பாடம் 06 - மல சலம் கழிப்பதன் ஒழுங்கு முறைகள்
மலசலம் கழிப்பதன் ஒழுங்கு முறைகள்.
௦1. மலசலம் கழிக்கும் இடத்திற்கு நுழையும் முன் துஆ ஓத வேண்டும்.
நபியவர்கள் கழிப்பிடத்திற்கு சென்ற போது, “இறைவா அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். ( புகாரி : 142 )
௦2. மலசலம் கழிக்கும் போது மருமஸ்தானங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். உட்காரும் வரை ஆடையை உயர்த்தக்கூடாது. மனிதர்களின் பார்வையை விட்டும் தூரமான இடத்தில் மல சலம் கழிக்க வேண்டும்.
நபியவர்கள் மலசலம் கழிப்பதற்கு நாடினால் மனிதர்களை விட்டும் தூரமாகிச் சென்று கழிப்பார்கள். ( நூல் : அபூதாவூத், பாடம் : மலசல தேவையின் போது தனிமையாதல், பாகம் : 1, பக்கம் : 1 )
“நபியவர்கள் மலசலம் கழிப்பதற்கு நாடினால் கழிக்கும் இடத்தை நெருங்கும் வரை ஆடையை உயர்த்தமாட்டர்கள்”. ( நூல் : திர்மிதி, பாடம் : மல சல தேவையின் போது தன்னை மறைத்துக்கொள்ளல், பாகம் : 1, பக்கம் : 66 )
௦3. மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவோ, பின்னோக்கவோ கூடாது.
உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது தம் முதுகுப் புறத்தால் ( கிப்லாவை ) பின்னால் ஆக்கவும் கூடாது. ( எனவே ) கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள். ( புகாரி : 144 )
குறிப்பு : மேற்குறிப்பிட்ட ஹதீஸ் கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.
௦4. மலசலம் கழிக்கும் போது பாதையோரங்கள், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், நிழலான இடங்கள் போன்றவற்றை விட்டும் தூரமாகிக் கொள்ளல் வேண்டும்.
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : சபிக்கப்பட்டவர்களை விட்டும் பயந்து கொள்ளுங்கள் அவர்கள் மனிதர்கள் கடந்து செல்லும் பாதைகளில் அல்லது நிழலாக இருக்கக் கூடிய இடங்களில் மல சலம் கழிப்பார்கள். ( இப்படி செய்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ). ( முஸ்லிம் : 269 )
௦5. தேங்கி நிற்கக்கூடிய நீரில் மலசலம் கழிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
“ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டு பின்னர் அதில் குளிக்க வேண்டாம்”. என்று நபியவர்கள் கூறினார்கள். ( புகாரி : 239 )
௦6. மலசலம் கழிக்கும் இடத்திற்கு நுழையும் போது இடது காலை முற்படுத்த வேண்டும். வெளியாகும் போது வலது காலை முற்படுத்த வேண்டும்.
௦7. நீர் அல்லாதவிடத்து கல், பேப்பர் போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்வதாக இருந்தால் அதன் மூலம் மூன்று விடுத்தம் சுத்தம் செய்யவேண்டும்.
“நபி ( ஸல் ) அவர்கள் எங்களை மூன்று விடுத்தத்துக்கு குறைவாக சுத்தம் செய்வதைத் தடுத்தார்கள்”. ( முஸ்லிம் : 262 )
நீர் அல்லாத சுத்தம் செய்யக்கூடிய பொருட்கள் மூலம் ஒற்றைப் படியாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இருக்க வேண்டும்.
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : “யார் வுழு செய்கிறாரோ, அவர் நாசிக்கு நீர் செலுத்தட்டும். யார் கல்லைக் கொண்டு சுத்தம் செய்கிறாரோ, அவர் அதனை ஒற்றைப் படியானதாக ஆக்கிக் கொள்ளட்டும்”. ( புகாரி ; 161 )
௦8. எலும்பு, விட்டை போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.
நபி ( ஸல் ) அவர்கள் எலும்பு அல்லது விட்டையைக் கொண்டு சுத்தம் செய்வதை விட்டும் எங்களைத் தடுத்தார்கள். ( முஸ்லிம் : 262 )
௦9. வலது கையால் சுத்தம் செய்யக் கூடாது.
“உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அபத்தைத் தொடவேண்டாம் வலக் கரத்தால் சுத்தம் செய்திடவும் வேண்டாம்” என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். ( புகாரி : 154 முஸ்லிம் : 267 )
1௦. மல சல கூடத்திலிருந்து வெளியாகும் போது துஆ ஓத வேண்டும்.
நபியவர்கள் மல சல கூடத்திலிருந்து வெளியானால் “ ஹுப்ரானக “ என்ற துஆவை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். ( அபூதாவூத் : 3௦ ).
கேள்வி இல 29
மலசலம் கழிக்கும் முறைகள் இரண்டும் அதற்காக ஆதாரங்களையும் தருக?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.