ரவ்ழது ரமழான் - 2017 முடிவுகள்

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அன்புள்ளசகோதர,சகோதரிகளுக்கு கடந்த ரமழான் மாதம் முழுவதுமாக எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணையத்தள குழு ஆகியன நடாத்திய ரவ்ழது ரமழான் – 2017 வினா விடைப் போட்டியின் பெறு பேறுகள் வெளியாகியுள்ள நேரத்தில் உங்களோடு இப் போட்டி தொடர்பாக சில விடையங்களை தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அதில்,

இப்போட்டியை ஆரம்பத்தில் இலங்கை தீவிற்குள் மாத்திரம் நடாத்தவே தீர்மானித்தோம். இருந்தும் பின்னர் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் கலந்து கொள்ள அனுமதி தருமாறு வேண்டியதற்கிணங்க லண்டன், ஸஊதி அரேபியா, கட்டார், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் என பலர் எமது போட்டியில் கலந்து சிறப்பித்தனர். அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு எமது தளத்திற்கு வருகை தந்து சுமார் 1800 இற்கும் அதிகமானவர்கள் எமது பாடத்ததை கற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

நோன்புகாலத்தில் இப் போட்டி மிகப் பயனுள்ள ஒன்றாக இப் போட்டியும் பாடத்திட்டமும் காணப்பட்டதாக எமக்கு வாழத்துக்கள் அனுப்பிய 250 இற்கு மேலான சகோதர, சகோதரிகளது கருத்துரைகள் சான்று பகர்கின்றன.

அந்தஅடிப்படையில் 30 நாட்களும் கேள்விகள் கேட்கப்பட்டு 07.07.2017 அன்று முடிவுற இருந்த எம் போட்டி தபால் நிலைய அடையாள வேலை நிறுத்தம் காரணமாக பலர் தபால் அனுப்புவதில் சிரத்தை அனுபவித்ததால் ஒரு வாரம் அதிகப்படியாக 14.07.2017 வரை கால அவகாசம் வழங்கியிருந்தோம்.

அதன்பிரகாரம் குறித்த தினத்தோடு நாடு பூராகவும் இருந்து 620 விடைகள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அதிகப்படிகளாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 227 பதில்களும், மத்திய மாகாணத்தில் 89, மேல் மாகாணத்தில் 60 என பல மாகாணங்களை பிரதி நிதித்துவப் படுத்தப்பட்டவர்கள் கைகளில் கிடைக்கப் பெற்றவைகளாகும்.

கிடைக்கப்பெற்ற பதில்களை பார்க்கின்ற போது நாடு பூராகவும் எமக்கு கிடைத்த நற்பெயரும், தூய இஸ்லாத்தை பரப்பிய பூரிப்பும் உண்மையில் எங்களை ஆட்கொண்டு விட்டதெனலாம். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்விடைகளை பொறுத்த வரைவில் 100 வீதம் எந்த பாரபட்சமின்றி அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக திருத்தங்களை மேற் கொண்டோம். அதில் அதிகப்படியாக நாங்கள் நல்ல பெறுபேறுகளைக் கண்டு அகமகிழ்கின்றோம். அதில் கிட்டத்தட்ட 220 பேர் 100 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோன்று பலர் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். அவர்களும் பாராட்டப்பட வேண்டிய வெற்றியாளர்களே. எனவே போட்டி ஏற்பாட்டுக் குழு சார்பில்  கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.


விடைளுக்கானபுள்ளிகளை பொறுத்தவரையில் முதல் 20 வினாக்களுக்கு 3 புள்ளிகள் வீதம் 60 உம் மீதமுள்ள 10 வினாக்களுக்கும் 4 புள்ளிகள் அடிப்படைளாக 40 ம் என மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கியுள்ளோம்.

மேலும் 1,2,3 இடங்களை பெற்றவர்கள் என்ற விபரத்தை 02.08.2017 அன்று கொழும்பில் நடைபெறும் எமது பரிசளிப்பு நிகழ்வில் அறிவிக்க இருக்கின்றோம்

ஏலவேநாம் அறிவித்த பிரகாரம்
1. பரிசு
2. பரிசு
3. பரிசு
4 – 10 பரிசு
11 – 30 பரிசுகள்

கலந்துகொண்ட 620 பேருக்கும் புத்தகமும், சான்றிதழ்களும்

என்றஅடிப்படையில் உங்களுக்கு வழங்கப்படும். என்பதையும் அறியத் தருகின்றோம்.

அல்லாஹ்விற்காக இப்பணியை ஆரம்பித்து மனிதப் பலவீனங்களுக்கு மத்தியில் பல கெடுபிடிகளுக்குள்  100 வீதம் எந்த கலப்புமில்லாது நடாத்தியது மட்டுமல்லாது, அதில் நாம் எதிர்பார்த்த அடைவை விட ஒரு படி மேலே சென்றுள்ளது.

அதற்குஎமக்கு உதவியாக இருந்த அல்லாஹ்விற்கே நன்றிகள் உரித்தாகட்டும்

 அடுத்த படியாக எமக்கு உறுதுணையாக இருந்த மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நயிமுல்லாஹ் ( தப்லிஹி, PhD reading) அவர்களுக்கும், எமக்கு தோள் கொடுத்து அல்லும் பகலும் அயராது பாடுபட்ட மாணவர் ஒன்றிய செயலாளர் ஸாஜிதீன் ஸஹ்வி அவர்களுக்கும், தடக்கி விழுந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் நெஞ்சோடு தாங்கி பக்கபலமாய் இருந்த முஹம்மத் நூரி, முஹம்மத் அப்பாஸி, முக்ரம் ஷாபிஇ ஹிஸ்புல்லாஹ் அன்வாரி அவர்களுக்கும், இப் பருவகாலத்தில் எமக்கு உதவிய ரிஸ்வான் ஹாமி (MA Reading), நிம்ரான் ஷாபிஇ அவர்களுக்கும் எமது நன்றிப் பூக்களை சொரிகின்றோம்.

-    போட்டி ஏற்பாட்டுக் குழு

மேலதிகவிபரங்களுக்கு
 MZ. முஹம்மத் – 077 920 14 22  (whatsapp 00966 55 110 9331)
 FR. முஹம்மத் -   077 77 11 081  (whatsapp 00966 53 774 2829)
 MA. நயிமுல்லாஹ்-  077 785 86 02  (whatsapp 00966 55 961 8765)

















abdhullah zaid , 309a muslim school road, gandara, matare    100










கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget