பின்னனி
இதன் பின்னனி உணவில் கருத்தடை மாத்திரை போடுவதோ, நான்கு முஸ்லிம் இளைஞர்கள் ஓர் சிங்கள வாலிபரை கொன்றதோ கிடையாது. மாற்றமாக அதிகரித்து வரும் முஸ்லிம்களின் வணிகச் செல்வாக்கை முடக்குவதும், சிங்கள பேரினவாதத்தை தேசிய அளவில் கொண்டு செல்வதுமாகும்.
இதற்கு பக்கபலமாக சில பேரனிவாத அரசியல் சக்திகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயற்படுகின்றன.
பேரினவாதிகள் யார் ?
சிங்கள இனவாதம் என்பது இன்று, நேற்று உறுவெடுத்த ஒன்றல்ல. ஆங்கிலேய ஆட்சியின் கடைசிப்பகுதியில் தோற்றம் பெற்ற ஒன்று.
இன, மத, மொழி வேறுபாடின்றிய ஓர் இனம் இலங்கையில் செயற்பட வேண்டுமென பெரும்பான்மை சிங்களவர்களும், சிங்கள பௌத்த இனமே இலங்கையில் தலைதூக்க வேண்டுமென ஓர் சில சிங்கள்வர்களும் அன்றிலிருந்தே போராட்டங்களை மேற்கொண்டனர்.
இன்றும் 70 சதவிகிதம் பெரும்பான்மையை வகிக்கும் சிங்களவர்களில் 5 சதவிகிதத்தினரே இனவாதத்தைத் தூண்டுகின்றனர். 35 வயதிற்கு மேற்பட்ட பெரும்பான்மையான சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் சினேகபூர்வ உறவையே பேணிவருகின்றனர்.
15-35 வயதிற்குட்பட்ட சில சிங்கள வாலிபர்கள் திட்டமிடப்பட்ட முறையில் ஓர் சில பௌத்த மத குருமார்கள் மூலமும், அரசியல்வாதிகள் மூலமும் இனவாதிகளாக மூலைச்சலவை செய்யப்படுகின்றனர்.
பேரினவாதிகளால் இது வரை சேதம்விளைவிக்கப்பட்ட முஸ்லிம் உடைமைதளின் விபரம்
அம்பாரை மாவட்டம்
அம்பாரை
பள்ளிவாயல்கள் 1
உணவகங்கள் 3
புடவைக்கடை 1
பாதிக்கப்பட்டோர் 4
கண்டி மாவட்டம்
திகன மற்றும் தெல்தெனிய
பள்ளிவாயல்கள் 14
வியாபார நிலையங்கள் 52
வீடுகள் 45
வாகனங்கள் 35
பாதிக்கப்பட்டோர் 50
மரணித்தோர் 01
கடுகஸ்தோட்டை
பள்ளிவாயல்கள் 2
வியாபார நிலையங்கள் 4
வீடுகள் 55
வாகனங்கள் 1
பாதிக்கப்பட்டோர் 75
மெனிக்ஹின்ன
பள்ளிவாயல்கள் 1
வியாபார நிலையங்கள் 3
மாதளை மற்றும் வத்தேகம
பள்ளிவாயல்கள் 1
வியாபார நிலையங்கள் 3
பாதிக்கப்பட்டோர் 4
அகுரன
பள்ளிவாயல்கள் 4
வியாபார நிலையங்கள் 27
வீடுகள் 24
வாகனங்கள் 10
குருந்துகொல்ல
பள்ளிவாயல்கள் 1
வியாபார நிலையங்கள் 3
வீடுகள் 5
கம்பஹா மாவட்டம்
பூகொட
பள்ளவாயல்கள் 1
வியாபார நிலையங்கள் 5
வீடுகள் 2
கண்டி மாவட்டத்தின் மொத்த சேத விபரம்
மரணித்தோர் 01
காயமடைந்தோர் 12
வீடுகள்- பூரண சேதம் 62
வீடுகள் – சாதாரன சேதம் 79
பள்ளிவாயல்கள் 17
வியாபார நிலையங்கள் – பூரண சேதம் 91
வியாபார நிலையங்கள் – சாதாரன சேதம் 22
வாகனங்கள் 60
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 300
பயிரை மேய்ந்த வேலிகள்
10 நாள் அவசகால தடை உத்தரவு, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என எதையோ எல்லாம் செய்யது கலவரத்தை அடக்க முயன்ற அரசுக்கு...
முஸ்லிம்களை மாத்திரம் கட்டுப்படுத்தி, வீட்டிற்குள் முடக்க முடிந்ததே தவிர 0.005 சதவிகித கலவரக்காரர்களை உடனடியாக முடக்க முடியாமல் போனது விடை தெரிந்த மர்மமாகும்.
இருப்பினும் தனது சக்திக்கு உட்பட்ட வகையில் இது வரை சுமார் 85 சிங்கள பயங்கரவாதிகளை போலிஸார் கைது செய்துள்ளதுடன், புதிய சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மதுகம பண்டார திடீரென பதவிக்கு வந்த பின் கலவரத்துக்கான சூத்திரதாரிகளில் ஒருவரான அமித் வீரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளான்.
முஸ்லிம்கிளுக்கு எமது வேண்டுகோள்
ஜமாஅத் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், ஊர் வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகள் அனைத்துமே எம்மை ஓர் குடையின் கீழ் ஒரு போதும் கொண்டுவரப் போவதில்லை.
நில அளவு பேதங்களும், அதில் ஆட்சியமைக்கும் அளகுகளும் ஓர் நாட்டை முன்னேர விடாமல் செய்யும் ஆங்கிலேயரின் சதிகள்.
நபியவர்களின் இன, நில, ஆட்சி பேதமற்ற தனி அரசியலை கற்று வளர்ந்த நாம் சிறந்த தலைமைகளை உருவாக்க முனைய வேண்டும்.
நிர்வாக அளகை சிறந்த முறையில் கற்று, பள்ளிவாயல்களை நிர்வகிக்கும் சிறந்த ஆழுமைகளை உருவாக்கிட வேண்டும்.
தேர்ச்சி பெற்ற உலமாக்களின் ஆலோசனைகளுக்காக ஷூரா சபையை உருவாக்க வேண்டும்.
இவைகளினூடாக எமது இளைஞர்களையும், சிறார்களையும், வயோதிபர்களையும், ஆண்கள் பெண்கள் என வேறுபாடு பாராது வழிநடாத்திட வேண்டும்.
அப்போதே அடிமைத் தன்மை அற்ற மக்களாகவும், ஒற்றுமையின் மூலமும், பொருளாதரத்தின் மூலமும் நாட்டையும், நாட்டு மக்களையும் கட்டியெழுப்ப முடியும்.
தமிழ் சகோதரர்களுக்கு எமது வேண்டுகோள்
அநியாயத்திற்கு எதிராக முஸ்லிம்கள் எப்போதுமே குரல் கொடுப்பர். அதில் இன, மத, மொழி வேறுபாடுகள் எதுவும் இருக்காது என்பது இலங்கை வரலாறு நெடுகிலும் ஏன் உலக வரலாறுகளிலும் பதியப்பட்ட அழிக்க முடியாத உண்மை.
முஸ்லிம்கள் எப்போதும் அனைவரையும் சகோதரர்களாகவே பார்த்து வருகின்றனர். நீங்களும் எங்கள் சகோதரன், நாங்களும் உங்கள் சகோதரன்.
எல் ரீ ரீ யினர் முஸ்லிம்களை அநியாயமாக கொன்றதினாலே நாம் அவர்களை வெறுத்தோம். ஈழத்தை வெறுக்கவில்லை.
தமிழினத்தினரை பகடைக் காய்களாய் பயன்படுத்தியதால் அரைவாசித் தமிழர் அவர்களை வெறுத்தனர்.
காலம் கடந்தாலும் அவர்களின் வீரத்துக்கு இலங்கையில் நிகர் கிடையாது.
இனவாதிகளின் இனமோதல்களுக்கான சதிகளை நம்பி நாம் ஒரு காலமும் இரு அணியினராக இருக்கக் கூடாது.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.