பாடம் 05 - தண்ணீரின் வகைகள்
தண்ணீர் இரண்டு வகைப்படும் : சுத்தமான நீர், அசுத்தமான நீர்.
5.1. சுத்தமான நீர்:
அல்லாஹ் கூறுகிறான் : ( நாங்கள் வானத்தில் இருந்து பரிசுத்தமான நீரை இறக்கிவைத்தோம் ). (அல் புர்கான் : 48 )
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சயீத்( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் ( நிச்சியமாக நீர் சுத்தமானது அதனை எந்த ஒன்றும் அசுத்தப்படுத்த மாட்டது ). ( நூல் : அபூ தவூத் )
சுத்தமான தண்ணீரில் ஏதாவது ஒரு சுத்தமான பொருள் கலப்படுவதன் மூலம் அதன் பெயர் மாற்றம் அடையுமாயின் அத்தண்ணீர் சுத்தமானதாகக் கணிக்கப்படமாட்டாது, அவ்வாறு மாற்றம் அடையாவிட்டால் அது சுத்தமானதாகவே கொள்ளப்படும். அச்சுத்தமான பொருள் அதனுடன் கலந்து தண்ணீர் என்ற பெயர் மாறவில்லையானால் அதன் மூலம் சுத்தம் செய்வது ஆகுமானதாகும்.
அதற்கு உம்மு அதிய்யா ( ரழி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களின் மகள் மரணித்த சந்தர்ப்பத்தில் அவர்களை குளிப்பாட்டிய சம்பவம் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது, அவர்கள் குறிப்பிடுவதாவது : நாங்கள் நபி ( ஸல் ) அவர்களின் மகளை குளிப்பாட்டிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் நபி ( ஸல் ) அவர்கள் வந்து “நீங்கள் கருதினால் அவர்களை தண்ணீரின் மூலமும் இலந்தை இலைகளின் மூலமும், மூன்று அல்லது ஐந்து அல்லது அதனை விட அதிகமான முறைகளில் குளிப்பாட்டுங்கள், இறுதியில் கற்பூரத்தை சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். ( நூல் : புகாரி 1253 ) இது சுத்தமான ஒரு பொருள் கலந்த தண்ணீராகும், என்றாலும் அக்கலவை தண்ணீர் என்ற பெயரை மாற்றவில்லை.
சுத்தமான தண்ணீர் என்பது , இயல்பு நிலையில் இருக்கக்கூடிய, அல்லது சுத்தமான ஒரு பொருள் கலப்பதன் மூலம் தண்ணீர் என்ற பெயர் மாற்றம் பெறாத தண்ணீரைக் குறிக்கின்றது. இவ்வாறான தண்ணீரின் மூலம் சுத்தம் செய்வது ஆகுமானதாகும்.
5.2. அசுத்தமான நீர்.
அசுத்தமான நீர் என்பது அதனுடைய பண்புகளில் ஏதாவது ஒன்று அசுத்தமான பொருளின் மூலம் மாற்றம் பெருவதை குறிக்கும்.
அதனை அசுத்தத்தை நீக்குவதற்கோ அல்லது தொடக்கை அகற்றுவதற்கோ உபயோகிப்பது ஆகுமாகமாட்டாது.
கேள்வி இல 28
நபிகளாரின் மகளை குளிப்பாட்டிய பெண்மணியின் பெயர் என்ன?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.