பாடம் - 04
3. நாவு : இதிலிருந்து 18 எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்றன.
1 , 2. அடி நாக்கு : (தொண்டையை அண்மித்த பகுதி), இதிலிருந்து ق ,ك ஆகியன வெளியாகும். (சிறு வேறுபாட்டுடன்).
3 நடு நாக்கு : ج ، ش ، ي (மத்துடைய ي அல்லாதது) ஆகியன இதிலிருந்து வெளியாகும்.
4 , 5. நாவின் விளிம்பு : ض ل ஆகியன கடைவாய்ப் பற்களுடன் சேர்த்து நாவின் விளிம்பிலிருந்து வெளியாகும். (சிறு வேறுபாட்டுடன்).
6. நாவின் முனை : மேற்பற்களின் ஈறுகளுடன் சேர்ந்து ل உச்சரிக்கும் இடத்திற்கு சற்று கீழால் ن வெளியாகும்.
7 நுனி நாக்கு : இதிலிருந்து மேல் முரசுடன் சேர்ந்து رவெளியாகும்.
8. நாவின் மேற்பகுதி : இது மேல் வெட்டுப்பற்களின் ஆரம்பத்துடன் (முரசுடன் சேரும் பகுதி) பட்டு ط د ت ஆகியன உச்சரிக்கப்படுகின்றன.
9. நாவின் மேற்பகுதி : மேல் வெட்டுப்பற்களின் நுனியுடன் சேர்ந்து ظ ذ ث ஆகியன வெளியாகும்.
10. நாவின் முனை : இரு பல்வரிசைகளுடனும் சேர்த்து ص ز س ஆகியன உச்சரிக்கப்படுகின்றன. (சிறு வேறுபாடுகளுடன்).
4. இரு உதடுகள் :
1. கீழுதடு : மேல் வெட்டுப்பற்கள் கீழுதடுடன் சேரும் போது ف வெளிப்படுகின்றது.
2. இரு உதடுகளுக்குமிடையில் : இரு உதடுகளும் ஒன்றோடொன்று சேருவதன் மூலம் ب م ஆகியன உச்சரிக்கப்படுகின்றன. அவை திறந்த நிலையில் و என்ற எழுத்து (மத்துடைய و அல்லாதது) வெளியாகின்றது.
5. மூக்கின் செவுள் :
1. மூக்கின் செவுளின் மூலம் ராகம் வெளிப்படுகின்றது. இதனை அரபியில் குன்னா (غُنَّة) என்று கூறப்படும்.
கேள்வி இல 13
குன்னா என்றால் என்ன?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.