பாடம் 02 - இஸ்லாமிய சட்டக் கலையின் அடிப்படை மூலாதாரங்கள்
2.1. அடிப்படை மூலாதாரங்கள்.
௦1. அல்குர்ஆன் : அல்லாஹ்வால் நபி ( ஸல் ) அவர்களுக்கு தெளிவான அரபு மொழியில் இறக்கி வைக்கப்பட்டு, தொடர்ச்சியான ( முதவாதிரான ) முறையில் அறிவிக்கப்பட்டு எங்களை வந்தடைந்த, அதனை ஓதுவது நன்மையை ஈட்டித் தரக்கூடிய, புத்தக வடிவில் இருக்கின்ற, அதனுடைய அர்த்தத்திலும் சொற்களிலும் அற்புதத்தையும் பொதிந்திருக்கின்ற, பாதிஹா சூராவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஸுரதுன் நாசை கொண்டு முடிவு பெறக்கூடியதுவே அல்குர்ஆன் ஆகும்.
௦2. அஸ்ஸுனாஹ் : நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், மற்றும் நற்பண்புகள், உடலமைப்பு என்பவற்றை உள்ளடக்கியது ஸுன்னாவாகும்.
2.2. துணை மூலாதாரங்கள்.
௦3. அல்இஜ்மா : நபி (ஸல் ) அவர்களின் பின்பு அவர்களின் சமுதாயத்தில் இருக்கும் முஜ்தஹிதீன்கள் ஒரு மார்க்க சட்டத்தில் ஒன்றுபடுதலே இஜ்மாவாகும்.
௦4. அல்கியாஸ் : இரு மார்க்க பிரச்சினைகளின் நோக்கம், காரணம் என்பன ஒன்றுபட்டு இருந்தால் மார்க்கத்தில் ஏற்கனவே தீர்ப்பு சொல்லப்பட்ட சட்டத்தை கொண்டு நவீன பிரச்சினைக்கு தீர்வுகாணும் முறையை இது குறிக்கும்.
கேள்வி இல 25
சுன்னா என்பதன் வரைவிலக்கணம் யாது?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.