அல் மஜ்மஃ பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
சஊதி அரேபியாவில் அமைந்துள்ள அல் மஜ்மஃ பல்கலைக்கழகத்திற்கு 1439/1440 ம் ஹிஜ்ரி ஆண்டிற்கான புலமைப் பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர்வதற்கு சஊதி அரேபியா தவிர்ந்த உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி குறித்த விண்ணப்பங்களை * http://edugate.mu.edu.sa/mu/ui/home.faces * எனும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தினூடாக 2017/12/09 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் விடயங்களைக் கருத்திற் கொள்வது அவசியம்.
📍விண்ணப்பிக்கும் முன்னர் நிபந்தனைகள், தேவையான ஆவணங்களை அறிந்து கொள்ளல்.
📍உள்நாட்டு அல்லது வெளிநாட்டு புலமைப் பரிசில் என தெளிவாகக் குறித்தல்.
📍தெளிவில்லாத , நிபந்தனைக்குட்படாத அல்லது பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
📍குறித்த பல்கலைக்கழக இணையத்தள பக்கம் மூலம் அனுப்பப்படாத எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தகவல்- முஹம்மத் அவ்ன் சமூன்
அல்-இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகம்
ரியாத்.
28/11/2017
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.