May 2018

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன

عَن عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّات – وفي رةاية بِالنِّيَّةِ - ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ» ( أخرجه البخاري 54 ، مسلم 1907 )

ஹதீஸின் பொருள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் எவருடைய ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கமாக இருந்தால் அவருடைய ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது'

அறிவிப்பவர் : உமர் (ரலி)

ஆதாரம் : புஹாரி : 54, முஸ்லிம் : 1907 (இவ்வார்தை புஹாரியில் இருந்து பெறப் பட்டுள்ளது)

ஹதீஸ் அறிவிப்பாளர்

'அபூ ஹப்ஸ்' என்ற புனைப்பெயருடனும், 'அல்பாரூக்' என்ற சிறப்புப் பெயருடனும் அழைக்கப்பட்ட உமர் இப்னு கத்தாப் (ரலி) இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலீபா ஆவார். இவரின் தாயாரின் பெயர் ஹன்தமாஃ பின்து ஹாஷிம் அல்மஃக்ஸூமிய்யா என்பதாகும். ஆமுல் பீல் (யானை வருடம்) 13ம் ஆண்டு பிறந்தார்கள். மேலும் ஜாஹிலிய்யாக் காலத்தில் குரைஷிகளின் அரசியல் தூதுவராகவும் செயற்பட்டார்கள்.

நுபுவ்வத்தின் பின் 6ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார். அவரின் வருகை இஸ்லாத்திற்கே வெற்றியாக அமைந்தது. மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து நபிகளாருடன் அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார்கள். அல்குர்ஆன் அவரின் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக பல சந்தர்ப்பங்களில் இறங்கியது. நபியவர்களைத் தொட்டும் சுமார் 537 நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.

ஹிஜ்ரி 13ம் ஆண்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது மரணத் தருவாயில் இஸ்லாமிய உம்மத்தின் அடுத்த கலீபாவாக இவரை நியமித்தார்கள். அதன் பிற்பாடு பல நிர்வாகப் பிரிவுகளை தனது ஆட்சியில் உருவாக்கினார்கள். ஹிஜ்ரி நாட்காட்டியையும் இவர்களே உருவாக்கினார்கள். மக்களிடையே 10 வருடங்களும் 6 மாதங்களும் நீதமான ஆட்சி நடத்திய இவர்கள் ஹிஜ்ரி 23ம் ஆண்டு பஜ்ருத் தொழுகையின் போது அபூலுஃலுஆ என்ற நெருப்பு வணங்கியினால் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டார்கள்.

இவர்களின் விருப்பத்தின் பெயரில் அன்னை ஆஇஷா (ரலி) அவர்களின் அறையில் நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) அவர்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.



ஹதீஸின் சாராம்சம்

இந்நபிமொழி இஸ்லாத்தின் மகத்தான அடிப்படைகளுள் ஓர் அடிப்படையாகவும், முக்கியமான நபிமொழியாகவும் திகழ்கிறது. ஒரு நற்செயல் ஏற்றுக் கொள்ளப்படுவதா? அல்லது நிராகரிக்கப்படுவதா? அதற்கான கூலி அதிகமா? அல்லது குறைவா? என்பதற்கான சரியான அளவுகோல் இந்த நபிமொழியாகும்.

அமல்களெல்லாம் தங்கியிருப்பது எண்ணங்களில்தான் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வெண்ணம் நல்லதாக, அல்லாஹ்வுக்காக என்றிருந்தால் அச்செயல் ஏற்றுக் கொள்ளப்படும். அவ்வாறில்லையெனில் நிராகரிக்கப்;படும். ஏனெனில் அல்லாஹ் அவனுக்கு நிகரானவர்களை விட்டும் தேவையற்றவன். பின்பு நபியவர்கள் ஹிஜ்ரத்தை இதற்கு உதாரணமாக காட்டுகின்றார்கள்.

அல்லாஹ்வின் நற்கூலியையும், நபியவர்களின் நெருக்கத்தையும் நாடி, மார்க்கத்தைக் கற்கும் நோக்கில் யார் ஏனைய பிரதேசத்திலிருந்து இஸ்லாமியப் பிரதேசத்திற்கு ஹிஜ்ரத் (ஊர்துறந்து) செல்கிறாரோ அவருடைய அப்பயணம் இறைபாதையாக மாறிவிடும். அதற்காக அல்லாஹ் கூலி வழங்குவான்.

யாருடைய நோக்கம் உலகாதாயங்களைப் பெறுவதாக இருக்குமோ அவருடைய பயணத்திற்கு எவ்வித நற்கூலியும் கிடைக்காது. அது பாவச்செயலுக்காக என்றிருந்தால் அதற்கான தண்டனை அவருக்குக் கிடைக்கும்.



ஹதீஸின் படிப்பினைகள்


1. எண்ணங்களுக்கு ஏற்பவே செயல்களுக்கு கூலி வழங்கப்படும்.

2. அனைத்து செயல்களும், அவை சரியானதா, தவறானதா? பூரணமானதா, குறைவானதா? நன்மையா, தீமையா? போன்றவற்றிற்கான அளவுகோல் எண்ணங்களாகும். யார் தனது செயல்கள் மூலம் முகஸ்துதியை நாடுகிறாரோ அவர் பாவியாவார்.

3. நிய்யத்; இதுவே ஒவ்வொரு அமலுக்கும் அடிப்படை நிபந்தனையாகும். அதை வரவழைப்பதில் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு செய்வது அவருடைய வணக்கத்தை பாழாக்கிவிடும். எனவே ஒன்றை செய்வதாக மனதால் எண்ணுவதே நிய்யத்துதான்.

4. நிய்யத் வர வேண்டிய இடம் உள்ளமாகும். அதனை வாயினால் மொழிவது பித்அத்தாகும்.

5. உலகாதாயங்களுக்காகவோ அல்லது மக்களிடம் பெயர், புகழைப் பெற வேண்டும் என்பதற்காகவோ அமல் செய்வதை தவிர்ப்பது அவசியமாகும். அந்நோக்கங்களில் ஏதாவதொன்றிருந்தால் அது அவ்வணக்கத்தையே பாழ்படுத்திவிடும்.

6. உள்ளத்துடன் தொடர்புபட்ட அமல்களில் அதிக கரிசணை காட்டுவது அவசியமாகும்.

7. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி காபிர்களின் பிரதேசத்திலிருந்து இஸ்லாமியப் பிரதேசத்திற்கு ஹிஜ்ரத் (ஊர்துறந்து) செல்வதானது, சிறந்த வணக்கங்களில் ஒன்றாக மாறிவிடுகின்றது.



வினா  இல - 15
 
உமர் (ரலி) அவர்கள் யாரால் , ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்கள் ?

ஹதீஸ்துறைக்குப் பங்காற்றிய நான்கு மத்ஹப்களின் அறிஞர்களும் அவர்களின் கிரந்தங்களும்

முஸ்னத் அபீ ஹனீபா


நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கு சேவை செய்தோரில் கூபாவில் ஹி.80ல் பிறந்து பக்தாதில் ஹி150ல் மரணித்த 'இமாமுல் அஃழம்' அபூ ஹனீபா நுஃமான் இப்னு ஸாபித் அவர்களும் ஒருவர்.

பிக்ஹூ கலையில் அதிக கவனம் செலுத்தியதால் ஹதீஸ்துறையில் பங்களிப்பு குறைந்தாலும் இவர்கள் அறிவித்த பொன்மொழிகள் சுமார் 14 அல்லது 15 பேர் முஸ்னத் என்ற பெயரில் அறிவித்துள்ளனர். எனினும் அவர்களுடைய சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு ஹஸன் என்பவர் தொகுத்த முஸ்னத் மாத்திரமே தற்போது அச்சிடப்பட்டு நமது கைகளில் தவழ்கின்றது. அதில் 524 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் முல்லா அலீ அல்காரீ அவர்கள் 'ஷரஹ் முஸ்னத் அபீ ஹனீபா' எனும் பெயரில் இதற்கு விரிவுரை எழுதியுள்ளார்கள்.

முவத்தா மாலிக்

'இமாமு தாரில் ஹிஜ்ரா' என்றழைக்கப்படக்கூடிய அபூஅப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் அவர்களால் இயற்றப்பட்ட கிரந்தம் முவத்தா ஆகும். இவர்கள் ஹி.97ல் பிறந்து ஹி.179ல் மரணித்தார்கள். 
 
இதில் நபி அவர்களுடைய ஹதீஸ்கள் உடப் ட ஸஹாபாக்கள், தாபிஈனக் ளது கூற்றுக்களும், மார்க்கத் தீர்ப்புக்களும் அடங்கியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். சுமார் 1720 ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ள இக்கிரந்தம் பல அறிஞர்களால் விரிவுரை செய்யப்பட்டுள்ளது. இதில் இப்னு அப்துல்பர் அவர்களால் எழுதப்பட்ட 'அத்தம்ஹீத்' மற்றும் 'இஸ்தித்கார்'  என்ற விரிவுரை நூற்கள் பிரசித்திபெறற் வையாகும்.

 
முஸ்னத் அஷ்ஷாபிஈ

'ஆலிமு குறைஷ்' என அறியப்படும் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாபிஈ அவர்கள் பலஸ்தீனிலுள்ள காஸ்ஸாவில் ஹி150ல் பிறந்து எகிப்தில் ஹி.204ல் மரணித்தார்கள். அவர்கள் தொகுத்த ஹதீஸ்களே முஸ்னத் அஷ்ஷாபிஈ என்றழைக்கப்படுகிறது. இமாம் மாலிக் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களில் இமாம் ஷாபிஈயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்நூலை இமாம் ஷாபிஈ அவர்கள் தொகுக்கவில்லை. இமாம் ஷாபிஈ அவர்களிடமிருந்து இவர்களுடைய சிரேஷ்ட மாணவரான ரபீஃ பின் ஸுலைமான் அல்முராதீ கேட்ட ஹதீஸ்களை அவரிடமிருந்து அபுல் அப்பாஸ் அல்அஸம்மு என்பவர்; தொகுத்ததே முஸ்னத் அஷ்ஷாபிஈ என்ற நூலாகும்.

எனினும் இந்நூலில் இடம்பெறாத, இமாம் ஷாபிஈ அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் இன்னும் ஏராளம் உள்ளன. 1859 ஹதீஸ்கள் உள்ள இந் நூலிற்கு ஷாபிஈ மத்ஹபின் பிற்கால அறிஞர் இமாம் ராபிஈ அவர்கள் 'ஷரஹ் முஸ்னத் அஷ்ஷாபிஈ' எனும் பெயரில் விரிவுரை எழுதியுள்ளார்கள்.



முஸ்னத் அஹ்மத்

ஹி.164ம் ஆண்டு பிறந்து ஹி.241ல் மரணித்த 'இமாமு அஹ்லிஸ் ஸூன்னா' அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களால் எழுதப்பட்ட கிரந்தமே முஸ்னத் அஹ்மத் ஆகும். இவர் இமாம் ஷாபிஈ அவர்களின் முக்கியமான மாணவர்களுள் ஒருவராவார்.

ஏனைய ஹதீஸ் கிரந்தங்களைப் போல் பாடங்கள் அடிப்படையில் ஹதீஸ்கள் தொகுக்கப்படாமல் ஓர் அறிவிப்பாளர் (ஸஹாபி) வேறுபட்ட தலைப்புக்களில் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் நபித்தோழர்களின் பெயர்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதால் இந்நூலில் ஹதீஸ்களைப் தேடிப் பெற்றுக் கொள்வது சற்று சிரமமாகவே காணப்பட்டது. அதனை இலகுவாக்கும் விதத்தில் சென்ற நூற்றாண்டில் எகிப்து நாட்டில் வசித்த அஹ்மத் அஸ்ஸாஆதீ என்பவர் இந்நூலிலுள்ள ஹதீஸ்களை ஏனைய நூற்களைப் போன்று பாடங்கள் அடிப்படையில் ஒழுங்குபடுத்தி 'அல்பத்ஹூர் ரப்பானீ' எனும் பெயரில் தொகுத்துள்ளார்கள்.

வினா  இல  - 14
 
இமாமு அஹ்லுஸ் ஸுன்னா என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட அறிஞர் யார் ?

ஆறு ஹதீஸ்கலை அறிஞர்களும் அவர்களின் கிரந்தங்களும்

ஹதீஸ்கலையின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற பாடத்தில் நாம் பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் சிலதைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றை இங்கு சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸஹீஹூல் புஹாரி

அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாஈல் அல்புஹாரி என்ற அறிஞரால் எழுதப்பட்டதே ஸஹீஹூல் புஹாரி ஆகும். இவர் உஸ்பகிஸ்தானிலுள்ள புஹாரா என்ற இடத்தில் ஹி194ம் ஆண்டு பிறந்து ஹி256ம் ஆண்டு மரணித்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் மாணவர்களுள் ஒருவரான இவர்கள் மனன சக்தியில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். 'ஸஹீஹூல் புஹாரி' என்ற பெயரில் இந்த கிரந்தம் பிரபல்யமாக அழைக்கப்பட்டாலும் நூலாசிரியர் இதற்கு அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் முஸ்னதுல் முஹ்தஸர் மின் உமூரி ரஸூலில்லாஹி வசுனனிஹி வஐயாமிஹி என்று பெயரிட்டார்கள். தனது 16வது வயதில் இக்கிரந்தத்தை எழுதத் தொடங்கிய இமாம் புஹாரி அவர்கள் தமது 32ம் வயதில் ஏறத்தாழ 16 ஆண்டுகால அயராத உழைப்பின் பிறகே அதனை எழுதிமுடித்தார்கள்.

தமக்கு முன்னைய காலத்தில் எழுதப்பட்ட ஹதீஸ் நூற்களில் ஸஹீஹ், ஹஸன், ழஈப்ஃ ஆகிய அனைத்துத் தரங்களிலுமுள்ள நபிமொழிகள் காணப்பட்டன. ஆனால் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் ஒன்று திரட்டும் நோக்கிலேயே இவர்கள் ஸஹீஹூல் புஹாரியை எழுதினார்கள். இந்நூலில் மொத்தமாக சுமார் 7397 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளதாக இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஹதீஸ்களைத் தவிர்த்தால் 2602 ஹதீஸ்கள் இந்நூலில் உள்ளன.

இதில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஹதீஸ்களும் உள்ளடங்கும். இதில் காணப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் விடயமாகும். பல அறிஞர்கள் இந்நூலிற்கு விரிவுரைகள், நூலிற்கான சுருக்கம், அதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் பற்றிய ஆய்வு போன்றவைகளையும் எழுதியுள்ளனர். சுமார் 71 அறிஞர்கள் இதற்கு விரிவுரை எழுதியுள்ளார்கள். அவற்றில் மிகவும் பிரபலமானது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் எழுதிய 'பத்ஹூல் பாரி' என்ற நூலாகும்.



ஸஹீஹ் முஸ்லிம்

ஹதீஸ் கிரந்தங்களில் ஸஹீஹூல் புஹாரிக்கு அடுத்த தரத்தில் அறிஞர்களால் மதிக்கப்படுவது 'ஸஹீஹ் முஸ்லிம்' ஆகும். இதனுடைய முழுப்பெயர் 'அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்' என்பதாகும். அபுல் ஹூஸைன் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் அந்நைஸாபூரி என்ற அறிஞரால் இந்நூல் தொகுக்கப்பட்டது. இவர்கள் ஈரானிலுள்ள நைஸாபூர் என்ற கிராமத்தில் ஹி.204ல் பிறந்து ஹி.261ல் மரணித்தார்கள். இவர் இமாம் புஹாரியின் முக்கிய மாணவர்களில் ஒருவர். இதில்; திரும்பத் திரும்ப இடம்பெறா வண்ணம் சுமார் 4000 ஹதீஸ்கள் உள்ளன.



திரும்பத் திரும்ப இடம்பெறும் ஹதீஸ்கள் அடங்கலாக சுமார் 12000 ஹதீஸ்கள் உள்ளன. இந்நூலிற்கு பல அறிஞர்களால் விரிவுரை எழுதப்பட்டாலும் இமாம் நவவி அவர்களால் எழுதப்பட்ட 'அல்மின்ஹாஜ்' என்ற நூலே பிரபல்யமானதாகும்.



ஸுனன் அபூதாவூத்

ஹதீஸ் கிரந்தங்களில் புஹாரி, முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களுக்கும் அடுத்தபடியாக மதிக்கப்படுவது 'ஸுனன் அபூதாவூத்' ஆகும். இந்நூல் அபூதாவூத் ஸுலைமான் இப்னு அஷ்அஸ் அஸ்ஸிஜிஸ்தானி அவர்களால் எழுதப்பட்டது. இவர் ஈரானில் உள்ள ஸிஜிஸ்தான் என்ற இடத்தில் ஹி.202 ம் ஆண்டு பிறந்து ஹி.275ம் ஆண்டு மரணித்தார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் மாணவர்களுள் இவரும் ஒருவர்.

இந்நூலில் சுமார் 5275 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அதிகமாக காணப்பட்டாலும் சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏனைய நூல்களுக்கு விரிவுரை நூல்கள் எழுதப்பட்டதைப் போன்று இதற்கும் அதிகமான விரிவுரை நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் இமாம் கத்தாபி அவர்களால் எழுதப்பட்ட 'மஆலிமுஸ் ஸுனன்' என்ற நூலும் இந்தியாவைச் சேர்ந்த ஷம்ஸுல் ஹக் அழீம் ஆபாதீ என்பவரால் எழுதப்பட்ட 'அவ்னுல் மஃபூத்' என்ற நூலும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.



ஜாமிஉத் திர்மிதி

ஸுனன் அபூதாவூதுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுவது அபூஈஸா முஹம்மத் இப்னு ஈஸா அத்திர்மிதி அவர்களால் இயற்றப்பட்ட 'ஜாமிஉத் திர்மிதி' என்ற ஹதீஸ் கிரந்தமாகும். இவர் இன்றைய உஸ்பகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் என்ற ஊரில் ஹி.209ம் ஆண்டு பிறந்து ஹி.279ம் ஆண்டு மரணித்தார்கள். இவர் இமாம் புகாரியின் முக்கியமான மாணவர்களில் ஒருவராவார். இந்நூல் 'ஸுனனுத் திர்மிதி' என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. இதில் சுமார் 3891 நபிமொழிகள் பதியப்பட்டுள்ளன.

இவைகளில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அதிகமாக காணப்பட்டாலும் சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏனைய நூல்களுக்கு விரிவுரை நூல்கள் எழுதப்பட்டதைப் போன்று இதற்கும் அதிகமான விரிவுரை நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் மாலிக் மத்ஹபின் பிரபல்யமான அறிஞர் இப்னுல் அரபி எழுதிய 'ஆரிழதுல் அஹ்வதீ' என்ற நூலும், இந்தியாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் முபாரக் பூரி அவர்களால் எழுதப்பட்ட 'துஹ்பதுல் அஹ்வதீ' என்ற நூலும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.





ஸுனன் நஸாஈ

கிழக்கு ஈரானிலுள்ள நஸா எனும் நகரத்தில் ஹி.215ம் ஆண்டு பிறந்த அபூ அப்திர்ரஹ்மான் அஹ்மத் இப்னு சுஐப் அந்நஸாஈ அவர்களால் எழுதப்பட்டதே 'ஸுனன் அந்நஸாஈ'. இவர்கள் ஹி.303ம் ஆண்டு மரணித்தார்கள்.

சுமார் 5769 ஹதீஸ்களை உள்ளடக்கிய இந்நூல் ஸுனனுத் திர்மிதிக்கு அடுத்து மதிக்கப்படுகின்றது. இவை இதே நூலாசிரியர் தொகுத்த 'அஸ்ஸுனனுல் குப்ரா' என்ற நூலிலிருந்து தேர்வு செய்து தொகுக்கப்பட்டவையாகும். இந்நூலிற்கு ஓரிரு விரிவுரை நூல்களே எழுதப்பட்டுள்ளன. அதில் இமாம் ஸுயூதி அவர்களால் எழுதப்பட்ட 'ஸஹ்ருர் ருபா அலல் முஜ்தபாஹ்' என்ற விரிவுரை நூல் முக்கியமானதாகும்.





ஸுனன் இப்னுமாஜா

கஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் ஹி209ம் ஆண்டு பிறந்த அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு யஸீத் இப்னுமாஜா அல்கஸ்வீனீ அவர்களால் எழுதப்பட்ட கிரந்தம் ஸுனன் இப்னுமாஜா. இவர் ஹி273ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்கள்.

சுமார் 4341 ஹதீஸ்களை உள்ளடக்கிய இக்கிரந்தம் ஸுனன் நஸாஈயிற்கு அடுத்து மதிக்கப்படுகின்றது. இந்நூலிற்கு 'அல்இஃலாம் பிஸுன்னதிஹி அலைஹிஸ் ஸலாம்' எனும் பெயரில் இமாம் முஃக்லதாய் என்ற அறிஞரும், 'மிஸ்பாஹூஸ் ஸுஜாஜா ஷரஹ் ஸுனன் இப்னிமாஜா' எனும் பெயரில் இமாம் ஸுயூதி அவர்களும் எழுதியுள்ள விரிவுரைகள் பிரபலமானது.



வினா   இல - 13
 
ஸஹீஹுல் புஹாரியில் மொத்தமாக எத்தனை ஹதீஸ்கள் உள்ளன ?




ஹதீஸ்களை பாதுகாப்பதில் ஸலபுகளின் பங்கு

ஹதீஸ் கலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராயும் ஆய்வாளர்கள் அதனைப் பல கட்டங்களாக பிரிக்கின்றனர். அவற்றை கீழ்காணும் நான்கு காலகட்டங்களாக நோக்குகின்றனர்.

1. நபிகளாரின் காலம்

2. நபித் தோழர்களின் காலம்

3. தாபிஈன்களின் காலம்

4. ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு.

ஹதீஸ் என்பது நபிகளாருடைய காலத்துடன் தொடர்புபடுவதால் ஹதீஸ் கலையும் அக்காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனும் ஹதீஸும் கலந்து விடக்கூடாது என்பதால் ஆரம்பத்தில் அல்குர்ஆனைத் தவிர வேறு எதனையும் எழுதவேண்டாமென்று தடை செய்தார்கள். எனினும் இரு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற சில நபித் தோழர்களுக்கு ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதியளித்தார்கள். உதாரணமாக அலீ, அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) போன்றோரைக் குறிப்பிடலாம்.



நபி (ஸல்) அவர்களின் காலம்

இஸ்லாத்தின் மூலாதாரங்களில் குர்ஆனுக்கு அடுத்தபடியாக காணப்படப்கூடிய ஹதீஸை குர்ஆனைப் போலவே பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஸஹாபாக்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு ஸஹாபியும் தன்னால் இயன்ற முறையில் ஹதீஸ்களைப் பாதுகாத்தனர். அந்த வகையில் நபியவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் பிரதான மூன்று முறைகளில் பாதுகாக்கப்பட்டன.

01. மனனமிடல்

02. எழுதி வைத்தல்

03. செயல்படுத்தல்



01. மனனமிடல்

நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்கள் அவர்களது காலத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறந்த முறை மனனமிடலாகும். மனனம் செய்வதில் அரபிகளிடம் ஓர் அலாதியான திறமை காணப்பட்டது. இதற்காக நபியவர்கள் தனது தோழர்களை தூண்டிக் கொண்டேயிருந்தார்கள். 'எவர் எனது வார்த்தைகளை செவிமெடுத்து, அவற்றைப் மனனமிட்டுப் பாதுகாத்து ஏனையவர்களுக்கும் அவர் கேட்டவாறே அறிவிக்கின்றாரோ,





அவரை அல்லாஹ் ஒளிபெறச் செய்வானாக. ஏனென்றால் அவை யாருக்கு அறிவிக்கப்படுகின்றனவோ அவர் அறிவிப்பவரை விட சிலவேளை சிறப்பாக விளங்கலாம்.' (அபூதாவூத் : 3660, திர்மிதி : 2847, இப்னுமாஜா : 230)



02. எழுதி வைத்தல்

ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொகுக்கப்படவில்லை என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் காலாகாலமாக இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்கள் தான் ஹதீஸ்களை முதன் முதலாக ஒன்று திரட்டினார்கள் என்ற சில அறிஞர்களது கருத்தே இதற்கு காரணமாகும். ஆனால் நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், ஸஹாபாக்கள், தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஒன்று திரட்டப்பட்டதை வரலாற்றை பார்க்கின்ற போது எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் வஹி இறங்கிய ஆரம்பகாலத்தில் ஹதீஸ்களை எழுதவேண்டாம் எனக் கட்டளையிட்டிருந்தார்கள். 'என்னைத்தொட்டும் எந்த ஒன்றையும் எழுதவேண்டாம். எவராவது குர்ஆனைத் தவிர வேறு ஏதாவது ஒன்றை எழுதினால் அதனை அழிக் கட்டும்' என நபியவர்கள் கூறியதாக அபூஸஈதில் குத்ரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் - முஸ்லிம் : 3004)

குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்துவிடக் கூடாது என்பதற்காகவும், குர்ஆன் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நபியவர்கள் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என தடைவிதித்தார்கள். ஆனால் இக்காரணங்கள் இல்லாமல் போகின்ற போது அவற்றை எழுத அனுமதித்தார்கள் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸ்கள் அமைந்துள்ளன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபித்தோழர்களில் என்னை விட ஹதீஸ் அதிகமாக அறிந்தவர் எவரும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர, அவர் எழுதுவார், நான் எழுதமாட்டேன். (ஆதாரம் - புஹாரி : 113)

நபியவர்கள் மக்கா வெற்றியின் போது செய்த பிரசங்கத்தை அபூஷாஹ் என்பவர் எழுதித்தரும்படி கேட்ட போது நபியவர்கள் 'அபூஷாஹ்விற்கு எழுதிக் கொடுங்கள்' எனக் கூறினார்கள் (அறிவிப்பவர் - அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம் - புஹாரி : 2434, முஸ்லிம் : 1355)

மேற்கண்ட இரு செய்திகளும் நபியவர்கள் பிற்காலத்தில் ஹதீஸ்களை எழுத அனுமதித்ததைக் காட்டுகின்றது.



03. செயல்படுத்தல்

நபிகளாரின் காலத்தில் நபித்தோழர்கள் தாம் கற்றுக்கொண்ட ஹதீஸ்களை செயற்படுத்தி வந்தனர். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை அவ்வாறே பின்பற்ற வேண்டுமென்ற உணர்வு அவர்களிடம் காணப்பட்டது. வணக்கங்கள், குடும்ப வாழ்கை, சமூக வாழ்கை என அனைத்திலும் ஸஹாபாக்களின் வாழ்வு ஸூன்னாவின் வழியிலேயே இருந்தது.



நபித்தோழர்களின் காலம்

அகீதாவைப் போதிப்பதிலும், இஸ்லாத்தை பரப்புவதிலும் ஸஹாபாக்கள் எந்த அளவு ஈடுபாடு காட்டினார்களோ அதேயளவு ஹதீஸ்களைத் தொகுக்கின்ற விடயத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

• ஹதீஸ்களை மனனம் செய்வதற்கும், மனனம் செய்த ஹதீஸ்களை உறுதிப்படுத்தவும் தமது மாணவர்களை ஏவக்கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.

• ஸஹாபாக்களில் சிலர் சிலருக்கு ஹதீஸ்களை எழுதி அனுப்பக்கூடியவர்களாக இருந்தார்கள். உஸைத் பின் ஹூழைர் (ரலி) அவர்கள் நபியவர்களின் சில ஹதீஸ்களை மர்வான் பின் ஹகம் என்பவருக்கு எழுதி அனுப்பியதை எமக்கு சான்றாக எடுக்கலாம். (அஹ்மத் : 17896)

• ஹதீஸ்களை எழுதும் படி தமது மாணவர்களுக்கு ஏவக்கூடியவர்களாக காணப்பட்டனர். அனஸ் இப்னு மாலிக் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) , உமர் இப்னு ஹத்தாப் (ரலி), அலீ (ரலி) போன்றோர் ஹதீஸ்களை எழுதுவதற்குத் தூண்டக் கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.

ஸஹாபாக்களுடைய காலத்தில் ஹதீஸ்கள் எழுதப்பட்டாலும் அவை தலைப்புக்கள், பாடங்கள் என்ற அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை. மனனம் செய்வதற்கும், அதனை மீட்டுவதற்குமே எழுதப்பட்டன.



தாபிஈன்கள் காலம்

ஸஹாபாக்களுடைய காலத்தைப் போன்றே தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஏடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆமிர் அஷ்ஷஃபி , ஹஸனுல் பஸரீ , ஸஈத் இப்னு முஸய்யப் , இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி போன்றவர்கள் ஹதீஸ்களை எழுதித் தொகுக்கக்கூடியவர்களாக காணப்பட்டார்கள்.

ஹதீஸ்கள்; ஸஹாபாக்களின் காலத்தில் எழுதப்பட்டதை விட தாபிஈன்களின் காலத்தில் அதிகளவில் எழுதப்பட்டது. தாபிஈன்களின் காலத்தில் ஹதீஸ்களை மனனம் செய்த ஸஹாபாக்கள் மற்றும் மூத்த தாபிஈன்களின் மரணங்கள் அதிகரித்தமை, மக்கள் மத்தியில் மனனம் செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சி, பித்அத்களும் பொய்களும் பரவியமை போன்ற காரணங்களால் இக்காலகட்டத்தில் ஹதீஸ்கள் அதிகளவில் எழுதப்பட்டன.

இக்காலத்தில் கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ் மற்றும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி ஆகிய இருவரும் ஹதீஸ்களைத் தொகுப்பதில் ஆற்றிய சேவை மகத்தானதாகும். இவர்களது காலத்திலேயே ஹதீஸ்கள் பரிபூரணமாக தொகுக்கப்படத் துவங்கின. இமாம் ஸுஹ்ரி அவர்கள் கூறுகிறார்கள் 'உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்கள் ஹதீஸ்களை ஒன்று திரட்டுமாறு எங்களுக்கு ஏவினார்கள். நாங்கள் ஏடு ஏடாக ஹதீஸ்களை எழுதி ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பினோம்'.



ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு

இந்நூற்றாண்டு இஸ்லாமிய கல்வியின் குறிப்பாக ஹதீஸ் கலையின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்றது. ஹதீஸ்களைத் தேடி உலகின் பல பாகங்களுக்கும் அறிஞர்கள் பிரயாணம் செய்தமை இக்காலத்தில் காணப்பட்ட ஒர் சிறப்பம்சமாகும். மஸானீத், ஸிஹாஹ், ஸுனன் போன்ற பெயர்களில் இக்காலத்தில் ஹதீஸ் கிரந்தங்கள் எழுதப்பட்டன. குறிப்பாக 'ஸிஹாஹூஸ் ஸித்தா' அல்லது 'அல்குதுபுஸ்ஸித்தா' என்று அழைக்கப்படக்கூடிய புஹாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா போன்ற முக்கியமான ஹதீஸ் கிரந்தங்கள் எழுதப்பட்டன.

ஹதீஸ்களை ஸஹீஹ், ழஈப் என தரம்பிரித்து கூறுகின்ற ஒரு போக்கு இக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது எனலாம். ஏற்கனவே பிற்காலத்து தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களின் காலத்தில் ஹதீஸ்களோடு ஸஹாபாக்களினதும், தாபிஈன்களினதும் மார்க்கத் தீர்ப்புக்கள் ஹதீஸ் கிரந்தங்களில் எழுதப்பட்டன. ஆனால் மூன்றாம் நூற்றாண்டில் அந்த முறை மாறி நபியவர்களின் ஹதீஸ்களை மாத்திரம் தொகுக்கின்ற முறை அறிமுகமானது.

இதுபோன்றே பின்னர் வந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறிஞர்களும் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு பல்வேறு சேவைகளைப் புரிந்துள்ளனர்.



வினா இல - 12
 
ஹதீஸ்களை ஸஹீஹ் , லஈப் என தரம் பிரிக்கும் முறை ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு அறிமுகமானது ?

ஹதீஸ் என்றால் என்ன?

ஹதீஸ்

'ஹதீஸ் என்பது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகரித்த விடயங்கள், அவர்களது அங்க அடயாளங்கள், குணநலன்கள் என்பவையாகும்.

மேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்தை உற்று நோக்கினால் ஹதீஸ் என்பது ஐந்து விடயங்களை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்கலாம்.

1. சொல் : 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றது' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இது நபியவர்களுடைய சொல்லுக்கு உதாரணமாகும். (புஹாரி : 54, முஸ்லிம் : 1907)

2. செயல் : நபியவர்கள் வுழூச் செய்ததை உஸ்மான் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு அவ்வாறே செய்து காட்டினார்கள். இது நபியவர்களின் செயலுக்கு உதாரணமாகும். (புஹாரி : 159, முஸ்லிம் : 226)

3. அங்கீகாரம் : நபியவர்கள் முன்னிலையில் ஒரு நபித்தோழர் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஒரு செயலைச் செய்யும் போது நபியவர்கள்; அதைத் தூண்டாமலும், தடுக்காமலும் மௌனமாக இருந்தால் அது அங்கீகாரம் எனப்படும். மதீனாவில் மஸ்ஜிதுந் நபவிக்கு முன்னால் ஹபஷா (எதியோப்பியா) நாட்டு இளைஞர்கள் பெருநாள் தினத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சமயம் நபியவர்கள் மௌனித்திருந்தமையை உதாரணமாகக் கொள்ளலாம். (புஹாரி : 454, முஸ்லிம் : 892).

4. அங்க அடையாளங்கள் : நபியவர்களின் அங்க அடையாளங்களை ஒரு நபித்தோழர் அறிவித்தால் அதுவும் ஹதீஸீல் உள்ளதாகும், நபியவர்கள் மரணிக்கும் போது அவரது தலையிலோ, தாடியிலோ 20 முடிகள் கூட நரைத்திருக்கவில்லை என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். (புஹாரி : 3458, முஸ்லிம் : 2347)

5. குணநலங்கள் : நபியவர்களுடைய நற்குணங்களைப் பற்றி நபித்தோழர்கள் அறிவித்தால் அதுவும் ஹதீஸில் உள்ளடங்கும். இதற்கு உதாரணமாக நபிகளாருடைய நற்குணங்கள் பற்றி வந்திருக்கும் அனைத்து நபிமொழிகளையும் குறிப்பிடலாம்.



ஹதீஸூடன் தொடர்புபட்ட சொற்கள்

ஸூன்னா – السنة

ஹதீஸ்கலை அறிஞர்கள் ஸூன்னா, ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரே கருத்தில்தான் பயன்படுத்தியுள்ளனர். அதன்படி ஹதீஸுக்குக் கூறப்பட்ட வரைவிலக்கணத்தையே ஸுன்னவிற்கும் கூறியுள்ளனர்.



துறைசார் அறிஞர்களிடத்தில் ஸூன்னாவின் விளக்கம்

1. ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் ஸூன்னா என்பது 'நபி; (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், அவர்களது அங்க அடயாளங்கள், குணநலங்கள் என்பவையாகும்'.

2. அகீதாவுடைய அறிஞர்கள் 'ஸூன்னா என்பது பித்அத்திற்கு புறம்பானதாகும்'. என கூறுகின்றனர். (பித்அத் என்பது மார்க்கத்தில் நபியவர்களது வழிமுறைக்கு மாற்றமான செயல்களாகும்).

3. பிக்ஹூக்கலை அறிஞர்கள் 'வாஜிப் அல்லது பர்ளுக்கு அடுத்த தரத்தில் உள்ளவை ஸூன்னா' எனக் கூறுகின்றனர். (அவசியம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படாத ஏவல்களைக் குறிக்கும்).

4. உஸூலுல் பிக்ஹ் (சட்டக்கலை பெறப்படும் அடிப்படை) அறிஞர்களிடத்தில் ஸூன்னா என்பது 'மார்க்கமாக நபி (ஸல்) அவர்கள் கூறிய, செய்த அங்கிகரித்த விடயங்களாகும்'.

எனவே ஸூன்னா என்ற பதம் மேற்கூறப்பட்ட நான்கு அர்த்தங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றது. மேலும்; துறைசார் அறிஞர்களை அடிப்படையாக வைத்தே அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.



ஹபர் – الخبر

ஹதீஸ்கலை அறிஞர்கள் 'ஹபர்' என்ற சொல்லை ஹதீஸ், ஸூன்னா ஆகியவற்றின் விளக்கம் போலவே பயன்படுத்தியுள்ளனர். எனினும் சில அறிஞர்கள் ஹதீஸ், ஸூன்னா என்பது நபியவர்களுடைய கூற்றாகவும், ஹபர் என்பது நபியவர்களினதும், நபித்தோழர்களினதும் கூற்றுக்களாக கணிக்கின்றனர்.

அதர் – الأثر

ஹதீஸ்கலை அறிஞர்கள் 'அதர்' என்ற சொல்லை ஹதீஸ், ஸூன்னா என்ற கருத்தில் பயன்படுத்தியுள்ளனர். எனினும் பலர் 'அதர்' என்றால் நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின் தொடர்ந்த தாபிஈன்களுடைய கூற்றுக்கள் எனக் கூறுகின்றனர்.



வினா இல - 11
 
பிக்ஹுக்கலை அறிஞர்களிடம் ஸுன்னா என்பது எதனைக் குறிக்கும்?


Assalamu alaikum to all of you.

May Peace and Blessings of Allah be showered upon all His creatures.Aameen.

Going back to my topic on hijab,I wish to speak today what modern hijab is all about..

Although space wouldn't permit me to elaborate all I wish to..I would try my best to pour out all my heart's contents.

Its so pathetic to see the length of the hijab growing short day by day since time immemorial and today it is reduced to the size of a hanky..perhaps, I guess due to financial crisis that every home suffers nowadays.

Why wear such a hijab for the sake of being recognized as a Muslim? Simply loiter without it..it would do just the same.Its no more a hijab.Its only a dress to prevent your hair from being burnt in the sun.

The so - called fashionable hijabs are the rife cause of sexual abuse today.You can never blame the male society alone,afterall, its the show off women that stirred their carnal desires.It is said in a hadith that a woman who applies perfumes and walks down the street is a prostitute.If so, just consider dear sisters,if a simple fragrant smell carries such a gravity of sin, where else shall all the beauty displayed to the wayfarers lead us to... A fashion show case walking down the street,not only bear the sin of committing adultery, instead she has to bear the burden of causing thousands of men guilty of the crime,simply by absorbing the thought of zina in their minds.

The modern muslimahs donned in their tight jeans and tops with a head scarf to prove their identity carry not even the dust in the shoes of Mother Aisha and Fathima (ral).Its a shame on the whole Muslim society.Our Muslim sisters are driven fast towards the western fashion fever and had simply trampled down the traditions brought up by our honoured mothers of Islam.

In the West,women have been reduced almost to a plaything of enjoyment and fancy.They have become objects of exploitation by men and the slogans of liberty have reduced them to playful commodities.Thier scantily clothed bodies have become the hallmark of western materialism.Its so pathetic to see the ummath of Muhammad (sal) walking in thier pathway.

The result of this, is the cause of many of our regrets today.The social balance is destroyed.Instead of flourishing, the society carries many insoluble problems such as broken marriages,single parent families and break ups in family life.These issues are already ripe in the western society and now had gathered strength to creep into the Islamic world too.School -girl pregnancies,increase in abortions and divorce rates are the result of the so-called freedom of women championed by feminists. They have neither gained liberty nor achieved full equality;rather they have lost their natural place in the home.

The natural balance, fairness and mutuality have been lost.The outcome has been horrendous for peace and stability.

Hereby I declare,the right hijab that Islam urges every Muslim girl having reached puberty to follow,is to cover her whole body from top to bottom.It shouldnt be tight fitting nor transparent nor should it carry excessive decorations to capture the sights of strange men.

I pray Almighty Allah to grant all of us the opportunity to adhere to the right hijab. Aameen.May He make all of us among the righteous women. Aameen...

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் முக்கிய 10 செயல்கள்

ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு முரணாக செய்யும் சில செயல்கள் அல்லது சொல்லும் சில சொற்கள் அவனை இஸ்லாம் என்ற உண்மையான மார்க்கத்தை விட்டும் வெளியேற்றி விடுகிறது. எனவே அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவதால் அவனது உடல் பொருளுக்கு இஸ்லாம் உத்தரவாதம் அளிக்காது. ஆகவே தான் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுகின்ற காரணங்களுள் மிகத் தீயதும் பயங்கரமானதுமான முக்கிய பத்துக் காரியங்களை மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவற்றிலிருந்து முழுமையாக நாம் விலகுவதுடன் மற்றவர்களையும் விலக்கிப் பாதுகாப்புப் பெறுவதற்காக அவற்றை இறை வசனங்களின் துணையுடன் சுருக்கமாக பார்ப்போம்.

1. அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்ற வேண்டிய வணக்க, வழிபாடுகளில் இன்னுமொருவரை கூட்டு சேர்த்தல்.

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்'. (அல்குர்ஆன் - 04 : 48)

2. அடியான் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இடைத்தரகர் ஒருவரை ஏற்படுத்தி தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுமாறு அவரிடம் கோருதல்.

'தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும்'. (அல்குர்ஆன் - 10 : 18)

3. இணை கற்பிப்பவர்களை காபிர்கள் என கருதாமல் இருத்தல் அல்லது அவர்கள் காபிர்களா என சந்தேகித்தல் அல்லது அவர்களின் வணக்கங்களை சரி காணுதல்

'இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்'. (அல்குர்ஆன் - 03 : 85)

4. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலை விட ஏனையோரின் வழிகாட்டல்கள் தான் பரிபூரணம் என நம்புதல், அல்லது நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை விட ஏனையோரின் தீர்ப்பே சிறந்தது என நம்புதல்.

'அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை'. (அல்குர்ஆன் - 12 : 40)

5. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத்திலிருந்து ஏதேனும் ஒன்றை வெறுத்தல். அதனை அவன் (அமலாக) செய்து கொண்டிருந்தாலும் சரியே!

'ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்'. (அலகுர்ஆன் - 47 : 09)

6. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திலுள்ள ஏதாவது ஒன்றையோ அல்லது அல்லாஹ்வின் பிரதிபலனையோ, தண்டனையையோ கேலி செய்தல்.

'நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் 'நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும் தான் பேசிக் கொண்டிருந்தோம். என்று கூறுவார்கள். அவர்களிடம் நீர் கூறும் 'அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும் தான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமா?. போலிக் காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள்'. (அல்குர்ஆன் - 09 : 65,66)

7. சூனியம் செய்தல்; இதன் மூலம் நல்ல தொடர்புகளைப் பிரித்தல், தீயவற்றை ஆசையூட்டல்.

'அவர்கள் இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காபிர்கள் ஆகிவிடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை'. (அல்குர்ஆன் - 02 : 102)

8. முஷ்ரிக்குகளை ஆதரிப்பதும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவுதலும்.

'முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான் நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்'. (அல்குர்ஆன் - 05 : 51)



9. சிலருக்கு நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் இருக்கலாம் என நம்புதல்.

'இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்'. (அல்குர்ஆன் - 03 : 85)

10. அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்றறிய முற்படாமையும் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்காமையும்.

'எவர் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவுபடுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்'. (அல்குர்ஆன் - 32 : 22)

இஸ்லாத்தை முறிக்கும் மேற்கூறிய செயல்களை வேண்டுமென்று செய்வதற்கும் விளையாட்டாக செய்வதற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர. மேலும் நம்மை அறியாமலே இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் இது போன்ற விடயங்களிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!.



வினா இல - 10
இஸ்லாத்தை முறிக்கும் செயல்கள் இரண்டை ஆதாரத்துடன் குறிப்பிடுக .






முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்வதற்கான நிபந்தனைகள்

01. நபி ள அவர்களை உண்மைப்படுத்தல்.

அல்லாஹ் கூறுகிறான், 'அவர் தனது இச்சைப்படி எதையும் பேசுவதில்லை'. (அல்குர்ஆன் - 53 : 3,4)

02. நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.

அல்லாஹ் கூறுகிறான், (நபியே!) நீர் கூறும் 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்'. (அல்குர்ஆன் - 03 : 31)

03. நபி (ஸல்) அவர்களை நேசித்தல்.

அல்லாஹ் கூறுகிறான், 'உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்' என்று கூறுவீராக!'. (அல்குர்ஆன் - 09 : 24)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'உங்கள் பெற்றோர், பிள்ளைகள், ஏனையவர்களை விடவும் ஒருவருக்கு நான் பிரியமானவனாக ஆகாத வரை உங்களில் யாரும் பரிபூரண ஈமான் கொண்டவராக ஆக முடியாது'. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம் - புஹாரி : 15, முஸ்லிம் : 44)

04. நபியவர்கள் காட்டிய வழியில் அல்லாஹ்வை வழிப்படுதல்.

அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீர் கூறும் 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்'. (அல்குர்ஆன் - 03 : 31)

05. நபியவர்களை துன்புறுத்தாது இருத்தல்.

அல்லாஹ் கூறுகிறான். 'எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்;. மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்'. (அல்;குர்ஆன் - 33 : 57)

இங்கு துன்புறுத்தல் என்ற சொல் நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த மார்க்கத்தையும், அவரது வழிமுறையையும் கேலி செய்வதையும், அவரது குடும்பத்தார்கள், முஃமின்களின் தாய்மார்களாக திகழும் அவரது மனைவிமார்களை இழிவுபடுத்தி, அவர்களுக்கு தூற்றித் திரிவதையும் குறிக்கும்.

06. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுதல்.

அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் இந்த நபிக்கு ஸலவாத்து கூறுகிறான். வானவர்களும் அவருக்காக ஸலவாத்து கூறுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்!'. (அல்குர்ஆன் - 09 : 56)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'யார் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொல்கிறாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்கிறான்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதராம் - முஸ்லிம் : 408)

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸலவாத் என்ற சொல் இரண்டு பொருள் கொண்டதாகும். ஒன்று, அல்லாஹ் அருள் புரிதல். மற்றொன்று, அல்லாஹ்விடத்தில் அருளை வேண்டுதல். அதனடிப்படையில் இந்த ஹதீஸுக்கான பொருளைக் கவனித்தால், யார் என் மீது ஒரு முறை அருளை வேண்டுகிறாரோ, அல்லாஹ் அவருக்கு 10 முறை அருள் புரிகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்களுக்கு பின்வருமாறு ஸலவாத்துச் சொல்வது தான் மிகவும் ஏற்றமானது

'அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின், வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம, வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்'

பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் மீதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் மீதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். (அறிப்பவர் - கஃப் இப்னு உஜ்ரா (ரலி) , ஆதாரம் - புஹாரி : 6357, முஸ்லிம் : 406)

(இது ஹதீஸில் இடம் பெற்றுள்ள ஸலவாத்தாகும். இது தவிர்ந்த ஸஹீஹான அடிப்படையில் வந்துள்ள முறைகளிலும் ஸலவாத் சொல்லலாம்).

வினா இல - 09
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வதன் சிறப்பு பற்றிய ஓர் ஹதீஸை குறிப்பிடுக?

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று சாட்சி கூறுதல்

முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாக சாட்சியம் கூறுவதில் உள்ளடங்குபவை :

1. அவர் ஏவியவைகளை எடுத்து நடத்தல்.

2. விலக்கியவைகளை விட்டும் தவிர்ந்து நடத்தல்.

3. அவர் அறிவித்தவற்றை உண்மைப்படுத்தல்

4. அவர் காட்டித்தந்த விதத்தில் அல்லாஹ்வை வணங்குதல்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் அடியார், அவர்கள் மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்ட தூதர் என்று உள்ளும், புறமும் ஏற்றுக்கொள்வதும், அதற்கமைவாக செயற்படுதலுமே இதன் பொருளாகும்.

இவர் குறைஷிக் குலத்தை சேர்ந்த முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் ஆவார்கள். இவர்கள் இப்றாஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் பரம்பரையில் வந்த அரபினத்தைச் சேர்ந்தவர்களாவர்.

(ரஸூலுல்லாஹ்) என்பதற்கு, அல்லாஹ்வின் தூதர் என்று பொருளாகும். இவர் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் நன்மாராயம் கூறி எச்சரிக்கை செய்பவராக அல்லாஹ்வால் அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான், 'இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயம் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை'. (அல்குர்ஆன் - 34 : 28)

மேலும் இறுதி நபியாகவும் அல்லாஹ் அவரை அனுப்பி வைத்தான். 'முஹம்மது (ஸல்) அவர்கள்- உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை எனினும் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார்'. (அல்குர்ஆன் - 33 : 40)

முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையோடு முன்னர் அருளப்பட்ட அனைத்து வேதங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே இவர் கொண்டு வந்த மார்க்கத்தைத் தவிர வேறெதனையும் பின்பற்ற முடியாது. இவர் கூறியதைத் தவிர வேறெதையும் செய்து சுவனம் செல்லவும் முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, எனது சமூகத்தில் யஹூதியோ, நஸ்ரானியோ நான் சொல்வதைக் கேட்காமலும், நான் அனுப்பப்பட்ட நோக்கத்தை விசுவாசம் கொள்ளாமலும் மரணித்தால் அவர் நரகவாசியைத் தவிர வேறெவருமில்லை'. (அறிவிப்பவர் - அபூஹூரைரா (ரலி), ஆதாரம் - முஸ்லிம் : 153)



வினா இல - 08
 
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ?



அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று சாட்சியம் கூறுதல்

உண்மையாகவே வணங்கி வழிபட தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கோட்பாட்டை மனதால் ஏற்று, அதில் உறுதியாய் நின்று, செயலில் கொண்டுவருவதையே இக்கோட்பாடு குறித்து நிற்கின்றது. இங்கு நாம் 'உண்மையாக' என்ற வார்த்தையைச் சேர்க்கக் காரணம் இப்பூமியில் அசத்தியமாக வணங்கப்படக்கூடிய கடவுள்கள் நிறைய உள்ளன என்பதாலேயே ஆகும். இதன் சரியான விளக்கத்தைப் பின்வருமாறு கூறலாம்.

( الله) : அல்லாஹ் என்ற சொல் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரிய பெயராகும். இது அவனையன்றி வேறு எவருக்கும் சொல்லப்படமாட்டாது. இது ( إله ) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் வணக்கத்திற்குரியவன் என்பதாகும்.

அல்லாஹ் அல்லாதவைகளை மறுப்பதும், ஒரு கடவுளை ஏற்றுக்கொள்வதும் 'அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன்' என்ற சாட்சியத்தின் இரு பிரதான நிபந்தனைகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான். 'எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) தாகூத்தை நிராகரித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்து போகாத பலமான கயிற்றை பற்றிப் பிடித்துக் கொண்டவராவார்'. (அல்குர்ஆன் - 02 : 256)

இதில் 'எவர் வழி தாகூத்தை நிராகரித்து' என்ற பகுதி முதலாவது நிபந்தனையாகவும், 'அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ' என்ற பகுதி இரண்டாவது நிபந்தனையாகவும் இருப்பதை பார்க்கலாம்.



லாஇலாக இல்லல்லாஹ் என்ற சாட்சியத்தை சொல்வதன் நிபந்தனைகள்

'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற வாசகத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின் அவர் பின்வரும் நிபந்தனைகளைப் பேணி நடக்க வேண்டும்.

1. லாஇலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை அறிந்து, அக்கலிமா எதனை வலியுறுத்துகிறதோ அதில் உறுதியாகவும், உண்மையாளராகவும் இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான், 'ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்; இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக'. (அல்குர்ஆன் - 47 : 19)

அல்லாஹ் கூறுகிறான், 'நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளமாட்டார்கள்'. (அல்குர்ஆன் - 49 : 15)



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'யார் ஓர் அடியான் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என சாட்சி கூறி, அதை தன் உள்ளத்தால் உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிடுகின்றான்'. (ஆதாரம் - அஹ்மத் : 22060)

2. இக்கலிமாவை உள்ளத்தாலும், நாவாலும் ஏற்று, உறுப்புக்களால் செயற்படுத்த வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ்வைத் தவிர கடவுள் இல்லை' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். 'ஒரு பைத்தியகாரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்'. (அல்குர்ஆன் 37 : 35,36)

அல்லாஹ் கூறுகிறான், 'எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான்'. (அல்குர்ஆன் - 31 : 22)

3. அக்கூற்றில் உளத்தூய்மையுடன் செயற்பட வேண்டும்.

நபி ள அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கூறி, அல்லாஹ்விற்காக வேண்டி யார் அதை நிறைவேற்றுவாரோ அல்லாஹ் அவருக்கு நரகை ஹராமாக்குகிறான்'. (புஹாரி : 425, முஸ்லிம் : 33)

4. அக்கூற்றின்படி செயற்படுவோரையும், அதன்பால் அழைப்போரையும், நேசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்'. (அல்குர்ஆன் - 02 : 165)



வினா இல - 07
 
லாஇலாக இல்லல்லாஹ் என்ற சாட்சியத்தை சொல்வதன் நிபந்தனைகள் நான்கையும் சுருக்கமாக கூறுக?

இறைமைக் கோட்பாடு (தவ்ஹீதுல் உலூஹிய்யா)

03. தவ்ஹீதுல் உலூஹிய்யா அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் முன்றாவது விடயமாகும்.

வணக்கங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதலை தவ்ஹீதுல் உலூஹிய்யா குறிக்கின்றது. இதற்கு உதாரணமாக பிரார்த்தனை செய்தல், தொழுகை, பாதுகாப்பு கோருதல், தவக்குல் வைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

அல்லாஹ் கூறுகிறான், 'ஆகவே அல்லாஹ்வுடன் வேறு கடவுளை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்'. (அல்குர்ஆன் - 17 : 39).

இறைமைக் கோட்பாடு அனைத்து விடயங்களை விடவும் சிறந்தது. மனிதனின் சீரான நிலையை நிர்ணயிக்கக்கூடியது. இதற்காகவே அல்லாஹ் மனிதர்களையும், ஜின்களையும் படைத்தான். அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களும் இதனையே போதித்தார்கள்.

அல்லாஹ் கூறுகிறான், (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: 'நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை'. (அல்குர்ஆன் - 21 : 25).

அல்லாஹ் கூறுகிறான், இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை'. (அல்குர்ஆன் - 51 : 56)

எல்லா மதங்களும் இறைக்கோட்பாட்டை கூறினாலும் இஸ்லாம் மாத்திரமே இவற்றில் தனித்து விளங்குகின்றது.

வணக்கம் என்பது அல்லாஹ் ஏவிய வெளிப்படையான, மறைமுகமான சொல், செயற்பாடுகளை குறிக்கின்றது. அது உள்ளத்தாலும், நாவாலும், உடலாலும் செய்யப்படுவதாகும். அச்சம், எதிர்பார்ப்பு போன்றன உள்ளத்தாலும்;, அல்லாஹ்வை துதிப்பது, குர்ஆன் ஓதுவது போன்றன நாவாலும், தொழுகை, ஹஜ் போன்றன உடல் உறுப்புக்களாலும் நிகழ்கின்ற வணக்கங்களாகும்.

அல்லாஹ்வுக்கு மாத்திரமே நிறைவேற்ற வேண்டிய இவ்வணக்கங்கள் அனைத்தையும் பிறருக்கு நிறைவேற்றும் போது அல்லாஹ்வின் அனைத்து வல்லமைகளும் பிறருக்கும் இருப்பதாய் எண்ணி செயற்பட தூண்டுகின்றன. அல்லாஹ்வோடு அவர்களை இணையாக்கிய பாவத்தை ஏற்படுத்துவதோடு அதற்காக தண்டனையை மறுமையில் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.



இறைமைக் கோட்பாட்டில் இணைவைத்தலின் தோற்றம்

மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபாடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக் கொள்கைக்கு மாறினானா? என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

'நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன். ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை விட்டும் அவர்களைத் திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப்பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது என்று காட்டிவிட்டான்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி ள அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இயாழ் இப்னு ஹிமார் ன, ஆதாரம் - முஸ்லிம் : 2865)

ஆதம் (அலை) அவர்களது காலம் முதல், நூஹ் (அலை) அவர்களது காலம் வரை 10 நூற்றாண்டுகளாக மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய நபி மொழி தெளிவுபடுத்துகின்றது.

(தவ்ஹீதை) ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு உயர்த்தியமையே 'ஷிர்க்' (இணை வைத்தல்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

'நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் 'வத்து' 'சுவாவு' 'யஹூஸு' 'யஊக்' 'நஸ்ர்' ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!' என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர்) கூறினார்கள்'. (அல்குர்ஆன் - 71 : 23)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள ' 'வத்து' 'சுவாவு' 'யஹூஸு' 'யஊக்' 'நஸ்ர்' ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள் மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர் பின்னர் அடுத்த தலைமுறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர்' என்று இப்னு அப்பாஸ் ன அவர்கள் விளக்கமளித்துளளார்கள். (ஆதாரம் - புஹாரி : 4920)

அன்று நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க காரணம் எதுவோ, அதே காரணத்தால்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய மார்க்கத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்கத்து குறைஷிகளும் இணைவைப்பில் விழுந்தார்கள். அம்ரு பின் லுஹைய் என்பவன் ஸிரியாப் பகுதிக்குச் சென்ற வேளை அங்கு மக்கள் சிலைகளை வைத்து வணங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்களிடமிருந்து ஹூபல் எனும் சிலையை வாங்கி வந்து கஃபாவில் வைத்து குறைஷிகளை வணங்கவும், தமது தேவைகளை கேட்கவும் தூண்டினான். அதன் பின்னர் லாத், உஸ்ஸா, மனாத் போன்ற நல்ல மனிதர்களின் உருவச் சிலைகளை வணங்கலானார்கள். (ஆதாரம் - புஹாரி : 4623, முஸ்லிம் : 2856)


அதே வழித்தோன்றலில் தான் இன்றும் முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய பிரார்த்தனையை தாம் நல்லடியார்களாகக் கருதும் மரணித்த சிலரிடம் வேண்டுகின்றனர். அவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். அவர்களின் பெயரில் நேர்ச்சை வைக்கின்றனர். எனவே நபி நூஹ் (அலை) அவர்களது காலத்து இணைவைப்பு, ஜாஹிலிய்யா காலத்து இணைவைப்பு, நவீன கால இணைவைப்பு அனைத்தும் நல்லடியார்கள் மீது அளவு கடந்து மோகம் கொண்டதன் வெளிப்பாடாகவே உள்ளன.

குறிப்பு

அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் உள்ளடங்கும் நான்காவது விடயம். அல்லாஹ்வின் பெயர், பண்களில் அவனுக்கு நிகர் ஏற்படுத்தாது ஒருமைப்படுத்துவதாகும். இது பற்றி எமது இந்நூலின் இரண்டாம் பாகத்தில் விரிவாக கற்போம்.



வினா இல - 06

தௌஹீதுல் உலூஹிய்யா என்றால் என்ன ?

(முஹம்மது வஸீம் ஹுஸைன்) 
தற்போதைய காலகட்டத்தில் உலகமெங்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சிறப்பு பொருந்திய மாதமாகிய ரமழானில் நோன்புநோற்று நன்மையான காரியங்களில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறோம். இரவில் நின்று வணங்குதல்,சுன்னத்தான தொழுகைகளை பேணி நிறைவேற்றுதல், என நன்மைகளை கொள்ளையடிக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். 

அதேரமழான் மாதத்தில் இஸ்லாம் மிகமுக்கியமான ஸதகா என்ற இபாதத்தை செய்யுமாறு எமக்கு வலியுறுத்துவதை பார்க்கலாம். இந்த ஸதகாவை பொறுத்தவரையில் பணக்காரன், ஏழை, என்ற வித்தியாசமின்றி எந்த நேரத்திலும் எந்தப் பொருளையும் கொடுக்க முடியும். ஸதகா செய்கின்ற போது அது மனிதனுடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவது மட்டுமன்றிபிறருடைய கஷ்டத்தில் பங்கெடுத்தமைக்காக இறைவனிடத்தில் மிகப் பெரிய நற்கூலியும் உண்டு என்பதும் மிகப் பெரும் உண்மையாகும். ஸதகா கொடுக்கின்ற போது எடுப்பவரும்,வழங்குபவருக்குமிடையே மனரீதியான ஒற்றுமை ஏற்படுவதை அவதானிக்கலாம். குரோதம்,காழ்ப்புணர்வு போன்ற தீய எண்ணங்கள் ஒரு மனிதன் குடும்ப உறுப்பினருக்காக ஸதகா செய்யும் போது நீங்குவதை அவதானிக்கலாம். 

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்றுமரணித்துவிட்டார்.அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம்செய்திருப்பார். எனவே,அவருக்காக நான்தர்மம்செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்றுகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். 

(புஹாரி 1388) 

மேலுள்ள செய்தியில் மரணித்த எமது உறவுகளுக்காக நாம் ஸதகா செய்கின்ற போது நிச்சயமாக அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வான் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே புனித மிகு ரழமான் மாதத்தில் நாம் எம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்காக வேண்டி ஸதகா செய்கின்ற போது அது மரணித்த உயிர்களுக்கும் கப்ரில் பயனளிப்பதோடு வழங்கிய எமக்கும் நன்மை இருக்கின்றது. 

ஆனால் இன்று எம்மில் பலர் ஸதகா என்ற இபாதத்தை வெறும் சில்லறைக் காசுகளுக்குள் மாத்திரம் சுருக்கிக் கொண்டுள்ளதை பார்க்கிறோம். வீட்டிற்கு பிச்சை கேட்டு வருபவர்களுக்கு 05 அல்லது 10 ரூபாக்களை வழங்கிய பின்னர் ஸதகா செய்து விட்டதாக நாமே நமக்குள் ஓர் வட்டத்தை உருவாக்கி இஸ்லாம் ஏவிய ஸதகாவை செய்யாது விடுகிறோம். இது மாபெரும் தவறாகும். ஸதகா என்பது கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கும் பிச்சையன்று. மாறாக தேவையுடைய மக்களை இனம் கண்டு இறைவனுடைய திருப்தியை மாத்திரம் நாடி செய்யப்படுவதே ஸதகா ஆகும். இவ்வாறு நாம் ஸதகா செய்கின்ற போது அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய முஃமினாக எம்மை தரமுயரத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம்செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒருகாலம் வரும். அப்போது ஒருவன்தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டுஅலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றேஇதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அதுஎனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்.' 
ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்கள். 

(புஹாரி1411) 

மேலுள்ள நபி மொழியானது எதிர்காலத்தில் ஸதகா என்ற ஒரு மகத்துவம் மிக்க இபாதத் ஒன்று எம்மை விட்டும் அகலக் கூடிய நிலை ஏற்படும் என்பதை சூசகமாக குறிப்பிடுவதை அவதானிக்கலாம். எனவே கால நேரம் பாராது செய்ய வேண்டிய ஸதகாவை நாம் இன்னும் இன்னும் தாமதப்படுத்தாமல் இக்கணமே நிறைவேற்ற தயாராக வேண்டும். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்கள். (புஹாரி 1417) 

இச் செய்தி ஸதகா செய்வது எம்மை நரகில் இருந்து பாதுகாப்பதாக நபியவர்கள்கூறியுள்ளார்கள். நாம் செய்கின்ற ஸதகா நரகில் இருந்து எமக்கு விடுதலையளிக்ககூடிய ஓர் அமல் என்பதால் அதனுடைய மகத்துவமும் தாற்பாரியமும் அளப்பரியது.

மேலும் நபியவர்கள் ஸதகாவை விரைவு படுத்தி செய்யுமாறு ஏவுவதை பலஇடங்களில் பார்க்கலாம். குறிப்பாக மரணம் வரும் வரை கொடுக்கலாம் என வைத்துவிட்டு உயிர் தெண்டைக் குழியை அடையும் வரை காத்திருந்து வழங்குவதில் எந்தப்பயனுமில்லை. இதனை கீழ் கண்ட நபி மொழி எச்சரிப்பதை அவதானிக்கலாம். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிகநன்மையுள்ளதர்மம்எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள்தேவைஉடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசைஉள்ளவராகவும்இருக்கும் நிலையில்தர்மம்செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம்செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம்.அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும்அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்றுஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1419) 

ஆரோக்கியமானவராக இருக்கின்ற நிலையில் செய்கின்ற ஸதகாவிற்கும் வறுமைக்கு பயந்து அதிகமாக செல்வத்தை சேகரிக்கின்ற நிலையிலும் நாம் ஸதகா செய்கின்ற போது தான் அல்லாஹ் எதிர்பார்க்கின்ற கொடையாளிகளாக நாம் மாற முடியுமே தவிர மற்ற நேரங்களில் செய்யும் ஸதகா எம்மை சில வேளைகளில் முகஸ்துதிக்காக செய்கின்ற நிலையை ஏற்படுத்தலாம். 

நாளை மறுமையில் நிழலே இல்லாத மஹ்ஷர் பெருவெளியில் அல்லாஹ் 07கூட்டதாருக்கு நிழல் வழங்குகிறான். அதில் ஸதகா செய்பவர்களும் அடங்குகின்றனர். இது அல்லாஹ் ஸதகா செய்பவர்களுக்கு வழங்குகின்ற மிகப் பெரிய வெகுமதியாகும். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடையநிழலில்அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்கஅரசன்.அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.பள்ளிவாசல்களுடன்பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவேநேசித்து, அவனுக்காகவேஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும்அந்தஸ்தும் உள்ள ஒரு பெண்தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக்கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகதர்மம்செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். 

(புஹாரி 1423) 

எனவே ஸதகா செய்வதற்கு ஏழைகள் எங்குள்ளனர் என தேடித்திரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கணவன் தன் மனைவி மக்களுக்காக செய்கின்ற செலவீனங்கள் கூட ஸதகாவாகும். அந்த அடிப்படையில் கணவனாக இருக்கின்றவர்கள் தனது மனைவி மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமாக நன்மைகளை அடையலாம். குடும்பத்தில் எம்மை விட வசதி குறைந்த சொந்தங்கள் இருக்கலாம் அவர்களுக்காக ஸதகா செய்யலாம். எமது நண்பர்கள் கஷ்டத்தில் இருக்கலாம் அப்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து மாத்திரம் ஸதகா செய்கின்ற போது அல்லாஹ்விடத்தில் நாம் உயர்ந்தவர்களாக காணப்படுவோம். 

மேலும் நம்மில் சிலர் பிரதி பலனை எதிர்பார்த்து ஸதகா செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக திருமண பந்தத்தில் இணைந்த நண்பர்களுக்கு 5000 ரூபாய் நாம் அன்பளிப்பாக வைத்து விட்டு எமது குடும்ப நிகழ்வுகள் என்று வருகின்ற போது அவன்10,000 ரூபாய் வைப்பான் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்கின்றோம். இது எந்தவகையான ஸதகா சகோதரர்களே! இது தான் இஸ்லாம் சொல்லும் ஸதகாவா?இப்படியான நடைமுறை எமது உறவுகளுக்கிடையே பல விரிசல்களையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துமே தவிர வேறொன்றும் இதில் கிடையாது. இப்படியான செயற்பாடுகளால் அதிகமாக அன்பளிப்பு செய்ய முடியாமல் திருமண நிகழ்வுகளுக்கு செல்லாமல் குடும்ப உறவுகள் முறிக்கப்பட்ட சம்பவங்களே அதிகம் நிகழ்ந்துள்ளன. இவ் விடயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். 

இறுதியாக அல்லாஹ் கூறுகிறான். 

நம்பிக்கையாளர்களே! (தர்மம்செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும்,நாம் உங்களுக்குப்பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வைகளிலிருந்தும்நல்லவைகளையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளைக் கொடுக்கவிரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர்கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாக அன்றி வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்குதர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், மிக்கபுகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். 

மேலுள்ள வசனம் ஸதகா எப்படி கொடுக்க வேண்டும் என கூறுவதை பார்க்கலாம். சிலர் ஸதகா செய்கின்றனர். ஆனால் அதில் குறைகள் இருக்கின்றன. ஆடைகளை அன்பளிப்புச் செய்கின்றனர். அதனை அவர்கள் விரும்பாமல் பழையது தானே என கொடுக்கின்றனர். இப்படியான ஸதகாக்கள் மூலம் எவ்வித பயனுமில்லை. எனவே நாம் விரும்பாத நமக்கு தற்போது தேவையற்றது என்ற பொருட்களை தர்மமாக கொடுக்காதீர்கள். நமக்கு அத்தியவசியமானவை மற்றும் நமக்கு பயன்படுகின்ற பொருட்களை ஸதகா செய்யுங்கள். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸதகாவாக மாறும். 

ஒரு மனிதன் மரணித்தால் அவனது கப்று வாழ்க்கையில் பயனளிக்க கூடியவற்றில் அவன் செய்த நிலையாக ஸதகாவும் ஒன்றாகும். எனவே இஸ்லாம் எதிர்பார்க்கும் வகையில் எமது ஸதகாக்களை வழங்கி நன்மைகள் அதிகம் பொருந்திய இம் மாதத்தில் அதிகம் ஸதகா செய்த மக்களாக நாமும் மாற வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக...

ஈமானின் அடிப்படைகள் (ருகுன்கள்)

ஈமானைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம். உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு, நாவினால் மொழிந்து, உறுப்புக்களால் செயற்படுத்துவதே ஈமான் ஆகும். இது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் மூலம் அதிகரிக்கின்றது. அவனுக்கு மாறு செய்வதன் மூலம் குறைவடைகின்றது.

ஈமான் கொள்ள வேண்டிய அம்சங்கள் ஆறாகும். அவை அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், ரஸூல்மார்கள், மறுமை நாள், கழா கத்ர் முதலியவற்றை நம்புதல் ஆகும்.

'(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஜிப்ரில் (அலை) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும், விதியை முழுமையாக நம்புவதும் ஆகும் என்று கூறினார்கள்'. (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) (அறிவிப்பவர் உமர் (ரலி) , ஆதாரம் - முஸ்லிம் : 08)



அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல்

அல்லாஹ்வை ஈமான் கொள்வது பல விடயங்களை உள்ளடக்குகின்றன.

01. அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்றல். அதனை பின்வரும் நான்கு விடயங்கள் மூலம் அறியலாம்.

1. சுபாவம் : ஒவ்வொரு படைப்பும் சிந்திக்காமல், கற்றுக்கொள்ளாமல் அவற்றை படைத்த ஒருவன் இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ளும் சுபாவத்திலேயே படைக்கப்பட்டுள்ளன. ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'ஒவ்வொரு பிறப்பும் (படைத்தவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளும்) சுபாவத்திலேயே பிறக்கின்றன. எனினும் அவர்களது பெற்றோர்கள் தான் அவர்களை யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றுகின்றனர்'. (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) ஆதாரம் - புஹாரி : 1359)

2. அறிவு : தற்போதுள்ள, முன்னர் உண்டான படைப்புகள், இதற்கு பின்னர் படைக்கப்பட இருப்பவைகள் அனைத்திற்கும் படைத்தவன் ஒருவன் இருப்பது அவசியமே. ஏனெனில் எந்த ஒரு பொருளும் தன்னைத் தானே படைத்துக் கொண்டது என்றோ அல்லது இயற்கையாகவே உண்டானது என்றோ கூற முடியாது. பகுத்தறிவிற்குரிய இந்த அத்தாட்சியை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது 'அவர்கள் அடிப்படையின்றி படைக்கப்பட்;டார்களா? அல்லது அவர்களை (அல்லாஹ் தான்) படைத்தானா?'. (அல்குர்ஆன் - 52 : 35)

3. இறைவேதங்கள் : இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் அவனது படைப்புக்களுக்கு தேவையான, நீதியான சட்டங்களையே வழங்கிக் கொண்டிருக்கின்றன. இது படைப்பிற்கு என்ன தேவைகள் இருக்கின்றன என்ற தெளிவான அறிவை படைத்தவன் பெற்றிருக்கிறான் என்பதை உணர்த்துகிறது.

4. உணர்வுகள் : உணர்வுகளும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக இரண்டு விதங்களில் அமைகின்றன. அவை

முதலாவது : பிராத்திப்பவனின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவது, கஷ்டத்திற்குள்ளானவர்களுக்கு உதவியளிக்கப்படுவது போன்ற விடயங்களை நாம் பார்த்தும், கேட்டும் வருகின்றோம். இவையும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை உணர்த்துகின்றன.

இரண்டாவது : நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட முஃஜிஸாத் எனும் அற்புதங்கள். உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தடியைக் கடலில் அடித்ததும் அது இரண்டாகப் பிளந்தது. மரணித்தவர்களை ஈஸா (அலை) அவர்கள் உயிர்பெறச் செய்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டாகப் பிளக்கச் செய்தது. என்பவற்றைக் குறிப்பிடலாம்.



பரிபாலனக் கோட்பாடு (தவ்ஹீதுர் ருபூபிய்யா)
02. அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் இரண்டாவது விடயமாக பரிபாலண கோட்பாடு இருக்கின்றது.

அது அல்லாஹ்வை அவனுடைய செயற்பாடுகளில் ஒருமைப்படுத்தல் என்பதாகும். இதற்கே ருபூபிய்யா என கூறப்படும். உதாரணமாக உணவளித்தல், ஆட்சிபுரிதல், கொடுத்தல், தடுத்தல், நன்மை, தீமையை ஏற்படுத்தல், மனிதனை உயிர்ப்பித்து, மரணிக்கச் செய்தல் போன்ற அவனது செயற்பாடுகளை குறிப்பிடலாம். அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்'. (அல்;குர்ஆன் - 39 : 62). 


இஸ்லாம் மற்றும் பகுத்தறிவு சார்ந்த சான்றுகள்
இவ்வுலகையும் அதில் உள்ளவைகளையும் பற்றி சிந்தித்தால் படைத்து, பரிபாலிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அல்லாஹ் கூறுகிறான், 'நிச்சயமாக இது உண்மை என்பது அவர்களுக்கு தெளிவாகும் வரை பல பாகங்களிலும் அவர்களுக்குள்ளேயும் நமது அத்தாட்சிகளை நாம் அவர்களுக்கு காட்டுவோம். நிச்சயமாக உமது இரட்சகன் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்கள் விடயத்தில் போதுமானதாக இல்லையா?'. (அல்குர்ஆன் - 41 : 53)

அல்லாஹ் கூறுகிறான் 'எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் படைக்கின்றவர்களா?. அல்லது அவர்கள் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தனரா? மாறாக, அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள.; அல்லது அவர்களிடம் உமது இரட்சகனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது (அவற்றை) அவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களா?'. (அல்குர்ஆன் - 52 : 35,36,37)

பரிபாலனக் கோட்பாட்டை இணைவைப்போரும் ஏற்றிருந்தனர்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் கூட அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாட்டை ஏற்றிருந்தனர். ஆனால் சிலர் அதனை மறுத்துள்ளனர் என்பதை அல்லாஹ் எமக்கு படிப்பினையாக எடுத்துக் கூறுவதை அல்குர்ஆனில் அவதானிக்கலாம்.

அல்லாஹ் கூறுகிறான் 'பின்னர் நானே உங்களது உயர்ந்த இரட்சகன் எனக் கூறினான்'. (அல்குர்ஆன் - 79 : 24)

இவ்வசனத்தில் பிர்அவ்ன் தன்னை இரட்சகனாக கூறியதை விளங்கலாம். மேலும் நாத்திகர்கள், இப்ராஹீம் நபியுடன் வாதாடியவன் போன்ற சிலரும் இதை மறுத்துள்ளனர். அதேபோன்று சிலைகள், கற்கள் போன்றவற்றை வணங்கி அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தனர். சிலைகளை தமக்கும், அல்லாஹ்வுக்கும் மத்தியில் நெருக்கத்தையும், தொடர்பையும் ஏற்படுத்தக் கூடிய இடைத்தரகர்களாக பயன்படுத்தினர்.

அல்லாஹ் கூறுகிறான் 'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், அல்லாஹ் என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!' என்று நீர் கூறுவீராக எனினும், அவர்களில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள்'. (அல்குர்ஆன் - 31 : 25)

அல்லாஹ் கூறுகிறான் இன்னும், அவர்களிடம் 'வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் கேட்பீராயின் 'அல்லாஹ்' என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) 'அல்ஹம்துலில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது' என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்'. (அல்குர்ஆன் - 29 : 63)


வினா இல - 05
ஈமானின் வரைவிலக்கணம் என்ன ?

அகீதாவில் உள்ள கலைச்சொற்கள்

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்


அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தினர் என்போர் வெற்றி பெற்ற கூட்டத்தினர் ஆவார்கள். இவர்கள் எவ்வித நெறிபிறழ்வுகளும் இன்றி 'தனது வழியிலும், தனது தோழர்கள் சென்ற வழியிலும் பயணிப்பார்கள்' என நபி (ஸல்) அவர்களே முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். இவர்கள் அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் மாத்திரம் தமது வாழ்வில் எடுத்து நடந்து, வழிகெட்ட கொள்கைகளின் பாதையை விட்டும் தூரமாகி நடப்பார்கள். சுமார் 14க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் மூலம் இந்த சமூகமும் முன்சென்றோரைப் போன்றே பல பிரிவுகளாகப் பிரியுமென நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'யூதர்கள் 71 கூட்டங்களாகப் பிரிந்தனர், கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தனர், எனது சமூகம் 73 கூட்டங்களாகப் பிரியும், அதில் அனைத்தும் நரகில் நுழையும், ஒன்றைத் தவிர' என நபியவர்கள் கூறினார்கள், அந்த ஒரு கூட்டம் யாரென வினவப்பட்ட போது, 'நானும் எனது தோழர்களும் இன்றைய தினம் இருப்பதைப் போன்று இருப்பவர்கள்' என்றார்கள். இன்னும் சில அறிவிப்புக்களில் 'கூட்டமாக இருப்பவர்கள்' என்றும், 'இன்றைய தினம்' என்ற வாசகம் இல்லாமலும் இடம்பெற்றுள்ளது. (பார்க்க : அபூதாவூத் : 4596, 4597, திர்மிதி : 2640,2641 இப்னு மாஜா : 3992, தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் : 4886, ஹாகிம் : 444).

நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஆதாரபூர்வமானதை ஸலபுகள் விளங்கிய பிரகாரம் விளங்கி, பின்பற்றி நடப்பதன் காரணமாக அஹ்லுஸ்ஸூன்னா என்ற பெயரையும், வழிகெட்ட கூட்டத்தின் கருத்துக்களைப் பின்பற்றாது இஸ்லாமிய மார்க்கத்தில் உண்மையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து நடந்ததன் காரணமாக ஜமாஅத் என்ற பெயரையும் இக்கூட்டத்தினர் கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் பின்வரும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

1. அஹ்லுல் அதர்

2. அஹ்லுல் ஹதீஸ்

3. அத்தாஇபா அல்மன்ஸூரா

4. அல்பிர்கா அந்நாஜியா 


அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தின் சில அடிப்படைகள்

அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தின் அடிப்படைகள் பின்வருமாறு :

1. அல்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்கள், ஸலபுகளின் இஜ்மா போன்றன அவர்களின் அடிப்படைகளாகும்.

2. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையானதாகும். ஸஹீஹான ஹதீஸ்களில் உள்ள செய்திகள் அனைத்தும் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.



3. அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் விளங்கிக் கொள்ளும் விடயத்தில் அளவுகோலாக குர்ஆனிலும், ஸூன்னாவிலும் தெளிவாக இடம்பெற்றுள்ள வசனங்களும், ஸலபுகளும், அவர்களின் அணுகுமுறையின் பிரகாரம் சென்றோர் விளங்கிய முறைகளும் மிகப் பிரதானமானதாகும்.

4. மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் தமது கருத்துக்களை இடைச்செருகல் செய்ய யாருக்கும் இடம் கிடையாது.

5. இஸ்லாத்தினுள் புதிதாக இணைக்கப்பட்ட அனைத்தும் நூதன அனுஷ்டானங்களாகும். அவை அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தின் பக்கம் கொண்டு போய் சேர்க்கும்.

6. அல்குர்ஆனும், ஸூன்னாவும் குறிப்பிடும் அனைத்து அம்சங்களையும் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும். அதில் தெளிவான முரண்பாடுகள் எப்போதும் தோன்றாது. அவ்வாறு முரண்பாடுகள் தோன்றுவதாக சந்தேகம் ஏற்பட்டால் பகுத்தறிவை விட அல்குர்ஆன், ஸூன்னாவையே முற்படுத்த வேண்டும்.

7. இஸ்லாமிய கொள்கை சார்ந்த விடயத்தில் இதற்கென்று உத்தியோகப்பூர்வமாகப் பயன்படுத்தும் சொற்களையே அவசியம் பயன்படுத்த வேண்டும். புதிது புதிதாக உருவாக்கப்பட்ட சொற்களை உபயோகப்படுத்துவதை விட்டும் தவிர்ந்திட வேண்டும்.

8. தவறுகள் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர் நபி (ஸல்) அவர்கள் மாத்திரமாவார்கள். அவ்வாறே அவர்களது சமூகம் வழிகேட்டில் ஒன்று சேர்வதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

9. நல்ல கனவுகள் என்பது யதார்த்தமானதாகும். அது நபித்துவத்தின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுகின்றது.

10. ஸலபுகளின் வழிமுறை வஹிக்கு முன்னுரிமை வழங்குவதாகும். ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமானதாக இருந்தால் அதுவே எனது கருத்தாகும் என இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த கப்ரில் அடக்கப்பட்டிருக்கும் நபியவர்களைத் தவிர ஏனைய அனைவருடைய வார்த்தைகளிலும் எடுத்துக் கொள்ள, நிராகரிக்க வேண்டியதும் உள்ளன என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் நபியவர்களின் கப்ரை சுட்டிக்காட்டிக் கூறினார்கள். எனது நூலில் ஹதீஸிற்கு மாற்றமாக ஏதாவது கருத்தைக் கண்டால் ஹதீஸை எடுத்துக் கொண்டு எனது கருத்தைப் புறக்கணித்து விடுங்கள் என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் என்னையோ, மாலிகையோ, ஷாபிஈயையோ, அவ்ஸாஇயையோ, ஸவ்ரியையோ கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர். அவர்கள் தமது கருத்துக்களை எங்கிருந்து பெற்றார்களோ அங்கிருந்தே நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள் என இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இம்மாபெரும் இமாம்கள் மத்ஹப் பிடிவாதத்தை விட்டு, வஹிக்கு முன்னுரிமை வழங்கும் படியே ஏவியுள்ளார்கள் என்பது தெளிவாக புரிகின்றது.



ஸலபுகள்

ஸலப் என்பதன் தமிழ் அர்த்தம் முன்சென்றோர் என்பதாகும். 'நானும் எனது தோழர்களும் இன்று இருப்பதைப் போன்று இருப்பவர்கள்' என்ற நபியவர்களின் கூற்றுக்கேற்ப அவர்களில் முதன்மையானவர்கள் நபியவர்களும் அவரது தோழர்களுமே. இவர்களை சரியான முறையில் பின்பற்றிய இஸ்லாத்தின் முதல் மூன்று சமூகங்களிலும் வாழ்ந்து மரணித்த சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், அவர்கள் சென்ற வழியில் பயணிப்போரும் ஸலபுகளில் அடங்குவார்கள். அவர்கள் சென்ற வழிக்கு முரண்படுவோர்; பித்அத்வாதிகள் என்றே அழைக்கப்படுவார்கள்.

நபித் தோழர்கள் அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் அறிதல், விளங்குதல், செயலில் கொண்டு வருதல், அமுல்படுத்தல் என்ற அடிப்படையில்; பின்பற்றியவாறு ஸலபுகளும் இப்படியான வழிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இவ்வழிமுறையே இறுதி நாள் வரை நீடித்திருக்கும். முஸ்லிம்கள் அனைவரும் இவ்வழியிலேயே பயணிக்க வேண்டும். இது தவிர மலைக்கும் மடுவிற்கும் பொருத்தமில்லாதது போன்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டு ஹவாரிஜ்கள், ராபிழாக்கள், ஷீயாக்கள், முஃதஸிலாக்கள், முர்ஜியாக்கள், ஜபரிய்யாக்கள், கதரிய்யாக்கள் என எத்தனை வழிகெட்ட கூட்டத்தினர் தோன்றினாலும் அவர்கள் அனைவரும் ஸலபுகளின் போக்கிற்கு முரணானவர்களே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'எனது சமுதாயத்தில் உண்மைக்கு உதவி செய்ய ஒரு குழுவினர் இருந்து கொண்டே இருப்பார்கள். துரோகம் நினைப்பவர்களால் அவர்களுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்கள் இவ்வாறே இருப்பார்கள்'. (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ஆதாரம் - முஸ்லிம் : 1920)



வஹ்ஹாபிகள்

இப்பெயர் இன்று நம் மத்தியில் பிரபல்யமாய் வியாபித்துள்ளது. இதன் முக்கியத்துவத்தையும், அதன் நிலைப்பாடுகளையும் அறிய முன்னர் இச்சொல்லின் உண்மை நிலை என்னவென்று அறிவது சாலச் சிறந்ததாகும்.

இது முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ஸுலைமான் அத்தமீமீ அல் ஹன்பலீ என்பவரின் அழைப்புப் பணிக்கே; நிறைய மக்களால் பெயராகச் சூட்டப்படுகின்றது. இவர் தூய்மையான ஏகத்துவத்திற்காகவும், இணைவைத்தலுக்கு எதிராகவும் போராடியவராவார். மரணித்தவர்களிடம் வணக்கங்களை மேற்கொள்ளுதல், மரம், மட்டைகளை கடவுளாக வணங்குதல் போன்ற இணைவைத்தலோடு தொடர்புடைய விடயங்களை விட்டும் இஸ்லாத்தைப் பாதுகாக்க பெரும்பாடுபட்டவர் என்பதை நடுநிலையாக சிந்திப்போர் அறிந்து வைத்துள்ளனர். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் பிக்ஹில் ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தவர். ஆனால் அகீதா விடயத்தில் ஸலபுகளின் கொள்கையைக் கொண்டிருந்தார்கள்.

அரேபிய தீபகற்பத்தில் இவர் வாழ்ந்த பிரதேசங்களில் மக்கள் கல்லையும் மண்ணையும் வணங்கினார்கள். மந்திரித்த கயிற்றில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
 
வணக்க வழிபாடுகளை கப்றுகளில் உக்கி மண்ணோடு மண்ணாய் போனவர்களிடம் வேண்டலாயினர். இந்த வேளையில் தான் இமாமவர்கள் இவற்றுக்கெதிராக தனது அழைப்புப் பணியைத் தொடர்ந்தார்கள். தவறானவற்றைத் தெளிவுபடுத்தி, சரியான தூய இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தார்கள். அந்நேரத்தில் அவருக்கு திர்இய்யா எனும் பகுதியில் கவர்ணராக இருந்த அல் இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

இவரின் அழைப்புப் பணியால் ஈர்க்கப்பட்ட கவர்ணரும், அவரது பிள்ளைகளும் இவரோடு சேர்ந்து அழைப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அரேபிய தீபகற்பத்தில் இருந்த பெரும்பாலான இணைவைப்புக்கள் அழிக்கப்பட்டு, தூய இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. இவரின் அழைப்புப் பணியானது அல்குர்ஆன், ஸூன்னாவிற்கு உட்பட்டதாகவே இருந்தது. ஆனால் இன்று சமூகத்தில் இவரின் இத்தூய கொள்கைகளை ஆதரிப்போருக்கு வஹ்ஹாபிகள் எனப் பெயரிட்டு, அதற்குப் பல எதிர்மறையான கருத்துக்களையெல்லாம் தெரிவித்து வருகின்றனர்.

தூய இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் மீண்டும் மிளிர வேண்டும் என அரும்பாடுபட்ட இம்மாமனிதரை இன்று பல வன்சொற்களால் ஏசுவதை பார்க்கின்றோம். இணைவைத்தலுக்கு எதிராக இவரது போராட்டத்தை சிலர் வக்கிர மனம் கொண்டு விமர்சிப்பதையும் எழுதுவதையும் கண்கூடாக பார்க்கின்றோம். குறை கண்ணாடியணிந்து அவரை நோக்குவது மட்டுமல்லாது தவறான கடும்போக்கு சிந்தனைகளை அவர் மீது கட்டவிழ்த்துவிட்டு கூத்துப் பார்க்கின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

இங்கு நாம் மற்றுமொரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹஹாப் அவர்களுடைய அழைப்புப் பணியை மேற்கொள்வோருக்கு 'வஹ்ஹாபிகள்' என மக்கள் அழைக்கின்றனர். உண்மையில் இஸ்லாம் வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத பிரிட்டிஷ் காலணித்துவவாதிகள் மக்களை சத்தியக் கொள்கையை விட்டும் தூரப்படுத்த தெரிவு செய்ததே இந்த 'வஹ்ஹாபிகள்' என்ற பெயராகும்.

காரணம், இதே பெயரில் வட ஆப்ரிகாவின் தாஹிறத் என்ற பகுதியில் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ருஸ்தும் என்பவனால் ஹிஜ்ரி 2ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஓர் வழிகெட்ட இயக்கம் உருவாக்கப்பட்டது. கவாரிஜ்களின் உட்பிரிவுகளில் ஒன்றான இபாழிய்யாக்களின் கொள்கையைத் தழுவி 'வஹ்ஹாபிகள்' என்ற பெயரில் அப்பகுதியில் இயங்கியது. ஹஜ், தொழுகை போன்ற பிரதான வணக்கங்களைப் பாழ்படுத்தி அவற்றை மறுக்கக்கூடிய கொள்கையை கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வழிகேட்டிலுள்ளவர்கள் என்பது அக்காலத்தில் வட ஆபிரிக்கா, மொரோக்கோ போன்ற பகுதிகளில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களினதும் ஒருமித்த கருத்தாகும். அக்காலத்தில் வாழ்ந்த அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்துடைய மக்களுக்கும், ருஸ்துமுடைய கொள்கைகளுக்கும் எதிராக பல போர்கள் இடம் பெற்றுள்ளன. இவன் தாஹிறத் பகுதியிலேயே மரணித்து அடக்கம் செய்யப்பட்டதால் அந்த ஊரின் பெயரை வஹ்ஹாயிய்யா என மாற்றிக் கொண்டனர்.

இவனுடைய தந்தை பெயரை அடிப்படையாக கொண்டு 'ருஸ்துமிய்யா', 'வஹ்ஹாபிய்ய ருஸ்துமிய்யா' போன்ற பெயர்களால் இக்கொள்கையுடையவர்கள் அழைக்கப்பட்டு இனங்காணப்பட்டனர். மேலும் மேற்கு ஆப்ரிகாவிலுள்ள முற்காலத்து அறிஞர்கள் இந்த வஹ்ஹாப் அல் ருஸ்தும் என்பவனையும் அவனது வழிகெட்ட கொள்கைகளை பின்பற்றுவோரையும் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

இவன் மரணித்து பல வருடங்களுக்கு பின்னர்தான் ஸஊதி அரேபியாவில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் பிறக்கின்றார்கள். எனவே வரலாற்று அடிப்படையிலும், கொள்கையிலும் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ;அவர்களுக்கும் அப்துல் வஹ்ஹாப் ருஸ்துமிற்கும் இடையில் மலைக்கும் மடுவிற்கும் இடையான வித்தியாசம் இருக்கின்றது.

இமாமவர்களுடைய அழைப்பு முறையை மக்கள் வெறுப்பதற்காக காலணித்துவவாதிகள் முடிச்சுப் போட முயன்றார்கள். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களது தஃவா முறைகளுக்கு வஹ்ஹாபிகள் என பெயரை சூட்டி அதில் வெற்றியும் கண்டு விட்டார்கள். வழிகேட்டிலுள்ள அவ்வியக்கத்தின் பெயரை இமாமவர்களின் ஸலபுகளைத் பின்தொடர்ந்த அழைப்பு முறைக்கு சூட்டி மிகப்பெரிய வரலாற்று உண்மையை மறைத்து விட்டார்கள்.

'வஹ்ஹாபிகள்' என்றாலே ஆரம்ப கால வழிகெட்ட இயக்கம் என்பது மறக்கடிக்கப்பட்டு இமாமவர்களின் அழைப்பு முறைதான் மக்கள் நினைவுக்கு வருகின்றது என்பது கவலைக்கிடமான உண்மையான விடையாகும். இன்று இணையத்தளங்களில் வஹ்ஹாபி என தேடலுக்குட்படுத்துகின்ற போது கூட இமாமவர்களது அழைப்பு பணியே விடையாக கிடைக்கின்றதென்றால் மேற்கெத்தேய உலகம் ஈட்டிய வெற்றியும், அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வும் புலப்படுகின்றது.

நல்ல விடயங்களை கற்கின்ற எம்மைப் போல நற்சிந்தனையுள்ள மக்கள் உண்மையான வஹ்ஹாபிகள் யார்? என்பதை தற்போது அறிந்துள்ளது போல் மேற்கத்தேய சவாலை முறியடித்து இதிலுள்ள உண்மைத் தன்மைகளை ஏனையவர்களுக்கும் பரப்ப முயற்சி செய்ய வேண்டும். இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களது அழைப்பு பணியை உண்மையாக விபரிக்க வேண்டும்.



வினா இல  - 04
 
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வாஹ்ஹாப் அவர்கள் அகீதாவில் யாருடைய கொள்கையை பின்பற்றினார்கள் ?

இஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வுகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள்

தூய இஸ்லாமிய கொள்கையில் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிற்பட்ட காலங்களில் பல நெறிபிறழ்வுகள் ஏற்பட்டு, இக்கொள்கை விஷமிகளின் நச்சுக் கருத்துக்களால் நிரம்பி வழிந்தது. அவற்றில் சில முக்கியமான விடயங்கள்:

1. இஸ்லாமிய கொள்கையை கற்றல், கற்பித்தல் விடயத்தில் பொடுபோக்கைக் கையாண்டதால் பின்னால் ஓர் சமூகம் அதைப் பற்றிய சிறு அறிவு கூட இல்லாமல் வளர்ச்சியுற வழிகோலியது.

2. தமது மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதல். அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?' (அல்குர்ஆன் - 02 : 170)

3. சரி, தவறு எதுவென்பதை உணராமல், எவ்வித ஆதாரங்களும் இன்றி, மக்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும் நெறிபிறழ்விற்கே இட்டுச் செல்கின்றது.

4. நல்லடியார்கள் விடயத்தில் எல்லை மீறிச் செயற்பட்டமையும் இதில் அடங்குகின்றது.

நல்லடியார்களை அவர்களது தகுதிகளை விடவும் உயர்த்திப் பார்த்தல், அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய கடமைகளை நல்லடியார்களிடத்தில் செய்தல், தீமைகளைத் தடுத்தல், நன்மையை நாடுதல் போன்றவற்றை இவர்களும் செய்வார்கள் என நம்பிக்கை வைத்தல் என்பன இவற்றுள் அங்கம் வகிக்கின்றன.

நூஹ் நபியின் சமூதாயத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்! மேலும் வத்து, ஸுவாவு, யஹூஸ், யஊக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டு விடாதீர்கள்! என்று அவர்கள் கூறுகின்றனர்'. (அல்குர்ஆன் - 71 : 23)

5. வீட்டில் வளரும் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் தூய்மையான வழிகாட்டல் போதாமையும் நெறிபிறழ்வு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும் சுபாவத்தில் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்களே அவர்களை யஹூதிகளாகவும், நஸாராக்களாகவும், நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றிவிடுகின்றனர்' (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி : 1359, முஸ்லிம் : 2658).

இவைகள் அனைத்தும் அப்பாவி பாமர மக்களையும், தெளிவில்லாமல் கற்றுக்கொண்ட கல்விமான்களையும், வளர்ந்து வரும் சமுதாயத்தினரையும் தூய இஸ்லாமிய கோட்பாட்டை விட்டும் நெறிபிறழ வைக்கின்றன.



நெறிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் முறைகள்.

1. அல்குர்ஆன், ஸூன்னாவின் பக்கம் மீள வேண்டும்.

2.பாடசாலை மாணவர்களின் தகமைகளையும் அறிவுத் திறன்களையும் புடம்போட்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்பிக்க வேண்டும்.

3. இதற்கென ஓர் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் போது, அதற்குத் தேவையான குறிப்புக்களையும், தகவல்களையும் சரியான இஸ்லாமிய கொள்கைகளிலிருந்து எழுதப்பட்ட நூற்களிலிருந்தே பெற வேண்டும்.

4. மக்களுக்கு மத்தியில் காணப்படும் தீய, கொள்கைகளை சீர்திருத்தி, அவர்களை சரியான இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் அமைக்க சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்க வேண்டும்.

5. நவீன உலகை ஆட்டிப் படைக்கும் அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், ஒலி, ஒளி தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை இஸ்லாமிய மயப்படுத்தல் வேண்டும்.



வினா இல - 03
 
இஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வுகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இரண்டு குறிப்பிடுக?

 
அகீதாவின் முக்கியத்துவம்

இஸ்லாமிய கொள்கை கோட்பாட்டிற்கு (அகீதாவிற்கு) பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில:

1. அனைத்து நபிமார்களும், ரஸூல்மார்களும் அல்லாஹ்வை இறைவனாக ஏற்று, அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென்ற இஸ்லாமிய கொள்கையின் பக்கமே மக்களை அழைத்துள்ளனர். அல்லாஹ் கூறுகிறான், 'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை எனவே என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை'. (அல்குர்ஆன் - 21 : 25)

2. இறைமைக் கோட்பாடு அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது என ஒருமைப்படுத்துவதும், வணக்க வழிபாடுகளை அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றுவதுமே மனிதர்களினதும், ஜின்களினதும் முதல் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்,'ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை'. (அல்குர்ஆன் - 51 : 56)

3. ஓர் அடியானிடமிருந்து நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏகத்துவமே அளவுகோலாகத் திகழ்கின்றது. நற்செயல்களுக்கான கூலி ஏகத்துவம் பூரணமடைவதிலேயே தங்கியுள்ளது. அதில் ஏதாவது குறைகளோ, ஏற்றத்தாழ்வுகளோ ஏற்பட்டால் நற்செயல்களுக்கான கூலி குறைந்து விடுவதோடு, சிலவேளைகளில் முழுமையாக அழிந்து விடக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

4. மறுமை நாளில் வெற்றியடைய, சீரான இஸ்லாமிய கொள்கையே அவசியமாகின்றது. அதன் முக்கியத்துவத்தை அறிந்து, சரியான அமைப்பில் அதைக் கற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,'யார் அல்லாஹ்வையே நாடி,'அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை' எனக் கூறுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகினை ஹராமாக்கி விடுகின்றான்'. (அறிவிப்பவர்: இத்பான் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் - புஹாரி : 425, முஸ்லிம் : 33)

5. இது அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையில் உள்ள தொடர்பை வரையறுக்கின்றது. அல்லாஹ் தன் அடியானுக்குத் தேவையான பாதுகாப்பு, அருட்கொடைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றான். இதற்காக அடியான் அல்லாஹ்வுக்குப் பயந்து, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அவன் எம்மை கண்காணிக்கிறான் என்பதை அறிந்து, வணக்க வழிபாடுகளை அவனுக்கு மாத்திரமே செய்ய வேண்டும்.

6. ஒரு மனிதனுக்கு உலகில் சந்தோசமும், மன அமைதியும் கிடைக்க காரணமாக அமைவது அவன் தன் இரட்சகனை அறிந்து கொள்வதுதான். எனவே மனிதன் தன் அனைத்து காரியங்களை விடவும் அல்லாஹ்வின் இறைமை, பரிபாலணம், அவனின் பெயர்கள், பண்புகள் போன்ற விடயங்களை அறிந்து அதன்படி அமல் செய்வதிலேயே தன்னை மும்முரமாக ஈடுபடுத்த வேண்டும்.

7. இஸ்லாமியக் கொள்கை மனிதனின் சிந்தனையில் தோன்றும் அனைத்து விதமான வினாக்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை தருகின்றது. படைப்பாளனின் தன்மைகள், படைப்பின் ஆரம்பம், அதன் முடிவு, அது படைக்கப்பட்டதன் நோக்கம், இப்பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறுபட்ட படைப்பினங்கள், அவற்றுக்கும் எமக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள், கழா கத்ர் போன்ற மனித சிந்தையில் தோன்றும் அனைத்திற்கும் இது தீர்வை வழங்குகின்றது.

8. இக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ள முதலில் அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் கற்றுத் தேர்ல் வேண்டும். ஏனெனில் இவை இரண்டிலுமிருந்தே இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு பெறப்பட்டிருக்கின்றது.

9. ஒரு மனிதனைச் சூழ இருக்கும் தீய சிந்தனைகள், சித்தாந்தங்கள், தவறான கொள்கை, கோட்பாடுகள் போன்ற அனைத்திலிருந்தும் இஸ்லாமியக் கோட்பாடு அவனை பாதுகாக்கின்றது.

எனவே இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த சரியான இக்கொள்கை (அகீதா இஸ்லாமிய்யா) மார்க்கம் எழுச்சி பெறுவதற்கு அடித்தளமாகவும், நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான பிரதான காரணியாகவும், இம்மை மறுமையில் வெற்றி இதிலேயே தங்கியுள்ளது என்பதையும் எடுத்தியம்புகிறது.

மேலும் அனைத்து நபிமார்களும் இக்கொள்கையின்பால்; தம்மக்களை வழிநடாத்தி இருக்கிறார்கள் என்பதையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் கூறுகிறான், 'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் (ஒருவராக) ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது'. (அல்குர்;ஆன் - 39 : 65)

இஸ்லாமியக் கோட்பாட்டின் மூலாதாரங்கள்

இஸ்லாமியக் கோட்பாடு முக்கிய மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்படுவதாக அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தின் அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் இருக்கின்றனர். அதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான், 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!' (அல்குர்ஆன் - 04 : 59)

மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுதல் என்பது, அல்குர்ஆனையும், ஸூன்னாவையும், குறிக்கின்றது. அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்படுதல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகளுக்கு கட்டுப்படுதலை குறிக்கின்றது.

முதல் ஆதாரம்

இதன் முதல் ஆதாரம் அல்குர்ஆன் ஆகும். இது பல சந்தர்ப்பங்களுக்கமைவாக 23 வருடங்கள் சிறு சிறு பகுதிகளாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதமாகும். இது சூரதுல் பாத்திஹாவைக் கொண்டு ஆரம்பித்து, சூரதுன் நாஸைக் கொண்டு முடிவடைகின்றது.

இது எவ்விதக் குறைபாடுகளுமற்ற, மனிதக் கையாடல் எதுவும் அடங்காத, பல அற்புதங்களை தன்னகத்தே கொண்ட அல்லாஹ்வின் பேச்சாகும். இதுவே இஸ்லாமிய கொள்கை பெறப்படும் முதல் மூல நூலாகும்.

அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்'. (அல்குர்ஆன் - 05 : 15-16)

மேலும், 'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்!'. (அல்குர்ஆன் - 04 : 136)

 
இரண்டாம் ஆதாரம்

நபி (ஸல்) அவர்களிடமிருந்து உறுதியாக வந்த செய்திகள். இவை நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம், மற்றும் அவர்களின்; பண்புகள், தோற்றம் என்பனவற்றைக் குறிக்கின்றன. நபியவர்களின் வழிமுறைகளும் அல்குர்ஆனைப் போன்று வஹியுடன் சம்பந்தப்பட்டவையாகும். அல்குர்ஆன் கூறும் சுருக்கமான விடயங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், அல்குர்ஆனில் கூறப்படாத விடயங்களை தெளிவுபடுத்தக் கூடிய வகையிலும் ஸூன்னா (நபியவர்களின் வழிமுறை) இடம் பெறுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான், 'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (நபியே) கூறுவீராக!'. (அல்குர்ஆன் 03 : 31).

மேலும், 'மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்'. (அல்குர்ஆன் 16 : 44).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'என்னுடைய வழிமுறையை பின்பற்றுமாறு நான் உங்களை கட்டாயப்படுத்துகிறேன்'. (அறிவிப்பவர்: அல் இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) ஆதாரம்: அபூதாவுத் : 4607, திர்மிதி : 2676)

 
மூன்றாம் ஆதாரம்

இஜ்மா (இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகள்). இது 'நபி (ஸல்) அவர்களின் பின்பு அவர்களின் சமுதாயத்தில் இருக்கும் முஜ்தஹிதீன்கள் ஒரு மார்க்க சட்டத்தில் ஒன்றுபடுதலே குறிக்கின்றது'. இது அடிப்படை மூலாதாரமாக அல்லாமல் துணை மூலாதாரமாக கொள்ளப்படுகின்றது.

மேலும் அல்குர்ஆனையும், ஹதீஸையும் அவை இறங்கும் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் விளங்கிய பிரகாரம் விளங்க முற்பட வேண்டும். இஸ்லாத்திலுள்ள அடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், வழிகாட்டல்கள், நற்குணங்கள் அனைத்திலும் வஹி இறங்கும் காலத்தில் வாழ்ந்து, அதனை நேரடியாகப் பார்த்து அதன் பிரகாரம் அமல் செய்த அந்நபித்தோழர்களின் விளக்கங்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.



வினா இல  - 02
 
இஸ்லாமிய கோட்பாட்டின் முக்கிய மூலாதாரங்கள் மூன்றையும் கூறுக?

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget