குறிவைக்கப்படும் ஆடைக் கலாச்சாரம் ll Asshaik Waseem Hussain


வஸீம் ஹூஸைன்
உலகிலுள்ள மார்க்கங்களில் இஸ்லாம் மாத்திரமே தனிச் சிறப்பியல் பொருந்தப் பெற்ற மார்க்கமாகும். காரணம் இதில் தனிமனித கருத்துக்களுக்கு இடமே கிடையாது. இஸ்லாத்திலுள்ள ஒவ்வொரு அம்சங்களும் அல்லாஹ்வால் தூதாக அனுப்பப்பட்ட செய்திகளாகும்.  மனம் கோணிய மனிதனெல்லாம் இஸ்லாத்தை படித்தது இன்று சாரைசாரையாக தன்னை இஸ்லாமியனாக மாற்றிக் கொள்வதை பார்க்கலாம்.

     இஸ்லாமிய மார்க்கம் தனிமனிதனது பாதுகாப்பு, சுத்தம், கலாசாரம், பண்பாடு, ஒழுக்க விழுமியங்கள், நன்நடத்தை போன்ற பல விடையங்களில் அதிக கரிசணை காட்டுகின்றது.  இப்படியான நல்லம்சங்களை அறிந்த மேற்கத்திய, கீழைத்தேய மக்கள் இஸ்லாத்தில் நுழைவதை பார்க்கிறோம். ஆனால் இஸ்லாத்தின் வளர்ச்சியை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கில் பலர் களம் இறங்கினார்கள்.  இம்மார்க்கத்தை அக்குவேர் ஆணிவேராக பிரித்துப் பந்தாட பலர் களத்தில் குதிதார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கை விடயத்தில் மோதி மூக்குடைபட்ட இவர்கள்  இஸ்லாத்தை அழிக்க வேறு வழிகளை தேர்ந்தெடுத்தார்கள்.

இஸ்லாத்தில் தீவிரவாதம், பெண்ணடிமைத்தனம், பலாதர மணம், விவாகரத்து, ஜிஹாத், போன்ற அம்சங்களை மக்கள் மத்தியில் பிரச்சாரங்களாக முடக்கி விட்டனர். ஆனால்  இஸ்லாம் அசூர வளர்ச்சி கண்டது. அல்லாஹ் அவர்களது சூழ்ச்சிகளையல்லாம் உடைத்தெறிந்தான்  என்பதே உண்மையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன் 9:32)

     இப்போது இஸ்லாத்தின் விரோதிகளால் முன்வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டில்  முஸ்லிம் பெண்களின் ஆடை விடையங்கள் முன்னிலை விகிக்கின்றன. குறிப்பாக  பர்தா, புர்கா, ஹிஜாப், ஜில்பாப் போன்றன முஸ்லிம் பெண்களை அடக்கியாள்வதாகவும், சுதந்திரத்தைப்பறிப்பதாகவும், உரிமைகள் மீறப்படுவதாகவும் விசனம் செய்வதை பார்க்கிறோம்.


     அண்மைக்காலமாக எமது இலங்கை நாட்டிலும் கூட  முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரம் மாற்று மதத்தவர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளன.
உண்மையில் இவ் விடயத்தை நாம் சற்று நோக்குகின்ற போது முஸ்லிம் பெண்களின் ஆடைக்கலாச்சாரத்தைப் பொறுத்தமட்டில் இன்று பாதுகாப்பான ஆடையாக பலரும் பாராட்டுவதைப் பார்க்கிறோம். குறிப்பாக எந்த மேற்கெத்தியர்கள் எதிர்க்கிறார்களோ? அவர்களைச் சார்த்த மக்களே அதனை வரவேற்பதில் அதிக கரிசணை செலுத்துவதைப் பார்க்கிறோம்.
    
மேடல் அழகியாக இருந்த ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ப பின் தன் நிர்வாண ஆடைக்கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறி தன் உடலை முழுமையாக மறைத்து ஹிஜாப் அணிந்திருப்பது அதற்கான ஓர் சான்றாகும்.

இஸ்லாமும் பெண்களின் ஆடையும் ஓர் அறிமுகம்:

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்ஆன் 24:31)


يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல்குர்ஆன் 33:59.)

((يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ))
ஆதமுடைய மக்களே உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடிய ஆடையையும் அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு இறக்கி வைத்துள்ளோம் இன்னும் பாவங்களை மறைக்கக்கூடிய பரிசுத்தமான பயபக்தி எனும் ஆடை, அதுதான் மிக மேலானது” (ஸுறா அல் அஃராப்: 96)

قال رسول الله صلى الله عليه وسلم : " صنفان من أهل النارلم أَرَهُمَا : قوم معهم سِياطٌ كأذناب البقر يضربون بها الناس , ونساء كاسيات عاريات , مُمِيلاتٌ مائلات , رؤوسهن كأسنمة البُخْتِ المائلة , لا يدخلن الجنة , ولا يجدن ريحها , وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا " .[ مسلم ]
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இரு வகையினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களில் ஒரு வகையினர் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பார்கள். இன்னொரு வகையினர் ஆடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவார்கள். பிறரைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களும் பிறர் பக்கம் வீழ்வார்கள்.  இவர்களின் தலை உயரமான கழுத்துடன் அங்கும் இங்கும் சாயும் ஆண் ஒட்டங்களின் திமில்களைப் போல் இருக்கும். இவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். சுவனத்தின் வாடையை இன்னின்ன தூரத்தில் இருந்து கூட நுகரலாம். (ஆனால், இவர்களோ அச்சுவர்க்கத்தை விட்டும் வெகுதூரம் விலக்கி வைக்கப்படுவார்கள்.) ( நூல்: முஸ்லிம் )

فقد روى النسائي عن أبي موسى الأشعري قال: قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
وفي مسند الإمام أحمد
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எந்தப் பெண் நறுமணம் பூசிய நிலையில் அதை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு மத்தியில் நடந்து செல்கின்றாளோ அவள் விபச்சாரியாவாள்.”           ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال : " رأى رسول الله صلى الله عليه وسلم عَلَيَّ ثوبين معصفرين , فقال : ( إن هذه من ثياب الكفار فلا تَلْبَسها ). [ مسلم ]
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருந்தேன். இதைக் கண்ட நபி {ஸல்} அவர்கள் இந்த ஆடைகளை அணியாதீர்கள்! இவை நிராகரிப்போர்களுடைய ஆடைகள்என என்னிடம் கூறினார்கள்.  ( நூல்: முஸ்லிம் )

قال رسول الله صلى الله عليه وسلم : " من تشبه بقوم فهو منهم " . [ صحيح ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”மாற்றார்களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவர்கள் அவர்களைச் சார்ந்தவர்களே!”               ( நூல்: முஸ்லிம் )


قال رسول الله صلى الله عليه وسلم : " ومن لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ في الدنيا , ألبسه الله ثوبَ مَذَلَّةٍ يوم القيامة , ثم ألهب في ناراً " . [ حسن ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உலகில் புகழுக்காகவும், பிறர் புகழ்வதற்காகவும் ஆடை அணிபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் இழிவெனும் ஆடையை அணிவித்து நரகத்தில் புகுத்துவான்.”            ( நூல்: நஸாயீ )

وعن أبي هريرة رضي الله عنه قال : " لعن رسولُ الله صلى الله عليه وسلم الرجلَ يَلْبَس لِبْسَةَ المرأة , والمرأة تلبَسُ لِبسَةَ الرجل " . [ صحيح ]
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களையும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களையும் சபித்தார்கள்.”         ( நூல்: முஸ்லிம் )

وقال رسول الله صلى الله عليه وسلم : " ثلاث لا يدخلون الجنة , ولا ينظر الله إليهم يومَ القيامة: العاقُ والديه , والمرأةُ المترجلة المتشبهة بالرجال , والدَّيُّوث "الحديث.[ صحيح ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மூன்று நபர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவிக்க மாட்டான். நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களை பார்க்கவும் மாட்டான். 1. பெற்றோருக்கு நோவினை செய்பவன்., 2. ஆண்களுக்கு ஒப்பாக ஆடை அணியும் பெண்., 3. குடும்பத்தார்களின் அசிங்கங்களை, தீய நடத்தைகளை அங்கீகரிப்பவன்.”                     ( இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்னத் அஹ்மத் )

قال رسول الله صلى الله عليه وسلم : " ليس منا من تشبه بالرجال من النساء , ولا من تشبه بالنساء من الرجال ". [ صحيح ]
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ”ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் நம்மைச் சார்ந்தவரல்லர்.”   ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

மேலுள்ள சில செய்திகள் மூலம் இஸ்லாம் பெண்களின் ஆடை தொடர்பாக போசியுள்ளதை அவதானிக்கலாம். அச் செய்திகள் அனைத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்க கூடியவற்றை தெளிவுபடுத்துகின்றது

இவ்வுலகில் எந்பொருளெல்லாம் பெறுமதி மிக்கதாக இருக்கின்றதோ அவைகள் அனைத்தும் நாலு சுவருக்குள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தங்கம், உயில் பத்திரங்கள், பணம், என்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். அதே போல இஸ்லாமும் பெண்களை  கண்ணியப்படுத்தி பாதுகின்றது. அதற்காகவே இந்த செயற்பாடுகளை முஸ்லிம் பெண்கள் மீது கட்டாயதாக்கியுள்ளதை விளங்கலாம்.

மேலும் மனித நடத்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தும் காரணிகளுள் சினிமாத்துறை முக்கிய இடம் வகிக்கினறது. குறிப்பாக பெண்களை விரசமாக காண்பித்து கோடிகளில் புரளும் கேடிகள் கூட, தங்கள்  படங்களில் எதிரிகளிடமிருந்து ஒரு பெண் தன்னை காத்துக் கொள்ள தனது உடம்பையும் முகத்தையும் மறைப்பதை பார்க்கிறோம்.  முஸ்லிம்களது ஆடை முறை  பெண்களை அடக்குவது என்றால் சினிமாவில் ஏன் அதனை பிரதிபலிக்கவில்லை.?

அரபு நாடுகளில் வசிக்கும் பெண்களது ஆடை முறையானது  பெண்களை அடிமைப்படுத்துகிறது என்றால் பாலியல் ரீதியான குற்றங்களும் அதிகமாக விபச்சாரமும் ஏன் இங்கு அதிகரிக்கவில்லைஎனவே பெண்கள் பாதுகாப்பிற்கு முஸ்லிம்களது ஆடையே பொருத்தமானது என்பது தெளிவாகின்றது

       உலகில் பெண்களது உரிமை, பெண்களது பாதுகாப்பு பற்றி வாய் கிழிய பேசுகின்றனர். அவ்வாறனவர்களின் நாடுகளில் தான் பெண்கள் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் கற்பளிக்கப்படுவதை காண்கிறோம்.  பெண்கள்  வேலைக்குச் செல்லும் இடத்த்தில் பாலியல் சேட்டைகளுக்கு உட்படுகிறாள். தவறான நடத்தைகளுக்குள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இப்படியான பிரச்சினைகளுக்கு மூல காரணமாக ஆடை முறையும் காணப்படுகின்றன.

குறிப்பாக  மனிதப்படைப்பில் பெண்கள்  அதிகம் கவர்ச்சி மிக்கவர்களாகவே படைக்பட்டுள்ளனர். அதிக ஈர்ப்பு அவர்கள் மீதே இருப்பதால் அவர்கள் தங்களை  காத்துக் கொள்வது அவசியமாகும். தனியாக ஒரு பெண் எப்போது பாதுகாப்பாக தன்னந்தனியே இரவில் நடமாடுகிறாளோ அப்போது தான் இந்தியா சுதந்திரம் அடைந்திரிக்கிறது என்றார் மகாத்மா காந்தி

எமது இலங்கையில் பெண்களது ஆடைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் விதிமுறைகளை பின்பற்றுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். ஏனைய மதத்தவர்கள்  தங்கள் ஆடைகளில் குறைவுகளை ஏற்படுத்துகின்றனர். இறுக்கமான ஆடைகள் அணிந்து தமது மார்புகளும் உள்ளாடைகளும் தெரிகின்ற அளவிற்கு உடையணிகின்றனர்.  நம் நாட்டில் ஏனைய இனத்துப் பெண்கள் மார்க, கீழ் உள்ளாடை தெரியுமளவு ஆடையணிய அனுமதி உள்ளதுஈ அதனை யாருமே கண்டு கொள்வதில்லை அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் முஸ்லிம் பெண்களின் ஆடை விடையத்தில் மூக்கை நுழைப்பது எந்த விதத்தில் நியாயம்.

அரைகுறை ஆடை  சமூதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கவில்லை என்றால்? முழுமையான இஸ்லாமிய ஆடை எப்படி சமூகத்தை சீர்கெடுக்கும்.?

எமது ஏனைய சமூக சகோதரிகளது ஆடைக்கலாச்சாரம் சுமார் 20 வருடத்திற்கு முன்னர் இருந்தமைக்கும் தற்போதைய முறைக்கும் பாரியளவில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளன. இந்த முறைகளை வரவேற்போர் முஸ்லிம்களது ஆடையில் மாத்திரம் பொங்கியெழுவது எதனைக் காட்டுகிறது. இப்படியான ஒரு செயற்பாடு அபிவிருத்தியில் பயணிக்கும் நாட்டிற்கு சவாலாக அமையும் செயற்பாடுகளாகும்.

எனவே கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் நாட்டு மக்களுக்கிகடையே புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மதம் சார்ந்த போக்குகளில் அடுத்த இன மக்கள் மூக்கை நுழைக்காது இருக்க வேண்டும். ஆடை எனப்பதை அந்தந்த மதத்தவர்கள் பின்பற்றுபவற்றில் அத்துமீறுவது எதிர்கால இலங்கைக்கு அபிவிருத்தி துறைக்கும், இன நல்லிணக்கத்திற்கும் குந்தகமாக மாறிவிடும

   எனவே புரிந்துணர்வோடு இனைந்த செயற்பாட்டில் நாட்டை கட்டியெழுப்பி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைவரும் முயற்சிப்போம.!


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget