November 2018

(7) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப் பட்டு எழுந்து விட வேண்டாம்".

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
ஆதாரம் : புஹாரி : 674, முஸ்லிம் : 559 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

ஹதீஸ் அறிவிப்பாளர்:

அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் (ரலி) சிறந்த நபித்தோழராவார். இவர் பருவமடைய முன், தன் தந்தையுடனே இஸ்லாத்தை ஏற்று மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டவர். கந்தக் யுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார். எகிப்து, ஸிரியா, இராக், பஸரா, பாரசீகம் போன்ற இஸ்லாமிய பெரும்வெற்றிகளில் இவருக்கும் பங்குண்டு. இவர் அதிக துணிச்சலுள்ளவராக இருந்ததுடன், நபித்தோழர்களிலுள்ள பிரபல அறிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். நபிகளாரைத் தொட்டும் 2630 ஹதீஸ்களை அறிவித்திருக்கின்றார். வணக்கத்திலும் பேனுதலிலும் முன்னுதாரணம் கூறப்பட்டவர். தனது 86ம் வயதில் ஹிஜ்ரி 73ம் ஆண்டு மரணமடைந்தார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) மக்களின் சூழ்நிலைகளையும் நிலமைகளையும் கவனிப்பது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளிலுள்ளதாகும்.

(2) தொழுகையை மேற்கொள்ளும் போது, அதில் உள்ளச்சமும் அமைதியும் பேணப்படுவதற்காக வேறு வேலைகளில் ஈடுபடாமலிருப்பது மார்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும்.

(3) உணவு தயாராகியிருக்கும் போது அதை உட்கொள்ள விரும்புபவர் கூட்டுத்தொழுகையை விடுவதில் தவறில்லை.

-'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால்'-
(6) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான தொழுகை தவிர வேறு (தொழுகை) இல்லை".

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் : 710

(4, 5, 6 ஆகிய நபிமொழிகளின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) கடமையான தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும் போது, உபரியான தொழுகைகளில் ஈடுபடாமல், அக்கடமையான தொழுகையை நிறைவேற்றும்படி இந்நபிமொழி (எமக்குத்) தூண்டுகிறது.

(2) கடமையான தொழுகைகளை கூட்டாக ஆரம்பத்திலிருந்தே நிறைவேற்றுவது உபரியான தொழுகைகளில் ஈடபடுவதை விட முக்கியமானதாகும்.

(3) மார்க்க விடயங்களில் நபியைப் பின்பற்றுவது உண்மையான, சரியான இறைநம்பிக்கையின் அடயாளமாகும்.

- Assheikh JM. Hizbullah Anvari (B.com Reading) -
இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் சிறுவர் கடத்தல் சம்பவங்கள், சிறுவர் கொலைகள், குழு மோதல்கள் போன்ற இன்னோரன்ன துஷ்பிரயோகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினையில் அனைவரும் மூழ்கியிருப்பதாலோ என்னவோ இத் துஷ்பிரயோக செயற்பாடுகளை பெரிபடுத்துவதிலோ, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலோ பலர் ஆர்வம் இன்றி காணப்படுகின்றனர். ஊடகங்கள் கூட இதுவிடயத்தில் அலட்சியப்போக்கைக் கையாழ்வது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கின்றன. 

ஒரு சில மனோ இச்சையாளர்களின் செயற்பாடுகளினால் அப்பாவி சிறார்களும், கல்வி பயிலும் வாலிபர்களும் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றனர். துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வழி முறைகளும், அதனை மீறுவோருக்கான தண்டனைகளும் சட்டரீதியிலும், சமூக ரீதியிலும் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதிலும், நாட்டின் ஏதோ ஓர் மூலையில் ஓர் சிறுவனோ, கல்வி பயிலும் ஓர் வாலிபனோ துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்பதை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் அறிந்து, அதனை தடுப்பதற்கான உடனடிக்காரணி யாதென்பதைக் கண்டறிவதில் பெருமுனைப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது. 

கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களை விட இவ்வருட முதல் எட்டு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 318 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார். எட்டுமாத முடிவிலிருந்து இப்போது நாம் இருக்கும் நவம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தினுள் நாம் சமூகவலையத்தளங்கள் ஊடாகவே நிறைய சிறுவர் துஷ்பிரயோகங்களைப் பார்த்துவருகின்றோம். அவற்றையும் சேர்த்து அன்னளவாக எடை போட்டால் 350 ஆக இவ்வருடத்தின் முறைப்பாடுகள் உயரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. 

அவ்வாறே கடந்த ஆண்டின் புள்ளிவிபரப்படி 3 ஆயி­ரத்து 785 சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்றங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் 956 முறைப்­பா­டுகள் சிறு­வர்கள் மீதான வன்மையான தாக்­கு­தல்­க­ளா­கவும், 602 முறைப்­பா­டுகள் குழந்­தை­களின் கல்வி உரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும், 426 முறைப்­பா­டுகள் சிறு­வர்கள் பாலியல் துஷ்பிரயோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்பட்­டுள்­ளமை தொடர்­பிலும், 117 முறைப்­பா­டுகள் குழந்­தை­களை மிகவும் மோச­மான வகையில் பாலியல் வன்­கொ­டு­மை­களுக்கு உட்படுத்தி­யமை தொடர்­பிலும் 102 முறைப்­பா­டுகள் சிறு­வர்­களை வேலைக்கு அமர்த்தியமை குறித்தும், 47 முறைப்பாடுகள் சிறுவர் கடத்தல் சம்­ப­வங்களுடன் தொடர்புபட்டது எனவும் பதி­வா­கி­யுள்­ளன. கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் 350 முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதானது மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு முறைப்பாடுகளிலும் சராசரி விகித அதிகரிப்பைக் காட்டுகிறது. 

துஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் நமது உறவுக்காரனாக இல்லாதிருப்பினும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய அறிவு கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். சிறுவர்களின் உரிமைகள் என்ன? சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன? சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணிகள் எவை? இத் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்? போன்ற அறிவுடன் கூடிய விழிப்புணர்வு கட்டாயம் நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இன்று பாதிப்பிற்குள்ளானது ஏதோ ஓர் ஊரில், யாரோ ஓர் சிறுவனாக இருப்பினும் நாளை அது நம் குடும்பத்திற்கும் ஏற்படலாம். அப்போது நம்மையும், பாதிப்பிற்குள்ளான நமது சிறுவனையும் ஏதோ ஊர், யாரோ ஒரு சிறுவன் என பிறர் பார்த்திடக் கூடாது. அல்லாஹ் நம்மையும் நம் சிறார்களையும் பாதுகாப்பானாக.. 

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான அரசாங்க அங்கீகாரம் 

சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு, அது 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் 1991ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினாலும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் யாவை என்பதை ஆராய்ந்து அவற்றை இச்சபை அங்கீகரித்துள்ளது. பொதுவாக ஓர் நடுநிலைப் பெற்றோரால் தமது பிள்ளைகளுக்கு பிறருக்கு தீங்கிழைக்காத வகையில் எவையெல்லாம் கட்டாயம் கிடைக்க வேண்டுமென்ற ஆசை இருக்குமோ அவை அனைத்தும் சிறுவர்களின் உரிமைகளாகக் கொள்ளப்படும். 

சிறுவர் துஷபிரயோகத்தின் வடிவங்கள் 

சிறுவர் துஷ்பிரயோகமானது பல வடிவங்களில் அரங்கேற்றப்படுகின்றன. உடலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், பாலியல் ரீதி­யான துஷ்பி­ர­யோகம், உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், புறக்கணிப்பு ரீதி­யி­லான துஷ்பிரயோகம் என பல்­வேறு கோணங்­களில் சிறுவர்கள் துஷ்பிரயோ­கங்­க­ளுக்கு ஆளாக்­கப்­ப­டு­கின்­றனர். 

அடித்தல், காயப்படுத்தல், கடத்திச் செல்லல், அங்கங்களை சிதைத்தல், கொலை செய்தல் போன்றவற்றின் மூலம் நிகழக்கூடியவை உடலியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கருதப்படும். இது பெரும்பாலும் பெற்றோர்களினாலும், ஆசிரியர்களினாலும், பாதுகாவலர்களினாலும், அவர்களின் எதிரிகளினாலும் ஏற்படுகிறது. அளவுக்கு மீறிய உடலியல் துன்புருத்தல்கள் ஏற்படும் போது அச்சிறுவன் அதே கொடுமைகளை இன்னொருவருக்கு செய்ய வேண்டுமென்ற எண்ணத்திலே இருப்பான். பிள்ளைகளை அளவுக்கு மீறி அடித்து வளர்ப்பதால் அவர்களும் பெரிதாகி தமது பிள்ளைகளுக்கும், அல்லது தமது பொறுப்பிலுள்ள சகோதர சகோதரிகளுக்கும், அல்லது மாணவர்களுக்கும் அடி ஒன்றே மருந்து எனும் தியரியை கையிலெடுத்து செயற்பட இது வழிவகுக்குகிறது. 

பொது­வாக சிறு­வர்கள் சுய­மாக விளை­யா­டுதல், கற்றல், நாளாந்த கரு­மங்­களைச் செய்தல், ஒளிவு மறை­வின்றிப் பேசுதல், விருப்­பங்­களை வெளிப்­ப­டுத்­துதல், அறியாத விடயங்களை அறிந்­து­கொள்ள முய­லுதல், சுய­மாகச் சிந்­தித்தல், ஆராய்தல் போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்ற போது அவை பல­வந்­த­மாகத் தடுக்­கப்­ப­டு­மி­டத்து, உளவியல் ரீதி­யான தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­கு­வார்கள்.
இதனால் அவர்­களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்­ண­றிவு போன்ற உள நிலைகள் பாதிப்­ப­டையும். இது உளவியல் ரீதியான துஷ்பிரயோகமாக கொள்ளப்படுகிறது. அநேக பெற்றோர்கள் தமது ஆசைகளை பலவந்தமாக பிள்ளைகளின் உள்ளத்தில் திணிக்க முற்படுவதே இத்தகைய துஷ்பிரயோகம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. 

பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பது பாலியல் இச்­சைக்­காக சிறு­வர்­களைப் பயன்படுத்­து­வது மாத்­தி­ர­மின்றி சிறு­வர்­களை முறையற்ற விதத்தில் தொடுதல், வருடுதல், பொருத்­த­மற்ற பாலியல் சொற்­களைப் பயன்­ப­டுத்­துதல், பாலியல் தொந்த­ர­வு­களைக் கொடுத்தல், பாலியல் செயற்­பா­டு­களை பார்ப்­பதில் ஈடுபடுத்தல், ஆபாசப் படங்கள், புத்­த­கங்­களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்பா­டு­களில் சிறு­வர்­களை ஈடு­படச் செய்­வ­தா­னது பாலியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. இவைகள் பெற்றோரினதும், ஆசிரியர்களினதும், தமது பொறுப்புதாரிகளினதும் கண்காணிப்பை விட்டும் குறித்த சிறுவன் விலகும் போதும், தீய நண்பர்களுடன் சேரும் போதும் ஏற்படுகிறது. சில சமயங்களில் இத்தகைய பாலியல் செயற்பாடுகளை பெற்றோரிமிருந்து கூட சிறுவர்கள் கற்றுக்கொள்கின்றனர் என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலமாகவே ஏற்படுவதாக சமூகவியல் புள்ளிவிவர அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

உணர்ச்சி ரீதி­யான துஷ்­பி­ர­யோக­மென்­பது வெளிப்­ப­டை­யா­கவே மறுத்து விலக்குதல், தனி­மைப்­ப­டுத்தல், அவ­மா­னப்­ப­டுத்தல், பய­மு­றுத்தல், கெடுத்தல், சுரண்டிப்­பி­ழைத்தல், சூழலுடன் இடைத் தொடர்பை மேற்­கொள்ளும் சிறு­வர்­க­ளது பிர­யத்­த­னங்­க­ளுக்கு தண்டனை­ய­ளித்தல் போன்ற செயற்­பா­டுகள் உணர்ச்சி ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோக­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. இதுவும் சமூகத்தில் நாம் அன்றாடம் சங்கமிக்கும் சூழலில் ஏற்படுவதை கண்கூடாக காணமுடிகின்றது. 

அதே போல் ஒரு சிறு­வ­னுக்­கு­ரிய உடை, உணவு, சுகா­தாரம், பாது­காப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்­படைத் தேவைகள் மறுக்­கப்­ப­டு­கின்­ற­போது அச்சி­றுவன் புறக்க­ணிப்பு ரீயிலான துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளா­கின்றான். 

துஷ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணி 

மேற்குறிப்பிட்ட அனைத்து கோணங்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகும் சிறுவர்கள் காலப்போக்கில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தம்மை ஒரு இழிபிறவி என எண்ணி, தனக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க இனி யாரும் வரப்போவதில்லை எனும் எண்ணம் மேலோங்கி, நான் தான் அதை தட்டிக்கேட்க வேண்டும் எனும் தைரியமாக அது உருமாறி, நான் இதற்காக மேற்கொள்ளும் வழிகள் சமூகத்தில் சரியா தவறா என்று பார்க்காமல் தனக்கு சரியென தோன்றுகிறது என்ற முடிவை எடுத்து கலத்தில் இறங்குவதே இத் துஷ்பிரயோகங்கள் மேலும் வளர்ந்து செல்வதற்கான காரணியாகத் திகழ்கின்றன. 

தவறிழைக்கும் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் தான் பாதிக்கப்பட்டு, அசிங்கப்பட்டு, நொந்து நூலாகி, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சோக வரலாறுகளே அதிகம் இருக்கின்றன. இத்தகைய காரியங்களில் ஈடுபடுபவர்களை ஒரு வகை ஸைகோ என சமூகம் ஒதுக்கினாலும், அவர்கள் தமது பெற்றோர்களால், ஆசிரியர்களால், பொறுப்பாளர்களால் ஒழுங்காக நெறிப்படுத்தப்படவில்லை என்ற உண்மையை அநேகர் ஏற்க மறுக்கின்றனர். தாம் விட்ட தவறுகளை சரிசெய்ய பிள்ளைகளையும், மாணவர்களையும், தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்களையும் குற்றவாளிகளாக மாற்றுகின்றனர். சிலசமயங்களில் இவர்களின் தொந்தரவைத் தாங்காமல் பிள்ளைகளே வீட்டை விட்டு ஓடவும், பாடசாலையை துண்டித்திடவும் ஆயத்தமாகின்றனர். இவர்களே சுயநலமிக்க, மனோ இச்சையாளர்களான அந்த ஒரு சிலர். 

செய்ய வேண்டியது என்ன? 

மேற்குறிப்பிட்ட முறையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆலாகும் பிரஜைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் போன்றவர்கள் பிள்ளைகளுக்கு உடலியல் தொந்தரவுகளை அதிகம் கொடுக்காமல் இருக்க வேண்டும். வளர்ப்பதற்கு தேவையான கண்டிப்புக்கள் இருக்கவேண்டிய அதே வேளை அளவுக்கு அதிகமான அதட்டல்கள் இருக்கக்கூடாது. தனது சொந்தப்பிரச்சினைகளில் ஏற்படும் கோபங்களைக் கூட பிள்ளைகள் மேல் காட்டக்கூடாது. அவர்கள் சொல்லக்கூடியதை காது தாழ்த்திக் கேட்பதோடு, அவர்களின் திறமைகளுக்கும், ஆசாபாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமது ஆசைப்படி அவர்கள் வளர வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றியமைத்திட வேண்டும். இத்தகைய கொடுமைகளை அதிகம் சந்திக்கும் சிறுசுகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமது உறவினர்களாக இருப்பினும், உறவினர் அல்லாதவராக இருப்பினும் அவர்களுடன் பலகும் விதங்களையும், தமது உடம்பில் தொடுவது தவறு என இருக்கும் உறுப்புக்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். தீய சகவாசங்களை விட்டும் அவர்களை எச்சரிக்க வேண்டும். பிள்ளைகளைப் பாராட்டுதல், அவர்களை வாழ்த்துதல், பரிசுகளை வாங்கிக்கொடுத்தல் போன்றவற்றால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களை பயமுறுத்தி, அவமானப்படுத்திடக் கூடாது. அவ்களுக்கான உரிமைகளை சரிவர செய்திட வேண்டும். 

ஆக மொத்தத்தில் பொறுப்புள்ள தாயாகவும், நேர்மையான தந்தையாகவும் அவர்கள் முன்னிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். தனக்கான தலைசிறந்த வழிகாட்டி இவர்தான என தேர்ந்தெடுக்கும் வண்னம் அவர்களுக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பாதுகாப்பை எப்போதும் சிறந்த முறையில் வழங்கும் பாதுகாவளர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்களுக்காக மாறினால் மட்டமே உடலியல், உளவியல், உணர்வு, புறக்கணிப்பு போன்ற துஷ்பிரயோகங்களின் பல கோணங்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்து சமூகத்திற்கான சிறந்த பிரஜைகளை கொடுக்க முடியும். 

இதை இன்னொரு கோணத்தில் நோக்கினால் பாதிக்ப்பட்டு தவறுகள் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளை மேலும் மேலும் இக்குற்றங்களை செய்ய விடாது தடுக்கவும், ஏனைய சிறார்களை இவர்களின் பிடியிலிருந்து பாதுகாத்திடவும் இந்தத் தடுப்பு நட­வ­டிக்கைப் பணிகள் சமூகப் பணி­யாக கருதப்பட்டு சமூ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு பிர­ஜையும் இவை தொடர்பில் விழிப்புணர்வு பெறு­வ­துடன் சிறுவர் துஷ்பிரயோ­கங்­களை தடுப்­­பதை தமது பொறுப்­பாகவும் உணர வேண்டும். இந்த உணர்வுகள் வெறு­மனே வந்­த­டை­யாது. சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள அரச மற்றும் தன்­னார்வ தொண்டு நிறு­வன அதிகாரிகளும் செயற்­பாட்­டா­ளர்­களும் சமூ­கத்தின் ஒவ்­வொரு பிர­ஜை­யையும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்றால் என்ன? ஏன் ஏற்­ப­டு­கி­றது. இதற்­கான கார­ண­மென்ன, துஷ்பிரயோக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள். எத்தகையவர்களால் துஷ்­பி­ர­யோகம் ஏற்படுகி­றது. துஷ்­பி­ர­யோகச் செயற்பாடுகளிலிருந்து சிறு­வர்­களை எவ்­வாறு பாதுகாக்கலாம் அதற்­கான முறை­யான பொறி­மு­றைகள் எவை போன்ற பூரண அறிவை பெறு­வது அவ­சி­ய­மாகும். 

இவைகள் தூரநோக்குடன் கூடிய திட்டமிடல் விழிப்புணர்வாக இருப்பினும் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், பொறுப்பாளர்களையும் சார்ந்தது என்பதை யாரும் மறுத்திட முடியாது. சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளத்தில் தோன்றும் ஆவேசமும், துஷ்பிரயோகத்தினால் சிறுவர்களை இழந்தவர்கள் உள்ளத்தில் தோன்றும் ஆவேசமும், இத்தகைய பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க என்ன செய்யலாம் என நடுநிலையாக சிந்திக்கும் ஒருவரின் உள்ளத்தில் தோன்றும் வீரியமும் இயல்பாக வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளாகும். இவற்றை இஸ்லாம் குழந்தை வளர்ப்பு எனும் பகுதியில் ஆழமாக ஆய்வுசெய்துள்ளது. 

இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் சமூகத்தையும், சமூகத்தின் இளமொட்டுக்களையும் துஷ்பிரயோகங்களிலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் கைகளில் அவர்களை சேர்த்திடுவோம். தவறுசெய்தவர்களுக்கான முறையான தண்டனைகளை எவ்வித பாரபட்சமும் இன்றி பெற்றுத் தந்திட முனைப்புடன் செயற்படுவோம். இது போன்ற சிறுவர் துஷ்பிரயோக தவறுகள் இனியும் சமூகத்தில் தோன்றாமல் இருக்க பொறுப்பாளர்களாக இருக்கும் நாம், நம் பொறுப்புக்களை சமூகவியலை உணர்ந்து செயற்படுத்துவோம். அல்லாஹ்வே நம் அனைவருக்கும் துணைபுரியட்டும். 

“"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு தலைவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக!'' (அல்குர்ஆன் 25:74).

- தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதின் சட்டம் -

(5) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்".

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் : 282

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) குறைவான தேங்கிநிற்கும் நீரில் மலசலம் கழிக்கலாகாது என்று இந்நபிமொழி உணர்த்துகின்றது. ஆற்றுநீர் கடல்நீர் போன்றவற்றிற்கு இத்தடையில்லை.

(2) இஸ்லாம் அசுத்தங்களை நீக்கி, சுத்தத்தை விரும்பும் ஒரு மார்க்கமாகும்.

(3) மனிதவாழ்வு நிலைக்க நீர் இன்றியமையாததாகும். எனவே அதனைப் பேணிப் பாதுகாப்பதும், அதனை அசுத்தப்படுத்தும் அருவருக்கத்தக்க பொருட்களை விட்டும் பாதுகாப்பதும் அவசியமாகும்.

அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில்; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடாத்தப்படும் வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 17ம் வார வெற்றியாளர்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :

வாரம் 17ன் கேள்வியும் அதன் சரியான விடையும் :
கேள்வி:  ஈமான் எழுபதிற்கும்  மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது அதில் இறுதியானதை கூறுக.
விடை: பாதையில் மனிதனுக்கு தடங்கல் ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல்.

வாரம் 17ன் குலுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இரு வெற்றியாளர்களும் :

#01 ASF YESREEN | Naseeravilla,Horagoda,Thelijjawila.
#02 NUZLA NIYAS | 855, Galle Road, Katukurunda, Kalutara

வெற்றிபெற்ற இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரூபா பெறுமதியான ரீலோட் பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...

பாராட்டு பெறுவோர் :
MF NUSAIKA
FAIZA
MANARDHEEN
FAHEERA
FALIHA
A SATHATH
THANIYA
HAMEED
FATHIMA

alimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…

கேள்வி வாரம் 17 : 
# - ஈமான் எழுபதிற்கும்  மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது அதில் இறுதியானதை கூறுக.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) ஊடாக சென்று விடையளிக்கவும்...

விடைக்கான இணைப்புகள் : 
இணைப்பு 01 : | இஸ்லாம் வழியுருத்தும் சுகாதாரம் | As-sheikh AM Rasif (Shafei, Riyadhi) B.A. Hons |

இணைப்பு 02 : | உறவுகள் - ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் | Assheikh MA Mukram (Shafei, Riyadhi)

இணைப்பு 03 : | நாளும் ஒரு நபிமொழி - 01 || மொழியாக்கம் : Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

விடை அனுப்ப வேண்டிய கூகுள் போம் (google form) இணைப்பு 

போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :
01- இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

02- குறித்த கேள்விக்கான விடையினை மேழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

03- ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

04- பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் ரீலோட் வழங்கப்படும்.

05- இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

06- போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்பம், நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

- 'நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வது அவசியம்' -
(4) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'யார் என் மீது ஒரு ஸலவாத் சொல்வாரோ அவருக்கு அல்லாஹ் பத்து ஸலவாத் சொல்வான்".
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் : 408

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) ஒரு முஸ்லிம் தனது அனைத்து நிலைகளிலும் நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வது அவசியமாகும். கூட்டாகச் சொல்லாமல் தனித்தனியே சொல்லிக்கொள்ள வேண்டும்.

(2) நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல், (நாம்) அன்னார் மீது வைத்துள்ள நேசத்திற்கும் கண்ணியத்திற்குமோர் அடயாளமாகும்.

(3) நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வதை அதிகப்படுத்துவது மனிதனுக்கு மகிழ்ச்சியும் இறையருளும் கிடைக்கக் காரணமாகின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது நபித்தோழர்களுக்கு கற்றுக் கொடுத்த பிரகாரமே ஸலவாத் சொல்ல வேண்டும். அது பின்வருமாறு :

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்)

பொருள்: இறைவா! இப்ராஹீம் அவர்ளையும் அவர்களின் குடும்பத்தாரையும் நீ கண்ணியப்படுத்தியதைப்போல்; முஹம்மதையும் அவர் குடும்பத்தாரையும் கண்ணியப்பத்துவாயாக. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். (புஹாரி : 3370, முஸ்லிம் : 406. இவ்வார்தை புஹாரியில் இருந்து)

(4) நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்வதென்பது அவன் நபியவர்களை கண்ணியப்படுத்துவதும் புகழ்வதுமாகும். 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்" என்பதன் விளக்கம் : இறைவா! நபியவர்களை ஈருலகிலும் அவருடைய தகுதிக்கேற்ப கண்ணியப்படுத்துவாயாக.

(3) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஒரு மனிதன் தான் கேள்விப்படும் அனைத்தையும் (பிறருக்கு) சொல்லித்திரிவதே அவன் பொய் பேசுகிறான் என்பதற்கான அடயாளமாகும்". 

அறிவிப்பவர் : அபூ ஹ{ரைரா (ரலி).
ஆதாரம்: முஸ்லிம் : 05

ஹதீஸ் அறிவிப்பாளர்: 

'ராவியதுல் இஸ்லாம்" என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் ஆபூ ஹ_ரைரா அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர் அத்தௌஸீ அல்யமானீ (ரலி). தான் ஆடு மேய்க்கும் போது பூனைக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பதை வழமையாகிக் கொண்டதால் இவருக்கு 'அபூ ஹ{ரைரா" என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. 'கைபர்" போர் நடைபெற்ற ஹிஜ்ரி 7ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார். பின்னர் தொடர்ந்து 4 வருடங்கள் நபிகளாருடனே இருந்தார்கள், நபியவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடனேயே இருந்து நபிமொழிகளைக் கற்பதில் முயற்சி எடுத்து அதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் நபிகளாரைத் தொட்டும் அதிக நபிமொழிகளை மனனமிட்டு, 5374 ஹதீஸ்களை அறிவித்து, நபித்தோழர்களில் மிகக் கூடுதலான நபிமொழிகளை அறிவித்தவர் என்ற பெயருக்கு சொந்தமானார். மேலும் மதீனாவின் பிரபல சட்டக்கலை வல்லுனர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ஹிஜ்ரி 57ம் ஆண்டு மதீனாவில் மரித்து பகீஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) பொய் என்பது ஒன்றைப் பற்றி யதார்த்தத்திற்கு மாற்றமாகச் சொல்வதாகும்.

(2) தான் கேள்விப்படும் அனைத்தையும், அதன் உண்மைநிலை அறியாமல் அடுத்தவர்களுக்கு சொல்வது தடுக்கப்பட்டுள்ளது.

(3) பொய் கெடுதிகளுக்கும், பயத்திற்கும், மனநோய்க்கும் காரணமாக அமைகின்றது.

- 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள்' -

(2) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; (வெறுப்பூட்டாதீர்கள்)".

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
ஆதாரம் : புஹாரி : 69, முஸ்லிம் : 1734 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

ஹதீஸ் அறிவிப்பாளர்:

அபூ ஹம்ஸா என்ற புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபிகளாரின் பணியாளர் என்று அழைக்கப்பட்;டார். ஹிஜ்ரத் நடைபெற 10 வருடங்களுக்கு முன்னர் மதீனாவில் பிறந்த இவர் சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்றார். பின்பு நபிகளாருடன் சேர்ந்து 10 வருடங்கள் அவர்களுக்கு சேவை புரிந்து, நபியவர்கள் மரணிக்கும் வரை கூடவே இருந்தார்கள். பின்பு திமஷ்க் (ஸிரியா) நகரத்திற்குச் சென்று, அங்கிருந்து பஸரா நோக்கிச் சென்றார்கள். நபிகளாரைத் தொட்டும் 2286 ஹதீஸ்களை அறிவித்ததன் மூலம் அதிக நபிமொழிகளை அறிவித்தவர்களில் ஒருவரானார். தனது 100வது வயதைத் தாண்டிய பின்னர் ஹிஜ்ரி 93ம் ஆண்டு பஸ்ராவில் காலமானார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) அழைப்புப்பணி, பராமரித்தல், கற்றுக்கொடுத்தல், கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் இஸ்லாத்தின் வழிமுறை மென்மையாக நடந்து கொள்வதும், இலகுவாக்கிக் கொடுப்பதும், நற்செய்தி சொல்வதுமாகும்.

(2) இஸ்லாம் (மக்களை மார்க்கத்தை விட்டும்) தூரப்படுத்துவதையும், சிரமப்படுத்துவதையும் தடுக்கின்றது. கடுமையாக நடந்து கொள்ளாமலிருக்கவும் தூண்டுகிறது.

(3) கஷ்டங்களை நீக்குவது இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில்; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடாத்தப்படும் வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 16ம் வார வெற்றியாளர்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :

கேள்வி: மீலாதுன் நபி விழா கொண்டாட்டத்தை உருவாக்கியவன் யார் ? அவன் எக்கூட்டத்தை சார்ந்தவன் ?
விடை: உபைதுல் கத்தாஹ், பாதிமிய்யாக்கள்

வாரம் 16ன் குலுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இரு வெற்றியாளர்களும் :
#01 SIYAN || KUWAIT.
#02 I FARITHA || NINTAVUR, SRILANKA.

வெற்றிபெற்ற இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரூபா பெறுமதியான ரீலோட் பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...

பாராட்டு பெறுவோர் :
  1. FATHIMA NASRIYA, SELAM BRIDGE, NAWALAPITIYA. 
  2. MOHAMED LAAFIR, SELMABRIDGE, NAWALAPITIYA. 
  3. SIYAN, KUWAIT. 
  4. IRFANA ZAMEER, GAMPOLA. 
  5. ZAMEER, GAMPOLA. 
  6. FATHIMA FAZMINA, MAPAKANDA, NAWALAPITIYA. 
  7. MOHAMED ARSHAD, NAWALAPITIYA. 
  8. FAZIL, KAHATAPITIYA, GAMPOLA. 
  9. MUSKI AHAMED, NO.115,SUNGAVILA,POLONNARUWA. 
  10. ZIKRA, NAWALAPITIYA. 
  11. HIKMA, NAWALAPITIYA. 
  12. NUZLA NIYAS, 855, GALLE ROAD, KALUTARA. 
  13. IZZATHUL FIRAZA, 3B/4 RAKAWALPOLA RD, WELAMBODA . 
  14. NUHA NASIR, 45/2, DE ALWIS PLACE, KALUTARA . 
  15. ABDHUR RAHMAN AHMED, 27 1/1, MOHAMED LANE, GALBOKKA, WELIGAMA. 
  16. RIZMA RAMEES, 63/6 ISNAPULLA ROAD DHARGA TOWN. 
  17. FATHIMA SULHA, 69/17, PIPE LINE ROAD,OYAPAHALA,MATALE. 
  18. FATHIMA SAMHA, 69/17, PIPE LINE ROAD,OYAPAHALA,MATALE. 
  19. RIZVIYA JABEER, 69/17, PIPE LINE ROAD,OYAPAHALA,MATALE. 
  20. MOHAMMED MUNEER, 69/17, PIPE LINE ROAD,OYAPAHALA,MATALE. 
  21. NUSRA ABDEEN , NANGALLA, THULHIRIYA. 
  22. M.F.NUSAIKA, 128-VANNIYAR ROAD,NINTAVUR-13. 
  23. A.H.S.FAIZA, 222-VANNIYAR ROAD,NINTAVUR-12. 
  24. A.MANARTHEEN, 128VANNIYAR ROAD,NINTAVUR-10. 
  25. Y.F.SAMTHA ZAINAF, 5 VANNIYAR ROAD,NINTAVUR-1. 
  26. A.S.M.SAJITH, 48/C- VANNIYAR ROAD,NINTAVUR-02. 
  27. I.FARITHA, 12 MEERA NAHAR ROAD,NINTAVUR-01. 
  28. S.ABDUL HAMEED, 1 HAZZALY ROAD,NINTAVUR-01. 
  29. IL.YAHYA, SOUTH ROAD,NINTAVUR-01. 
  30. AH.FAHIRA, APC RAOD NINTAVUR-23. 
  31. AADHIL SHIHAM, 47/12,SCHOOL LANE,HIRIMBURA,GALLE. 
  32. A.S.F.YESREEN, 47/12,SCHOOL LANE,HIRIMBURA,GALLE. 
  33. M. I. F. NUSRATH , 217-B, BADUWATTA, EHELIYAGODA . 
  34. M. S. F. RIHANA , 217-B, BADUWATTA, EHELIYAGODA.
alimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே' -

(1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணை மணப்பதை நோக்கமாகக் கொண்டால் அவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது". 

அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி).
ஆதாரம் : புஹாரி : 54, முஸ்லிம் : 1907 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

ஹதீஸ் அறிவிப்பாளர்: 

அபூ ஹப்ஸ் என்ற புனைப்பெயருடனும் அல்பாரூக் என்ற சிறப்புப் பெயருடனும் அழைக்கப்பட்ட உமர் பின் கத்தாப் (ரலி) இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலீபா நுபுவ்வத்தின் பின் 6ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார் அவரின் வருகை இஸ்லாத்திற்கே வெற்றியாக அமைந்தது. மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து நபிகளாருடன் அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார். அல்குர்ஆன் அவரின் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாத பல சந்தர்ப்பங்களில் இறங்கியது. நபியவர்களைத் தொட்டும் 537 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். ஹஜ்ரி 13ம் ஆண்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது மரணத் தருவாயில் இஸ்லாமிய உம்மத்தின் அடுத்த கலீபாவாக அவரை நியமித்தார். பல நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கினார்கள். ஹிஜ்ரி நாட்காட்டியையும் அவரே உருவாக்கினார்கள். மக்களிடையே நீதமான ஆட்சி நடத்தினார்கள். ஹிஜ்ரி 23ம் ஆண்டு பஜ்ருத் தொழுகையில் வைத்து அபூலுஃலுஆ என்ற நெருப்பு வணங்கியினால் கொலை செய்யப்பட்டு அன்னை ஆயிஷாவின் அறையில் நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவருடைய ஆட்சிக்காலம் 10 வருடங்களும் 6 மாதங்களுமாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) நாம் செய்யும் நற்செயல்களுக்கு நற்கூலி கிடைக்க நல்ல எண்ணம் (உளத்தூய்மை) அவசியமாகும்.

(2) நிய்யத்தின் இடம் உள்ளமாகும். எனவே அதை (வாயால்) மொழிவது மார்க்கமாக்கப்பட மாட்டாது.

(3) அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மை நற்செயல்கள் ஏற்றுக்கொள் ளப்படுவதற்கான நிபந்தனைகளுள் ஒன்றாகும். ஏனெனில் இறைவன் அவனுடைய திருமுகத்திற்காகவும்இ நபியவர்கள் காட்டித்தந்த பிரகாரமும் செய்யப்பட்ட அமல்களை மாத்திரமே ஏற்றுக்கொள்கிறான்.

(4) முகஸ்துதியை விட்டும் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

- தொகுப்பு : Assheikh JM Hizbullaah (Anwari, Riyadhi) B.Com Reading -

அகில உலகைப் படைத்து, பராமரித்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவரது குடும்பதவர்கள், தோழர்கள், இறுதி நாள் வரை யாரெல்லாம் அவரைப் பின்பற்றி வாழ்கின்றனரோ அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.

ஆரம்ப காலங்களில் பெண் என்பவள் வீட்டின் சொத்தாக கருதப்பட்டு வந்தாள். வீட்டுப் பொருட்களும், சொத்து செல்வங்களும், கால்நடைகளும் ஒருவரின் மரணத்திற்குப் பின் எவ்வாறு வேறொருவருக்கு அனந்தரச் சொத்தாக வழங்கப்படுமோ அவ்வாறே பெண்ணும் தனது கணவனின் மரணத்தின் பின் வேறொருவருக்கு அனந்தரச் சொத்தாக வழங்கப்பட்டு வந்தாள். அவளுக்கு சம்பாதிக்கும் உரிமை, சொத்துக்களை சேர்த்து வைக்கும் உரிமை, பொருளாதாரத்தில் சுதந்திரமாக செயற்படும் உரிமை போன்ற அனைத்தும் அக்கால சமூகத்தினரால் தடை செய்யப்பட்டு இருந்தது. திருமணத்தின் போது அவளுக்குக் கிடைக்கும் மஹரைக் கூட பெற்றுக்கொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கவில்லை. அதைக்கூட அவளின் தந்தை, அல்லது அவளுக்கு யார் பொறுப்பாளராக இருக்கிறாரோ அவரே பெற்று வந்தார்.

இஸ்லாத்தின் வருகையைத் தொடர்ந்து அனந்தரச் சொத்து என்றால் என்ன? பெண் என்பவள் அதில் பெறவேண்டிய பங்குகள், பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் பெண்ணின் சுதந்திரம், சொத்துக்களை சேர்த்து வைப்பதிலும், மஹரைப் பெற்றுக்கொள்வதிலும், தனது சொத்தில் தான தர்மங்கள் புரிவதிலும் பெண்ணுக்கு இருக்கும் உரிமைகள் போன்ற அனைத்தையும் தெளிவுபடுத்தியது. அக்கால சமூகத்தில் நிலவி வந்த மௌட்டீக சிந்தனைகளையும், மனிதர்கள் தொகுத்து காத்துக்கொண்டிருந்த சட்டதிட்டங்களையும் தகர்த்தெறிந்து, இறைவனின் ஆணை என்ன என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, அதனை மக்கள் மன்றத்தில் செயற்படுத்த வைத்தது.

பொருளாதார விடயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேற்றுமைகளும், ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது என்பதை தெளிவுபடுத்தியது இஸ்லாம். பொருளாதாரத்தில் ஆண் எவ்வாறு அதிக உரிமையோடு செயல்படுகிறானோ அதே சம உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியது. பெண்ணின் சொத்துக்களை சூரையாடுவதற்கும், அவள் மீது ஆதிக்கம் செலுத்தி, அதிகாரம் புரிந்து அவளின் சொத்துக்களை முடக்கிடவும் எக்காலத்திலும் ஆண்களுக்கு முடியாது என்பதை சட்டரீதியாக நடைமுறைபடுத்திக்காட்டியது.

இன்று நாம் வாழும் சூழலில் திருமணம் முடிக்கும் அநேகர் தனது மனைவிமாருக்கு சரியான பொருளாதார உரிமைகளை வழங்குவதில் பொடுபோக்காக இருக்கின்றனர். பல மதத்தினர் வாழும் நம் நாட்டில் ஏனைய மதத்தினரின் சாயலும் நமது முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவியிருப்பதால் பெண்கள் விடயத்தில் அந்நிய மதத்தினரின் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதிலும், அதை சரிகாண்பதிலும், ஆண்வர்க்கம் உயர்ந்தவர்கள், பெண்கள் கீழ்ஜாதிகள் எனும் எண்ணத்தில் சில்லரைப் பிரச்சினைகளுக்குக்கூட தனது தன்மானம் இழந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்களின் பொருளாதராரத்தில் கைவைக்கும் நிலமையுமே காண முடிகிறது.

இங்கு பெண் எனும் வரையறைக்குள் மனைவி மாத்திரம் உள்வாங்கப்படுகிறாள் எனும் எண்ணம் பிழையானது. தாய், சகோதரிகள், மகள் போன்ற அனைவரும் இவ்வட்டதினுள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களுக்கும் உரிய பொருளாதார உரிமைகள் ஆண்களால் நிறைவேற்றிக்கொடுக்கப்படுவதில்லை. திருமணம் முடித்த பின் தாயை யார் கவனிப்பது எனும் விடயத்தில் சகோதர சகோதரிகளுக்கிடையில் சர்ச்சைகள் எழுகின்றது. சகோதரிக்கு பிரச்சினைகள் வரும் போது கணவன் தரப்பிலோ, மனைவியின் தரப்பிலோ பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் தடுக்கப்படுகிறது. மகளுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஏனைய பிள்ளைகளால் எங்களை தவிர அவள் மாத்திரம் தான் உங்கள் பிள்ளையா என தர்மசங்கடமான தடைகள் ஏற்படுகின்றன.

பெண்களுக்கான பொருளாதார சட்டவிழுமியங்களைப் பற்றி இஸ்லாம் போதித்தவைகள் இவர்களுக்கு இன்னும் போய்ச் சேராமல் இருப்பதும், இஸ்லாம் என்ன கூறினாலும் பரவாயில்லை, எனது ஆதிக்கத்தை மீறி என் வீட்டில் எதுவும் நடந்திடக்கூடாது எனும் அசமந்தப்போக்கை கையாள்பவர்களுக்கும் தெளிவை வழங்கிடவும், பெண்களுக்கு இஸ்லாம் எதையுமே வழங்கவில்லை, எமது உரிமைகளை நாம் அந்நிய மதத்தினரைப் போலவே எதிர்பார்க்கிறோம் என பெண்ணிலை வாதம் பேசி, புரட்சியில் ஈடுபடும் ஓர் சில பெண்களுக்கு மறுப்பு தெரிவிப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இக் கட்டுரையில் இவை அனைத்துக்குமான தெளிவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதமும், கொள்கையும், புரட்சியும், சட்ட ஒழுங்குகளும் பெண்களுக்கான பூரண பொருளாதார உரிமைகளை வழங்கிட முடியாது என்பதை இவ் ஆய்வின் ஊடாக நிரூபித்துள்ளேன்.

இக்கட்டுரையினூடாக...

1. எக்காலத்திற்கும் பொருத்தமான வகையில் பெண்களுக்கான பூரண உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதை இதனூடாக அனைவருக்கும் தெரியவரும்.

2. பெண்களின் உரிமை என மேற்கத்தயர்களால் விளம்பரப்படுத்தப் பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இதனூடாக வாசகர்கள் புரிந்துகொள்வர்.

3. பொருளாதார உரிமையில் பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என இஸ்லாமிய சட்டமூலாதாரத்தின் ஆதாரங்களுடனும், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களிலிருந்தும் ஆதாரங்கள் முன்வைக்கப்படும் போது பெண்கள் விடயத்தில் பொடுபோக்கைக் கையாள்வோர் தமது தவறை உணர்ந்து, திருத்திக்கொள்வர்.

4. பெண்களுக்கு பொருளாதார உரிமைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், பெண்ணின் நலவுக்காக ஆணே வெளியில் சென்று உழைத்திட வேண்டும் எனும் சட்ட விதியின் யதார்த்தத்தை ஆண்கள் புரிந்து அதற்கு ஏற்றாற் போல் பெண்களுடன் நலினமாக நடந்துகொள்ளும் முறை ஏற்படும்.

அல்லாஹ்வின் உதவியோடு நிறைவுசெய்துள்ள இக்கட்டுரையில் அனைத்து கருத்துக்களும் சரியாக இருந்தால் அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவைகள். ஏதும் தவறுகள் இருப்பின் அது மனிதன் எனும் வகையில் என் புறத்தால் ஏற்பட்டவைகள். அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்.

இக்கட்டுரையில் அதிக தலைப்புக்கள் பற்றி பேசப்பட்டுள்ளதால் இலகுவைக் கருதி இதனை பகுதி பகுதியாக பதிவேற்றம் செய்ய எத்தனித்துள்ளேன். நீங்களும் இதனை வாசித்து இது பற்றிய விமர்சனங்களைக் கூறுங்கள்.

எமது சகல நற்கருமங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, எமது சகல பாவங்களையும் மன்னித்து, மறுமையில் ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் எம் அனைவரையும் நுழைவிப்பானாக!

தொடரும்...


சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…

கேள்வி வாரம் 16 : 
- மீலாதுன் நபி விழா கொண்டாட்டத்தை உருவாக்கியவன் யார் ? அவன் எக்கூட்டத்தை சார்ந்தவன் ?

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) ஊடாக சென்று விடையளிக்கவும்...

விடைக்கான இணைப்புகள் : 
இணைப்பு 01 : | நபி பிறந்த நாள் விழா || As-sheikh M Ilham (Gafoori, Riyadhi) MA Reading || |

இணைப்பு 02 : | மீலாத் விழா கொண்டாடுவது குற்றமா? || As-sheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading|

விடை அனுப்ப வேண்டிய கூகுள் போம் (google form) இணைப்பு 

போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :

01- இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

02- குறித்த கேள்விக்கான விடையினை மேழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

03- ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

04- பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் ரீலோட் வழங்கப்படும்.

05- இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

06- போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்பம், நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில்; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடாத்தப்படும் வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 15ம் வார வெற்றியாளர்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :
குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இரு வெற்றியாளர்களும் :

#01 ASM SAJITH || NINTAVUR -02, SRILANKA.
#02 SAFRAN ||POLANNARUWA, SRILANKA.

இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரூபா பெறுமதியான ரீலோட் பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...

alimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்...

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான ஓர் முயற்சி…

கேள்வி வாரம் 15 : 

# 01 - ஈமானை உறுதிப்படுத்தும் அம்சங்களில் இரண்டை குறிப்பிடுக. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) ஊடாக சென்று விடையளிக்கவும்...
விடைக்கான இணைப்புகள் : 
இணைப்பு 01 : | சிறந்த நாள் வெள்ளிக்கிழமை |

இணைப்பு 02 : |மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் 01|

இணைப்பு 03 : |மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் 02 |

விடை கீழ் வரும் இணைப்பின் ஊடாக சென்று அனுப்பவும் :

போட்டியின் விபரம் மற்றும் நிபந்னைகள் :

01- இப்போட்டியானது www.alimamslsf.com என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்ட வாரத்தில் பதியப்படும் வீடியோ, ஆடியோ பயான்கள், கட்டுரைகள், போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

02- குறித்த கேள்விக்கான விடையினை மேழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் போம் (google form) இல் உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கேள்விற்கான விடை என்பவற்றை உரிய பெட்டியினுள் நிரப்பி (Submit) என்ற பட்டினை அழுத்தினால் மாத்திரம் போதுமானது.

03- ஒருவர் கேள்விக்குரிய விடையை ஒரு முறை மாத்திரமே அளிக்க வேண்டும்.

04- பரிசில்களாக வெற்றியீட்டும் இருவருக்கு தலா 200 ரூபாய் வீதம் 400 ரூபாய் ரீலோட் வழங்கப்படும்.

05- இப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவோறுக்கான பரிசு ரீலோட் இலங்கை ரூபாய் படியே அனுப்பப்படும். ஆதலால் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் பரிசு ரீலோட்டை பெறும் இடத்து அவர் இலங்கை இலக்கம் ஒன்றையே குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

06- போட்டியில் பலர் வெற்றி பெறுமிடத்து, குலுக்கல் முறையில் 02 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குர்ஆன், சுன்னாவை மக்கள் மயப்படுத்தும் இம் முயற்சியில் நீங்களும் எம்மோடு கை கோருங்கள். உங்களது குடும்பம், நண்பர்கள், என அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் எத்தி வையுங்கள். உங்கள் முகநூற் பக்கங்களில் எமது இம் முயற்சியை மக்கள் மயப்படுத்துங்கள்.

அல்-இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் சார்பில்; ஒன்றியத்தின் ஊடகப்பிரிவினரால் நடாத்தப்படும் வாராந்த இஸ்லாமிய வினா விடைப் போட்டியின் 14ம் வார வெற்றியாளர்கள் மற்றும் பாராட்டு பெறுவோர் :

குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட இரு வெற்றியாளர்களும் :

#01 FAZMINA || MAPAKANTHA, NAWALAPITIYA, SRILANKA.

#02 JASMINA || PANADURA, SRILANKA.
இரு அதிஷ்டசாலிகளுக்குமான 200/= ரூபா பெறுமதியான ரீலோட் பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...

alimamslsf's weekly quiz போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்...

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget