ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 16)


பாடம் - 07
7.1 இக்லாப் (பிரட்டுதல் ) ( மாற்றுதல் ).

சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனுக்கு” பின்னால் “ இக்லாப் “ உடைய எழுத்தான பா ( ب) இடம்பெற்றிருப்பின் சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனை” மீம் (م ) ஆக பிரட்டி குன்னா இராகத்துடன் ஓத வேண்டும் .

உதாரணம் : (فَأَنْبَتْنَا) عبس: ٢٧

(كِرَامٍ بَرَرَةٍ) عبس: ١٦

விளக்கம் : உதாரணம் 1 ஐ கவனிக்க.

(فَأَنْبَتْنَا) கோடிடப்பட்ட இடத்தில் சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ அடுத்து பா ( ب ) எழுத்து வந்திருப்பதால் (ப அன்பத்னா ) என்பதற்கு பதிலாக (ப அம்பத்னா ) என்று குன்னாவுடன் ஓத வேண்டும் .

7.2 இக்பா ( மறைத்தல் ).

சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனுக்கு” பின்னால் “ இக்பா “உடைய பதினைந்து எழுத்துக்களில் ஏதேனும் ஓர் எழுத்து வந்தால் சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனை அடுத்து வரும் எழுத்துடன் மறைத்து குன்னா இராகத்துடன் ஓத வேண்டும் .

இக்பா" உடைய எழுத்துக்கள் பின்வருமாறு :

ت ، ث ، ج ، د ذ، ، ز ، س ،ش، ص ، ض ، ط ،ظ ، ف ، ق ، ك 
 
 

விளக்கம் : உதாரணம் 13 ஐ கவனிக்க.

المَنْفُوْشُ இங்கே கோடிடப்பட்ட இடத்தில் சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ அடுத்து இக்பா உடைய எழுத்தான ((ف வந்திருப்பதால் ; இக்பா உடைய சட்டத்தின் படி சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ பாதியாக மறைத்து குன்னா இராகத்துடன் ஓத வேண்டும்.



கேள்வி இல 16

இஹ்பா என்ற தஜ்வீத் சட்டத்திற்கு ஓர் உதாரணம் கூறி அச் சட்டத்தை விளக்குக!

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget