(முஹம்மது வஸீம் ஹுஸைன்)
ஸஊதி அரேபியா ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியம் “முப் பெரு விழா“ ஒன்றை கடந்த 15.08.2017 அன்று கொழும்பு ஜம்இயது ஷபாப் கேட்போர் கூடத்தில் நடாத்தினர்.
நூல் வெளியீடு, இணையத்தள அங்குரார்ப்பணம், ரவ்ழது ரமழான் பரிசளிப்பு என மூன்று அம்சங்களையும் அடிப்படையாக வைத்து இந் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
எமது பல்கலைக் கழக மாணவர் ஜே.எம். ஹிஸ்புல்லாஹ் அன்வாரி அவர்கள் தொகுத்து வழங்கிய இந் நிகழ்வில் மௌலவி எம்.ஐ ரிஸ்வான் ஹாமி அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ நயிமுல்லாஹ் தப்லிஹி அவர்கள் தலமையுரையாற்றினார்.
அவ்வுரையில் மாணவர் ஒன்றியத்தின் உருவாக்கம், அது கடந்து வந்த பாதை, நடப்பாண்டில் செய்த வேலைத்திட்டம், எதிர்கால செயற்பாடுகள் பற்றி அவையினருக்கு தெளிவுபடுத்தினார்.
நூல் வெளியீடு
முதல் அமர்வில் நூல் வெளியீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. பல்கலைக் கழக நூல் குழு உருவாக்கிய “இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டி” நூல் வெளியிடப்பட்டது. அதன் படி இந் நூலுக்கான அறிமுக உரையினை மௌலவி அஹ்மத் அப்பாஸி அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து இந்நூலுக்கான தமிழ் விமர்சன உரையினை அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயலாளர் முபாரக் மதனி அவர்கள் நிகழ்த்தினார்கள். இதன் போது இந் நூலின் பெறுமானம், மக்கள் மன்றத்தில் எதிர்காலத்தின் பெறப் போகும் வரவேற்பு பற்றி விரிவுபடுத்தியிருந்தார். தொடர்ந்து அரபு மொழியிலான விமர்சனத்தை இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் ழபர் மதனி அவர்கள் ஆற்றினார்கள்.
தொடர்ந்து அஹ்மத் அப்பாஸி அவர்கள் சுட்டிக்காட்டிய விடையங்களோடு நூலுக்கான ஏற்புரையை தாங்கிக் கொண்டார். பின்னர் இந் நூலுக்கான பிரதிகள் வருகை தந்த பிரமுகர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஜம்இயது ஷபாபின் பணிப்பாளர் மௌலவி ரஷீத், அல் ஹிக்மாவின் பணிப்பாளர் ஷேய்குத்தீன் மதனி, அல் ஹிம்மாவின் பணிப்பாளர் மௌலவி ஹாரூன், ஐ.ஐஆர்.ஓ பணிப்பாளர் மௌலவி இம்ரான், அ.இ.ஜ.உ செயலாளர் முபாரக் மதனி, ஷபாபின் உப பணிப்பாளர் தாஸிம் மௌலவி அவர்களும், தைபா நிறுவன பணிப்பாளரும் பிரபல எழுத்தாளருமான ரிஸ்வான் மதனி, மௌலவி ஆதம்பாவா, மௌலவி ஷேகு முஹ்யித்தீன் போன்றவர்கள் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
இணையத்தள அறிமுகம்
எமது மாணவர்களது இயக்கத்திலுள்ள www.alimamslsf.com என்ற இணையத்தளம் கோலாகலமாக வெளியிடப்பட்டது. எமது ஒன்றியத்தின் கௌரவ தலைவர் எம்.ஏ நயிமுல்லாஹ் தப்லிஹி அவர்கள் உத்தியோகபூர்வமாக இதனை அங்குரார்ப்பனம் செய்து வைத்தார். இதற்காக வேண்டி பிரத்தியோகமான சிறப்புக் காணோளி தயாரிக்கப்பட்டு பார்வையாளர் மத்தியில் திரையிடப்பட்டது.
இதில், எமது தளத்தின் பக்கபார்வையாளர்கள், நாடுதழுவிய ரீதியாக வருகை தந்தோர், அதிக பார்வைகள் கொண்ட கட்டுரை போன்றன விபரணப்படுத்தப்பட்டது.
ரவ்ழது ரமழானும் பரிசளிப்பும்
கடந்த ரமழானை முன்னிட்டு எமது இணையத்தளம் நடாத்திய ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி 2017 நிகழ்வு நாடு பூராகவும் மக்கள் மனம் வென்ற ஓர் கற்றல் நடவடிக்கையாகவும், போட்டி நிகழ்வாகவும் திகழ்ந்தது. சுமார் 620 பேர் விடையளித்த இப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு தமிழ் தஃவாக் களத்தில் ஓர் பரிமாணம் எனலாம்.
இதன் போது முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் சார்பாக எமது மாணவர்கள் சார்பாக முறையே ஸாஜிதீன் ஸஹ்வி,வஸீம் ஹுஸைன்,ரிஸ்வான் ஹாமி போன்றவர்கள் அதற்கான சிறப்புக் கூப்பனை வெற்றியாளர்கள் சார்பாக பெற்றுக் கொண்டனர்.
ஈற்றில் வரலாற்றில் தடம் பதித்த முப்பெரு விழா அனைவரது பாராட்டுக்களோடும், ஏற்புதல் மிக்க விமர்சனங்களோடும் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இந் நேரத்தில் இவ் விழாவை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்விற்கு நன்றிகளை கூறியவர்களாக, இவ் விழாவிற்காக தமது கேட்போர் கூடத்தை வழங்கியது மட்டுமல்லாது பகல் போசன ஏற்பாட்டையும் செய்து தந்த ஜம்இயது ஷபாபின் பணிப்பாளர் மௌலவி ரஷீத் அவர்களுக்கும் உப பணிப்பாளர் தாஸிம் மௌலவி அவர்களுக்கும், இந் நிகழ்வினை நிழற்படுத்தி தந்த ஷபாபின் ஊடகப் பிரிவிற்கும், அதன் ஊழியர்கள் அனைவருக்கும், இதற்காக உழைத்த எமது ஒன்றிய மாணவர்களுக்கும் நன்றிப் பூக்களை சொரிகின்றோம்.

கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.