பாடம் 06
6.1 இத்காம் ( நுழைத்தல்):
சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனுக்கு” பின்னால் “ இத்காம் “ உடைய ஆறு எழுத்துக்களில் ஏதேனும் ஓர் எழுத்து வந்தால் சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனை” அவ்வெழுத்துக்களுடன் நுழைய வைத்து ஓத வேண்டும் .
இத்காமுடைய எழுத்துகள் ஆறு . அவை ي ، ر ، م ، ل ، و ن அவற்றை சுருக்கமாக يَرْمَلُوْنَ என்று கூறலாம் .
“ இத்காம் “ இரண்டு வகைப்படும்:
1. إدغام بغنة ( இத்காம் பிகுன்னா )
2. إدغام بغير غنة ( இத்காம் பிகைரி குன்னா )
01. بغنة إدغام ( இத்காம் பிகுன்னா ) ( குன்னாவுடன் இத்காம் செய்தல் )
இத்காம் பிகுன்னா என்பது : சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனுக்கு” பின்னால் ي ، و ، م ، ن என்ற எழுத்துக்களில் ஓர் எழுத்து வந்தால்; அப்போது சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனை” அடுத்து வரும் எழுத்துடன் நுழைத்து குன்னா இராகத்துடன் ஓத வேண்டும் .
( குன்னா என்பது ; மூக்கின் அடிப்பகுதியில் இருந்து வெளியாகும் சத்தத்திற்கு கூறப்படும் . )
விளக்கம் : உதாரணம் 1 ஐ கவனிக்க.
وَمَن يَّعْمَلْ கோடிடப்பட்ட இடத்தில் “மன் யஹ்மல்” என்று சாதாரணமாக நாம் ஓதுவோம். ஆனால் இத்காம் பிகுன்னாவுடைய சட்டத்தின் படி சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ "யாவுடன்" நுழைத்து “மய்யஹ்மல்” என குன்னாவுடன் ஓத வேண்டும் . இதை போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.
الإظهار المطلق ( இல்ஹாருள் முத்லக் ) :
பொதுவாக இத்காம் செய்வதாக இருந்தால் ; சுகூன் செய்யப்பட்ட “நூன்” ம் அல்லது “தன்வீன் ” ம் ஒரு சொல்லின் இறுதியில் வந்து , இத்காம் பிகுன்னா உடைய எழுத்து அடுத்த சொல்லின் ஆரம்பத்தில் வருவது நிபந்தனையாகும்.
ஆனால் ஒரே சொல்லில் சுகூன் செய்யப்பட்ட “நூன்” ம் இத்காம் பிகுன்னா உடைய எழுத்தும் வந்தால்; இத்காம் செய்வதற்கு மாற்றமாக - சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ இத்காம் பிகுன்னா உடைய எழுத்தில் நுழைய வைக்காது – இல்ஹார் செய்து - சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ வெளியாக்கி ஓத வேண்டும் . இதற்கு (இல்ஹாருள் முத்லக் ) என்று கூறப்படும் .
குறிப்பு :. “ இல்ஹார் முத்லக்குக்கு உதாரணமாக அல் குர்ஆனில் நான்கு சொற்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் . அவையாவன ( دُنْيَا ، قِنْوَانٌ ،صِنْوَانٌ ، بُنْيَانٌ )
02 ( இத்காம் பிகைரி குன்னா ) (குன்னா இல்லாமல் இத்காம் செய்வது )
“இத்காம் பிகைரி குன்னா” : சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனுக்கு” பின்னால் ل ، ر இவ்விரண்டு எழுத்துக்களில் ஏதாவது ஓர் எழுத்து இடம் பெற்றால் ; அப்போது சுகூன் செய்யப்பட்ட “நூன்” அல்லது “தன்வீனை” அடுத்து வரும் எழுத்துடன் நுழைத்து குன்னா இராகமின்றி – சத்தத்தை மூக்கால் வெளிப்படுத்தாமல் - ஓத வேண்டும் .
விளக்கம் :
مِنْ لبنَ கோடிடப்பட்ட இடத்தில் “மின் லபனின் “ என்று நாம் சாதாரணமாக ஓதுவோம் . ஆனால் “இத்காம் பிகைரி குன்னா” ன் சட்டத்தின்படி சுகூன் செய்யப்பட்ட “நூன்” ஐ (லாம் ) ل உடன் இணைத்து “மிள்ளபனின்” என குன்னா இராகமின்றி -சத்தத்தை மூக்கால் வெளிப்படுத்தாமல் - ஓத வேண்டும் . இதை போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.
கேள்வி இல 15
இழ்ஹாருல் முத்லக் இற்கு உதாரணம் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது? அவை எவை ?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.