு மொத்த செய்திகளையும் தொகுத்து ஆய்வு செய்த இவரின் முன்னெடுப்பு அளப்பரியது. இதன் மூலம் இஸ்லாமிய சமூகம் பெரிய அளவிலான பிரயோசனங்களை பெறுவதில் ஐயமில்லை " என குறிப்பிட்டார்கள்.

அஹ்மத் அப்பாஸி அவர்கள் சிறந்த ஆளுமை மிக்க ஒருவர். எமது பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் பல உப குழுக்களுக்கு தலைமை தாங்கியவர். குறிப்பாக எமது வெளியீடான இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டி நூலின் நூலாக்க குழுத் தலைவரும் கூட. அயராத அறிவுத் தேடல் இன்று அவரை உச்சம் தொட வைத்துள்ளது.
யா அல்லாஹ் அவரது அறிவுத் தேடலில் வெற்றியை ஏற்படுத்துவாயாக! அவரது குடும்ப வாழ்வு, பெற்றோர், மனைவி, பிள்ளை , பொருளாதாரம் போன்றவைகளில் பரகத்தை ஏற்படுத்துவாயாக! அவர் கற்ற கல்வியை சமூதாயத்திற்கு பயனளிக்க கூடியதாக ஆக்குவாயாக! சமூகத்திற்கு பயன் கிடைக்கும் வகையில் அவரது மார்க்க அறிவை அனைத்து முறைகளிலும் பரப்புவதற்குரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவாயாக!

எமது பல்கலைக்கழக மாணவர் அஹ்மத் அப்பாஸி எம்.ஏ அவர்களுக்கு எமது இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.








கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget