-அபூ ஸாஹி-
புனித மக்கா ஹரத்தில் 35 வருடங்களாக சேவைபுரியும் இமாம் சுதைஸ்.
சுமார் 35 வருடங்களாக புனித மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமில் இமாமாகவும், கதீபாகவும், சுமார் 6 வருடங்களாக மக்கா மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதீனா மஸ்ஜிதுன் நபவி போன்றவற்றின் பொறுப்பாளராகவும் கடமைபுரிந்து வரும் கலாநிதி அப்துர்ரஹ்மான் இப்னு அப்துல் அஸீஸ் அச்சுதைஸ் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் ஹிஜ்ரி 1382 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.
12 ஆம் வயதிலேயே அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த இவர் தன் ஆரம்பக்கல்வியை ரியாத்தில் கற்று பின்னர் அங்கேயே உள்ள அல் இமாம் முஹம்மத் பின் சுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் ஷரீஆக் கலாபீடத்தில் இலமானிக் கற்கையில் அதிவிசேட சித்தியுடன் வெளியாகி பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் முதுமானிக் கற்கையையும் தொடர்ந்தார். இக்காலத்தில் ரியாத்தின் சில பள்ளிவாசல்களின் இமாமாகவும், சில மத்ரஸாக்களின் ஆசிரியராகவும் சேவை புரிந்து இமாம் முஹம்மத் பின் சுஊத் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகவும் கடமை புரிந்தார் .
முதுமாணிக் கற்கையை கற்றுக்கொண்டிருக்கும் காலத்திலேயே ஹிஜ்ரி 1404 ஆம் ஆண்டு புனித மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் தொழுகை நடத்தும் இமாமாகவும் ஜும்ஆ உரை நிகழ்த்தும் கதீபாகவும் நியமிக்கப்பட்டார். அதிவிசேட சித்தியுடன் தன் முதுமானிக் கற்கையை முடித்த இவர் புனித மக்கா நகரில் உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் தன் கலாநிதிக் கற்கையை தொடர்ந்து அதிலும் அதிவிசேட சித்தியுடன் பட்டம்பெற்று வெளியாகி பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார் .
ஹிஜ்ரி 1433 – 6 – 17 ஆம் திகதி புனித மக்கா மஸ்ஜிதுல் ஹராம், மதீனா மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரு மஸ்ஜிதுகளுக்கும் அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய பொறுப்பாளராக நியமனம் பெற்றார்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.