முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றாகிய மஸ்ஜிதுல் அக்ஸாவின் ஸ்தலம் குத்ஸை இஸ்ரேலின் தலைநகரமாக மாற்றும் திட்டம் சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.
பல முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார்.
அவர் இதனைப் பற்றிக் குறிப்பிடும் போது “இது மிகப் பிந்திய நகர்வு” என்று கூறினார்.
நேற்று வரை இஸ்ரேலின் தலைநகரமாக டெல்அவீவ் காணப்பட்டு இன்று முதல் குத்ஸாக மாறியது பல முஸ்லிம் நாடுகளைக் கொதிக்கச் செய்துள்ளது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுடனான அனைத்து தொடர்புகளையும் தான் துண்டிக்கப்போவதாக துர்க்கி ஜனாதிபதி அர்துகான் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இத்தீர்மாணம் பாரிய விளைவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று சவூதி அரேபியா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது மேலும் நேற்றுவரை பல தடவைகள் ட்ரம்புடன் இது தொடர்பாக கலந்துரையாடியாதகவும் அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்றும் தம் கவலையையும் தெரிவித்துள்ளது.
பலஸ்தீனின் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் இஸ்ரேலிய தலைநகராக குத்ஸை அறிவிப்பது இரு நாடுகளுக்கிடையில் மெம்மேலும் பகையை மூட்டும் செயலென்று கூறி குத்ஸ் பலஸ்தீனின் நிரந்தர தலைநகரம் என்றும் குறிப்பிட்டார்.
1948 ஆம் ஆண்டு தனி நாடாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேல் 1949 ஆம் ஆண்டு குத்ஸைத் தலைநகரமாக அறிவித்த போது அதனை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்தது.
மீண்டும் 1980 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வைத்தபோதும் இதுவும் உலக நாடுகளின் பாரிய எதிர்புக்களுள்ளாகியது.
இறுதியாக அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்புடன் நேற்று ( 06 - 12 - 2017 ) குத்ஸ் இஸ்ரேலின் தலைநகர் என அறிவிக்கப்பட்டது.
ஆக்கம் : எப் . ஆர் . முஹம்மத்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.