பாடம் 01 - பிக்ஹு கலை ஓர் அறிமுகம்
1.1. பிக்ஹு என்றால் என்ன ?
பிக்ஹு என்றால் அகராதியில் ஆழமான விளக்கம் என்று பொருள்கொள்ளப்படும்.
செயற்பாட்டுவழக்கில் : செயல்படுத்தும் மார்க்க சட்டங்களை விரிவான ஆதாரங்களை கொண்டு அறிதல் என்ற பொருளை கொண்டிருக்கும்.
மேலே சொல்லப்பட்ட விளக்கம் இறை வழிபாடு சார்ந்த வணக்கங்களான அடியானுக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களான ஒரு சமுதாயத்தோடு இருக்கும் தொடர்பையும் குறித்து நிற்கின்றது.
எனவே பிக்ஹு என்பது ஆத்மீக விடயங்களை உள்ளடக்கிய ஒரு தெளிவான சட்டமாகும். இஸ்லாம் மார்க்கம் உலக விடயங்களையும் மார்க்க விடயங்களையும் ஒரே வடிவில் தெளிவுபடுத்தியிருந்தாலும் ஷரீஅத் சட்டங்களையும் பிக்ஹு சட்டங்களையும் பிரித்துக் கவனிப்பது அவசியமாகும்.
ஷரீஅத் சட்டங்கள் குர்ஆன் ஹதீஸ் மூலம் வந்த வஹியின் வசனங்களாகும். அவை புனிதம் மிக்கவையாகும்.
ஷரீஅத்தை உரிய முறையில் விளங்குவதற்கும் அதனை நடைமுறைபடுத்துவதற்கும் அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியின் கலை வடிவமே பிக்ஹு ஆகும். அதனால் பல அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஆனால் இவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சிறு சிறு பிரச்சினைகளில் மாத்திரமே தவிர மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில் அல்ல என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1.2. இஸ்லாமிய சட்டக் கலையை கற்பதன் முக்கியத்துவம்:
௦1. இது அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத்தருகிறது.
௦2. தனி மனிதனதும் சமூகத்தினதும் வாழ்வை சீர்செய்கிறது.
௦3. மனித வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
௦4. புதிதாக உருவாகும் சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது.
௦5. இஸ்லாமிய மார்க்கம் அனைத்து காலத்துக்கும் பொருத்தமானது என்பதனை உறுதிப்படுத்துகிறது.
06. தனிமனிதனினதும் சமூகத்தினதும் மார்க்க சட்டங்களை அறிதல்.
1.3. பிக்ஹுக்கும், அகீதாவுக்கும் இடையிலான வித்தியாசம்.
அகீதா என்றால் மொழி வழக்கில் பலமாக கட்டுதல், இதன் எதிர் பதம் அவிழ்த்தல் என்பதாகும்.
ஒருவனுடைய கொள்கை என்பது அவனது உள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்வதாகும்.
அகீதா என்பது ஒரு மனிதன் அவனுடைய உள்ளத்திலே நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உறுதியாக ஒன்றை ஏற்றுக்கொள்வதாகும்.
இஸ்லாமிய மார்கத்தில் அகீதா என்பது செயற்பாடு( இபாதத்) அல்லாத ஏனைய நம்பிக்கை சார்ந்த விடயங்களை குறிக்கிறது. ( உதாரணமாக அல்லாஹ் இருக்கிறான் என்பதை நம்பிக்கை கொள்ளுதல்)
செயற்பாட்டுவழக்கில் : உள்ளம் உண்மைப்படுத்தக்கூடிய இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளவதும், அது அவனுடைய உள்ளத்திலே உறுதியாக இருக்கும் வரை உள்ளம் திருப்தியடைவதுமாகும்.
பிக்ஹு என்பது விரிவான ஆதரங்களில் இருந்து பெறப்படும் செயல்சார்ந்த மார்க்க சட்டங்களை அறிவதாகும்.
அகீதாவுக்கு ஆரம்ப கால அறிஞர்கள் பிக்ஹுல் அக்பர் என்று பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் பிந்திய கால அறிஞர்களோ பிக்ஹு என்பதை தனியாகப் பிரித்து விரிவான ஆதாரங்களில் இருந்து பெறப்படும் செயற்பாடு ரீதியான மார்க்க சட்டங்களுக்கு மாத்திரமே இப்பெயரை சூட்டினர். இதனால் ஆரம்ப கால அறிஞர்கள் பயன்படுத்திய பிக்ஹு என்ற சொல்லின் முழுமையான அர்த்தம் சுருங்கி தற்போது அதில் ஒரு பகுதியான இபாதத், கொடுக்கல் வாங்கல், திருமணம் போன்ற சட்டதிட்டங்களைக் குறிப்பதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது.
பிக்ஹு என்பது அல்லாஹ்வின்பால் நெருங்கக்கூடிய வழிகளை அறிதல் எனும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
அகீதாவிலும் பல வகைகள் இருக்கின்றன ( உதாரணமாக அல்லாஹ்வையும் அவனது பெயர்கள், பண்புகள் மற்றும் ஈமான் கொள்கின்ற ஆறு அம்சங்கள் போன்ற அனைத்தையும் அறிதல், சுவர்க்கம், நரகம், கப்ர் வேதனை போன்றன உண்டு என நம்புதல். இது போன்றவற்றை அறிவதற்கும் பிக்ஹு என்று சொல்லப்படும். எனினும் இவை அனைத்தும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டிய உள்ளத்தோடு தொடர்புபட்ட ஈமான் ( கொள்கை ) சார்ந்த சட்டதிட்டங்களாகும்.
கேள்வி இல 24
இஸ்லாமிய சட்டக்கலையை கற்பதன் முக்கியத்துவம் இரண்டு தருக?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.