- 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள்' -
(2) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; (வெறுப்பூட்டாதீர்கள்)".
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : புஹாரி : 69, முஸ்லிம் : 1734 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)
ஹதீஸ் அறிவிப்பாளர்:
அபூ ஹம்ஸா என்ற புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபிகளாரின் பணியாளர் என்று அழைக்கப்பட்;டார். ஹிஜ்ரத் நடைபெற 10 வருடங்களுக்கு முன்னர் மதீனாவில் பிறந்த இவர் சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்றார். பின்பு நபிகளாருடன் சேர்ந்து 10 வருடங்கள் அவர்களுக்கு சேவை புரிந்து, நபியவர்கள் மரணிக்கும் வரை கூடவே இருந்தார்கள். பின்பு திமஷ்க் (ஸிரியா) நகரத்திற்குச் சென்று, அங்கிருந்து பஸரா நோக்கிச் சென்றார்கள். நபிகளாரைத் தொட்டும் 2286 ஹதீஸ்களை அறிவித்ததன் மூலம் அதிக நபிமொழிகளை அறிவித்தவர்களில் ஒருவரானார். தனது 100வது வயதைத் தாண்டிய பின்னர் ஹிஜ்ரி 93ம் ஆண்டு பஸ்ராவில் காலமானார்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) அழைப்புப்பணி, பராமரித்தல், கற்றுக்கொடுத்தல், கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் இஸ்லாத்தின் வழிமுறை மென்மையாக நடந்து கொள்வதும், இலகுவாக்கிக் கொடுப்பதும், நற்செய்தி சொல்வதுமாகும்.
(2) இஸ்லாம் (மக்களை மார்க்கத்தை விட்டும்) தூரப்படுத்துவதையும், சிரமப்படுத்துவதையும் தடுக்கின்றது. கடுமையாக நடந்து கொள்ளாமலிருக்கவும் தூண்டுகிறது.
(3) கஷ்டங்களை நீக்குவது இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.