ஒரு சிறு வாகன விபத்தில் ஏற்பட்ட தகராறு குடி போதையின் விளை வால் ஓர் ஊரே பற்றி எறிந்தது. உண்மையில் குடிபோதையில் இருந்த முஸ்லிம் வாலிபர்கள் சிலரின் செயற்பாட்டால் மாற்று மதத்தவர் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, இது போன்ற சந்தர்ப் பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த இனவெறியர்களுக்கு அடித்தது லக். ஒட்டுமொத்த முஸ்லிம்களது திட்டல், பதுவாக்களும் அந்த 4 முஸ்லிம் வாலிபர்கள் மீதுதான் பாய்ந்திருக்கின்றது.
முஸ்லிம்கள் தரப்பாலேயே அந்த நால்வரையும் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பிறகும் இவ்வாறான பாரிய ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கின்றது என்றால் இது திட்டmiடப்பட்ட ஒரு செயல்தான். குற்றவாளிகள் ஒப்படைக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுப்பதை விடுத்து முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சேதப்படுத்துவதும், பள்ளிவாயில்களை எரிப்பதும் நியாயமான ஒரு முறையல்ல.
சரி, உண்மையிலே அந்த முஸ்லிம்கள்தான் இச்சம்பவத்திற்குக் காரணமென வைத்துக் கொண்டாலும் இதற்கு முன்னர் இலங்கையின் நாலா பக்கங்களிலும் நடந்த இனவெறித் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்கள்தானா குற்றவாளிகள்? முஸ்லிம்களை நேரடியாகக் களத்தில் சந்திக்க தைரியமற்ற பேரினவாதிகள் அவர்களது பொருளா தாரத்திலும், வணக்கஸ்தலங்களிலும் கைவைப்பது வாடிக்கையா கிவிட்டது. அவ்வாறு நேரில் சந்தித்த இடங்களிலெல்லாம் தோற்றுத் தான் போயிருக்கிறார்கள். அதற்கு தர்கா நகர், கிந்தோட்டை, திகன சம்பவங்கள் சாட்சி.
அளவுக்கதிகமாக முஸ்லிம்கள் காவல்துறை மீது, அவர்களும் மாற்று மதத்தினர் என்பதை மறந்து விட்டு நம்பிக்கை வைத்து, முன்னேற் பாடுகளின்றி இருந்ததும் இவ்வசம்பாவிதம் பாரியளவில் விரிவடை யக் காரணமோ என சிந்திக்கவும் தோன்றகின்றது. பெரிய மட்டத் திலுள்ள முஸ்லிம்களும் அளவுக்கதிகமாக மக்களைப் பயமுறுத்தி கோழைகளாக்குகின்றார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
அண்மையில் நடந்த எல்லா இனவாதத் தாக்குதல்களிலும் விசேட அதிரடிப் படையினர் பக்கசார்பாக நடந்துகொண்டதாகவே களத்தி லிருந்த பலரும் கூறிய செய்தி. ஒரு நாட்டின் பாதுக்கப்படை என்ற அடிப்படையில் அவர்களது உதவியை நாடுவதும், ஆலோசனை செய்வதும் இன்றியமையாத விடயங்கள்தான். எனினும் முழுமையாக அவர்களையே நம்பி நாம் எந்தவொரு முன்னெச்சரிக்கையோ, முன்னேற்பாடோ இன்றி இருப்பது அறிவுடமையா என்ற சிந்திக்க வேண்டும். பொறுத்துப் போவோம் என்று கூறிக் கூறி முஸ்லிம்கள் பொறுமை என்றால் கோழைத்தனம் தான் என்று விளங்கும் அளவுக்கு பொறுமை போதிக்கப்படுகின்றது. இவ்வைறே தொடர்ந்தால் பெரும் பான்மையினத்தவர்களும் முஸ்லிம்கள் என்றால் கோழைகள்தான் எனக் கணிக்கத் துவங்கிவிடுவர்.
நாம் பெற வேண்டிய பாடம்
முதலில் நாம் அல்லாஹ்வின்பால் திரும்ப வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம். எமது சகல செயற்பாடுகளையும் அவன் பொருந்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
போதைப் பொருள், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள எமது முஸ்லிம் இளைஞர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி.
பிற மக்களுடனான எமது பண்பாடு, நடத்தைகளில் பல மாற்றங்கள் வரவேண்டியுள்ளன. ஒரு காலத்தில் முதலாளி, மஹத்தயா என்று முஸ்லிம்களைப் பார்த்த மாற்று சமூகம் இன்று அதே முஸ்லிம்களை தம்பிலா, ஹம்பயா என்றுதான் பார்க்கின்றது.
இதற்கு பேரினவாதிகளின் கடும்போக்குப் பிரச்சாரங்கள் ஒரு பக்கம் காரணமாயிருந்தாலும் மறுபக்கம் எமது செயற்பாடுகளும் அவர்கள் உள்ளங்களில் எம்மைப் பற்றிய வெறுப்பணர்வு வரக் காரணமாக உள்ளதென்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
முதலில் மார்க்கத்திற்கு முரண்படாத விடயங்களில் நாட்டு சட்டத்தை மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். சட்டங்களை மீறி விட்டுப் பிடிபட்டவுடன் காவல்துறைக்கு இலஞ்சம் கொடுத்து, சட்டத்திலிருந்து தப்புவது எமது முஸ்லிம்களுக்குக் கைவந்த கலை.
எதனையும் குறுக்கு வழியில் அடைய முயற்சிப்பது எமது முஸ்லிம்களின் முக்கிய பணி. வங்கிக்குச் சென்றால் எல்லோரும் வரிசையில் காத்திருப்பார்கள். எமது சகோதரர்கள் மாத்திரம் யாராவது தெரிந்தவர்கள் முன்னுக்கு நிற்கின்றார்களா என்று பார்த்து அவர்களிடமே கரண்ட்பில்லையும், தண்ணீர் பில்லையும் கொடுத்து சேர்த்துக் கட்டிவிடும்படி சொல்லி விடுவார்கள். இதனை அவதானித்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மையினர் முகம்சுளித்துக் கொள்வார்கள்.
அரசாங்க ஆஸ்பத்திரிக்குச் சென்றால் அவசியமின்றி யாருடை யவாவது பரிந்துரை மூலம் வேகமாக வேலையை முடித்து விட்டு வெளியேறப் பார்ப்பார்கள். அங்கு அதிகாலையிலிருந்து வரிசையிலிருப்போர் பலர்.
புகையிரத நிலையத்தில் டிக்கட் எடுக்கச் சென்றால் அங்கும் இதே நிலைதான். முன்னால் யாராவது அறிமுகமான ஒருவர் இருந்தால் போதும். மசான் எனக்கும் சேர்த்து ஒரு டிக்கட் எடு என அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுவார். பின்னால் காத்திருப்போர் அனை வரும் இவரை ஒரு மாதிரித் தான் பார்ப்பார்கள். எல்லத்துலையும் குறுக்கு வழியில் தான் செல்ல முயற்சிப்பார்கள்.
புகையிரத, பஸ் பயணங்களின் போது யாராவது மாற்றுமத வயோதிபர், கர்ப்பிணிப் பெண் ஏறினால் போதும் உடனே காணாதது போன்று பாசாங்கு செய்து தலையைக் கீழே போட்டுவிடுவார்கள். அதேவேளை எமது முஸ்லிம் இளம்பெண் ஏறினாலும் உடனே எழுந்து இடத்தைக் கொடுத்து விடுவார்கள். இவ்விதப் பாரபட்சத்தை மாற்று மதத்தவர்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
மேற்கூறப்பட்ட அனைத்தும் அன்றாடம் சர்வசாதாரணமாக நடக்கக் கூடியவை, சிலர் விதிவிலக்காகப் பெருந்தன்மையுடன் நடப்பதை மறுக்கவுமில்லை.
வியாபாரத்தில் எமது முஸ்லிம் சமூகத்தின் மீதான நம்பிக்கை அறவே போய்விட்டதென்று தான் கூற வேண்டும். அந்தளவு எமது சமூகம் இதில் கவனையீனமாகச் செயல்படுகின்றது.
மேற்கூறப்பட்ட அனைத்தும் மாற்றுமதத்து மக்களின் உள்ளங்களை வெல்ல அழகிய வழிமுறைகள். இவற்றில் நாம் சற்றுப் பொறுத்து, பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருந்தால் எம்மைப் பற்றிய இந்தளவு வெறுப்பு உருவாகியிருக்க மாட்டாது.
எனவே நாம் எம்மையும் மாற்றி, தைரியத்தையும் வரவழைத்து அல்லாஹ்விடம் கையேந்தினால் நிச்சயம் அவன் எமக்கு விடிவைத் தருவான்.
إِنَّ اللّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ [13:11]
எந்தவொரு சமூகமும் தம்மிடமுள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடமுள்ளதை மாற்ற மாட்டான். (அல்குர்ஆன் 13:11).
அல்லாஹ் இலங்கை உட்பட உலக முஸ்லிம்கள் அனைவருடைய துன்பங்களையும் அகற்றி, அவர்களைப் பாதுகாப்பானாக.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.