பாடம் 03
அரபு எழுத்துக்களின் உச்சரிப்புக்கள்
அரபு எழுத்துக்கள் மொத்தம் 28 உள்ளன என்பது நாம் அறிந்த விடயம். இவ்வெழுத்துக்கள் அனைத்தும் உச்சரிப்பு மற்றும் வடிவமைப்பில் வித்தியாசப்படுகின்றன. அரபு எழுத்துக்கள் உச்சரிக்கப்படும் இடங்களை அம்மொழியில் மஃக்ரஜ் (مخرج) எனபோம்.
ஓர் எழுத்தின் சரியான உச்சரிப்பை அடையாளம் காண மிக இலகுவான வழி அவ்வெழுத்திற்கு 'ஸுகூன்' அல்லது 'சத்து' செய்ய வேண்டும். பின் ஒரு 'ஹம்ஸை' சம்பந்தப்பட்ட எழுத்திற்கு முன்னால் வைத்து உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிக்கும் பட்சத்தில் அவ்வெழுத்து வெளியாகும் இடத்தைக் உணர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக அரபு எழுத்துக்கள் ஐந்து இடங்கள் வாயிலாக வெளிப்படுகின்றன. அவை பின்வருமாறு:
1. வாயின் உட்பகுதி (அதாவது வாயினுள் இருக்கும் வெறுமை). இதனை அரபு மொழியில் அல் ஜௌஃப் (الجَوْفْ) என்பார்கள்.
2. தொண்டைஇ இதனை அரபியில் அல் ஹல்க் (الحَلْق) எனப்படும். இது மூன்று வகைப்படும் :
• அடித் தொண்டை (أَقْصَى الْحَلْق) .
• நடுத் தொண்டை (وَسَطُ الْحَلْق) .
• மேல் தொண்டை (அதாவது தொண்டையின் ஆரம்பப் பகுதி (أَدْنَى الْحَلْق).
3. நாவுஇ இதனை அரபியில் அல் லிஸான் (اللِّسَان) என்று கூறுவர்.
4. இரு உதடுகள்இ இதனை அரபியில் அஷ்ஷபதான் (الشَّفَتَان) என்று கூறுவர்.
5. மூக்கின் செவுள்இ இதனை அரபியில் அல் ஃகைஷூம் (الخيشوم) என்று கூறுவர்.
• இந்த ஐந்து இடங்களிலிருந்து வெளிப்படும் எழுத்துக்களை நோக்கும் பொழுது இவற்றை 17 இடங்களாக எடுத்து விரிவாகப் பார்க்கலாம். அவை பின்வருமாறு :
1. வாயின் உட்பகுதி:
1. வாயின் உட்பகுதி (அதாவது வாயினுள் இருக்கும் வெறுமை). இவ்விடத்திலிருந்து மத்துடைய எழுத்துக்கள் (و, ا, ي) ஆகியன வெளியாகும்.
2. தொண்டை : இதிலிருந்து 6 எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்றன.
1. அடித் தொண்டை : ء هـ ஆகிய இரு எழுத்துக்களும் அடித் தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படுகின்றன.
2. நடுத் தொண்டை : ع ح ஆகிய இரு எழுத்துக்களும் நடுத் தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படுகின்றன.
3. மேல் தொண்டை : غ خ ஆகிய இரு எழுத்துக்களும் மேல் தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படுகின்றன.
கேள்வி இல 12
தொண்டையிலிருந்து வெளியாகும் எழுத்துக்கள் எத்தனை அவை யாவை?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.