முஹம்மது வஸீம் ஹூஸைன்
இன்றை உலகில் இஸ்லாமிய கொள்கைகளை மக்கள் மயப்படுத்தியவர்கள் பலர் மரணித்தும் வாழ்வதைப் பாரக்கிறோம். நபியவர்களுக்கு பின்னர் இஸ்லாமிய உம்மத்தில் ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத்தாபிஈன்கள் ஆகியோர் இம் மார்க்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்க தங்கள் உயிரை கூட தியாகம் செய்துள்ளார்கள்.
ஆனாலும் ஸஹாபாக்களில் குறை காணும் ஷீஆக்களும், தாயிஈன்களிலும், தபஉத்தாபிஈன்களிலும் உள்ளவர்களை குறை காணும் சூபிக்களும் நம் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். மார்க்க வழிமுறைகளையும், குர்ஆன், சுன்னாவையும் பின்பற்றும் முறைகளை கூட நபியவர்களின் வழியில் நின்றும் பலர் தெளிவுகளை வழங்கினாலும், படிப்பறிவற்ற புரோகிதரர்கள், பாமர மக்கள், மத்ஹப் வெறியில் பித்துப்பிடித்தவர்கள் என்பவர்களெல்லாம் தமது கருத்திற்கு எதிரானவர்களை வசைபாடி, இழிவுபடுத்தினார்கள்.
போலியான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்கள். வன்முறையாளர்களாக சித்தரித்து, அவர்கள் பெயரை கேட்டாலே வன்முறையாளர்களாகவும், முற்போக்கு சிந்தைனையாளர்கள், அடிப்படை வாதிகள் என முத்திரை குத்துவதைப் பார்க்கிறோம். உதாரணமாக இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் அன்றை ஆட்சியாளர் மஃமூனால் துன்புறுத்தலுக்குள்ளாகி சிறைவாசம் அனுபவித்தார்கள், சத்தியத்தை சொன்னதற்காக கசையடியை பரிசாகப் பெற்றார்கள்.
அந்த வரிசையில் இத் தலைப்பினூடாக இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) பற்றிய சில உண்மையான தகவலை தரலாம் என நினைக்கிறேன். கூலிக்கு மாரடிக்கும் சிலர் தம்மை சிந்தனையாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், குறை கண்ணாடியணிந்து ஒன்றை நோக்குகின்றவர்கள் தங்களது எழுத்துக்களிலெல்லாம் அதிகமாக பிரயோகிப்பது ”வஹ்ஹாபிஸம்” என்ற சொல்லாடலாகும்.
வஹ்ஹாபிஸம் என்ற பெயரை புனைந்து திரைக் கதைபோல் இன்று திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் பரப்பி விட்டிருக்கின்றனர். உண்மையில் வஹ்ஹபிகள் என்றால் யார்? முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹ் அவர்களுக்கும் வஹ்ஹாபிகள் என்ற சொல்லாடக்கும் இடையான தொர்புகள் என்ன என்பதை நோக்குவோம்.
வஹ்ஹாபிகள் என்பதன் உண்மை நிலையும் பின்னனியும்
நண்பர்களே! இப்பகுதியை சற்று கவனித்து வாசிக்கவும். இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களுடைய தஃவா அணுகுமுறை தொடர்பில் இந்த வஹ்ஹாபி என்பது பிறந்ததா? அல்லது வஹ்ஹாபி என்பது என்ன என்பதை பிரித்தறிவும் பகுதி இதுவே ஆகும்.
இஸ்லாம் வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத பிரிட்டிஷ் காலணித்துவவாதிகள் மக்களை சத்தியக் கொள்கையை விட்டும் தூரப்படுத்த தெரிவு செய்ததே இந்த 'வஹ்ஹாபிகள்' என்ற பெயராகும்.
காரணம் இதே பெயரில் வட ஆபிரிக்காவிலுள்ள தாஹிறத் என்ற பகுதியில் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ருஸ்தும் என்பவனால் ஹிஜ்ரி 2ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஓர் வழிகெட்ட இயக்கம் உருவாக்கப்பட்டது. கவாரிஜ்களின் உட்பிரிவுகளில் ஒன்றான இபாழிய்யாக்களின் கொள்கையைத் தழுவி 'வஹ்ஹாபிகள்' என்ற பெயரில் அப்பகுதியில் இயங்கியது. ஹஜ், தொழுகை போன்ற பிரதான வணக்கங்களைப் பாழ்படுத்தி, அவற்றை மறுப்பதை தமது கொள்கையாக் கொண்டிருந்த இந்த 'வஹ்ஹாபிகள்' வழிகேட்டிலுள்ளவர்கள் என்பது அக்காலத்தில் வட ஆபிரிக்கா, மொரோக்கோ பகுதிகளில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களினதும் ஒருமித்த கருத்தாகும்.
இவன் அப்போது வாழ்ந்த அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஆ கொள்கையை கொண்டுள்ள மக்களோடு, அகீதா ரீதியாகவும், இபாதத் ரீதியாகவும் முரண்பாடுகளை உண்டாக்கியதால் இவர்களுக்கிடையே போர்களும் இடம் பெற்றுள்ளன. தவறான கவாரிஜிய சிந்தனை கொண்டுள்ளதால் இஸ்லாமிய அகீதா விடயத்தில் வழிகேட்டிலேயே பயணித்தான். இவன் தாஹிறத் பகுதியிலேயே மரணித்ததால் அக் கிராமத்திற்கு ”வஹ்ஹாபிய” கிராமம் என மக்கள் அழைத்து வந்தனர். காலப் போக்கில் இவனையும் இவனது வழிகெட்ட கொள்கையை அடையாளப்படுத்த அன்றை கால மக்கள் ”ருஸ்துமிய்யா, வஹ்ஹாபிய ருஸ்துமிய்யா” என்ற பெயர்களால் அழைத்தனர். மேற்கு ஆப்பிரிக்க அறிஞர்கள் அப்போது இவர்களுக்கு காபிர்கள் என பத்வா வளங்கியுள்ளனர்.
ஒரு சிலரது கூற்றுகளின் படி இவர்கள் கடற்கொள்ளையவர்களாக கூட இருந்திருக்கிறார்கள். பிரிடிஷ் வணிக கப்பல்களை கொள்ளையடித்து, சிப்பாய்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதன் காரணத்தால் பிரிடிஷ் அரசாங்கம் இவர்களை அடக்குவதில் தமது இராணுவ பலத்தை பிரயோகித்துள்ளது.
வரலாற்றில் முதன் முதலாக இவர்கள் தான் ”வஹ்ஹாபிகள்” என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களது வரலாற்றை பார்ப்போம்.
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)
முழுப் பெயரும் பரம்பரையும்
இவர்களது முழுப் பெயர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ஸல்மான் இப்னு அலி இப்னு முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு ராஷித் இப்னு பரீத் இப்னு முஹம்மத் இப்னு பரீத் இப்னு மஷ்ரிப் இப்னு உமர் இப்னு மிஃழாத் இப்னு ரீஸ் இப்னு ஸாஹிர் இப்னு முஹம்மத் இப்னு அலவி இப்னு வுஹைப் இப்னு அத்தமீமீ என்பதாகும்.
இவர்கள் ஷூஹைர் கோத்திரத்தைச் சார்ந்த தமீம் எனும் பரம்பரையைச் சார்ந்தவர்களாவர்.
பிறப்பும், வளர்ப்பும்
இமாமமவர்கள் ஹி 1115 இல் பண்டைய ஸஊதி அரேபியாவில் உயைனா என்ற இடத்தில் பிறந்தார்கள். தனது பத்து வயதை அடைவதற்கு முன்னர் அல்குர்ஆனை ஓதி முடித்ததோடு அதனை முழுமையாக மனனம் செய்து கொண்டார்கள். சிறு வயது முதல் புத்திக் கூர்மையுள்ளவர்களாகவும், சாந்தமான உள்ளங் கொண்டவர்களாகவும் காணப்பட்டதோடு தனது தந்தையுடைய பிக்ஹ் சார்ந்த விடயங்கைளை கற்கக் கூடியவர்களாகவும், அதி வேகமாக மனனம் செய்யக் கூடியவர்களாகவும் காணப்பட்டார்கள்.
அகீதா ரீதியாக பல விடையங்களை தந்தையுடன் இருக்கின்ற நேரத்திலே அதிகளவு தேடக் கூடியவர்களாகவும், அகீதா விடையங்களை பாழ்படுத்தும் விடையங்களையும் திறம்படி அறிந்தார்கள். இவர்களைப்பற்றி அவரது தந்தை அப்துல் வஹ்ஹாப் அவர்கள் கூறும் போது ” எனது மகனிடமிருந்து தீர்ப்பு வழங்குவதற்கு அதிக பயன்களை பெற்றேன்” என்றார்கள்.
இமாமவர்களது தந்தை அப்துல் வஹ்ஹாப், அவரது பாட்டன் ஸூலைமான் ஆகியோர் நீதிபதிகளாக அப்போது காணப்பட்டார்கள். ஏனையவர்களுக்கு எழுதிய கடிதங்களில் தனது மகனைப்பற்றியும் அவரது புத்திக் கூர்மை பற்றியும் மார்க்கத்திலுள்ள விளக்கங்களை நுண்ணறியும் திறன் பற்றி எழுதியுள்ளார்கள்.
இமாமவர்கள் முதல் பயணமாக மக்காவிற்கு ஹஜ் இற்காக பயணித்தார்கள். பின்னர் அங்கிருந்து மதீனாவிற்கு சென்றார்கள். அங்கு 2 மாதங்கள் தங்கிய பின்னர் மீண்டும் தன் தந்தையிடமே உயைனாவிற்கு திரும்பி வந்தார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களுடைய பிக்ஹூ விளக்கங்களை தன் தந்தையிடம் கற்றுக் கொண்டார்கள். இதன் போது அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்த மன திறன் மூலம் அவற்றில் பெரும்பாலானவற்றை தனது கரங்களால் மிகத் தெளிவாக ஒரே அமர்விலேயே எழுதி வைத்தார்கள். அதில் எவ்வித சோர்வோ, களைப்போ அவர்கள் அடையவில்லை.
பின்னர் மார்க்க கல்வியை தனது தந்தையின் சகோதரரிடமும் கற்றுக் கொண்டார்கள். தனது தந்தையின் தீர்ப்புக்களை பார்க்க அவரோடு நீதிமன்றம் செல்வார்கள். மேலும் அக்காலத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்புக்கள், கலந்துரையாடல்கள் போன்றவைகளிலும் தவறாது கலந்து கொண்டார்கள். அதன் பின்னர் மாக்கத்தினை தேடிக் கற்றுக் கொள்ள ஊர் துறந்து பயணம் செய்ய ஆரம்பிக்கிறாரகள்.
தொடரும்…
மிகுதி அடுத்த கட்டுரையில் எதிர்பாருங்கள்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.