(வஸீம் ஹூஸைன்)
எமது அல் இமாம் முஹம்மத் பின் ஸூஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம்முறை எமது பல்கலையிலிருந்து பட்டம் பெற்று நாடு செல்லவிருக்கும் நண்பர்களான எம்.எப்.எம். ஆஸிர் (ஸலபி)(ரியாதி), ஏ.எம். ராஸிப் (ஷாபிஇ) (ரியாதி) ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த புதன் (31.01.2018) அன்று எம்.ஏ நயிமுல்லாஹ் (தப்லிஹி) (PhD Reading) அவர்களின் வீட்டின் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
எமது மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ நயிமுல்லாஹ் தப்லிஹி (PhD Reading) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்தின் செயலாளர் ரம்ஸான் பாரிஸ் மதனி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் ரியாத் மலிக் ஸூஊத் பல்கலைக்கழக மாணவர்களான ரஷாத் (ஸஹ்வி) (PhD Reading), பேரோஜ் அன்வாரி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இரவு 10.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வினை ஸாஜிதீன் (ஸஹ்வி) அவர்கள் தொகுத்து வழங்கினார். தொடந்து நிகழ்வில் வரவேற்புரையினை எம்.ஜே.எம். ரிஸ்மி (அப்பாஸி) (PhD Reading) அவர்கள் ஆற்றினார்கள். பின்னர் தலைவர் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
அவர் உரையாற்றுகையில்
எமது மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தியதோடு, வெளியாகும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி விடைபெற்றார்.
தொடர்ந்து விடுகை மாணவர்களான ஆஸிர் (ஸலபி) ராஸிப் (ஷாபிஇ) ஆகியோருக்கு பேச இடமளிக்கப்பட்டது. இதன் போது தனது பல்கலை அனுபவங்களை கண்ணீரும் கம்பலையுமாக எம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
இடை நடுவில் விழாக் கதாநாயகர்கள் பற்றிய விபரண ஒலித் தொகுப்பு ஒலிபரப்பப்பட்டது. எமது மாணவர்களான ஹிஸ்புல்லாஹ் (அன்வாரி) வஸீம் ஹூஸைன் ஆகியோரது தயாரிப்பில் கதாநாயகர்களது வாழ்க்கை வரலாற்றை ஒலி வடிவில் கவி நயத்தோடு அழகுற ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
தொடந்து பிரதம அதிதியின் உரை இடம் பெற்றது. அதில் வெளியாகி சென்ற பழைய மாணவர்கள் நிலை குறித்த தகவல்களை கூறி, அவர்களது மார்க்க அறிவு, தஃவாவில் அவர்களது தொடர்புகள், மக்கள் மன்றத்தில் அவர்கள் பற்றிய விடையங்கள் என்பவைகளை எம் மனக் கண் முன்னே கொண்டு வந்து, நாம் இவற்றில் பெற வேண்டிய படிப்பினை தொடர்பாக ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிச் சென்றார்.
தொடர்ந்து இல்ஹாம் (கபூரி) (MA. Reading) அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. ஈற்றில் இரவு 11.45 மணியளவில் கப்பாறதுல் மஜ்லிஸூடன் முடிவு பெற்றது.
இறுதியாக இரவு நேர விருந்துபசாரத்துடன் இந்நிகழ்வு முற்றுப் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.