பாடம் - 09
9.1. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று சாட்சியம் பகர்தல் என்பதன் பொருள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் அடியான், அவர் மனித சமூகத்திற்கே அனுப்பப்பட்ட தூதர் என்று உள்ளும், புறமும் ஏற்றுக்கொள்வதும், அதற்கமைவாக செயற்படுதலுமே இதன் பொருளாகும்.
(முஹம்மத்) இவரின் முழுப் பெயர்: முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் அல்குரஷி என்பதாகும். இவர் அரபு இனத்தைச் சேர்ந்தவர். இப்றாஹிம், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் பரம்பரையில் வந்தவர்.
(ரஸூலுல்லாஹ்) என்பதற்கு, அல்லாஹ்வின் தூதர் என்று பொருள். இவர் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் நன்மாராயம் மற்றும் எச்சரிக்கை செய்பவராக அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர். இறைவன் கூறுகிறான், “இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயம் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை” (அல்குர்ஆன் 34: 28),
“உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.” (அல்குர்ஆன் 25: 1),
மேலும் இறுதி நபியாகவும் அல்லாஹ் அவரை அனுப்பி வைத்தான். “முஹம்மது (ஸல்) அவர்கள்- உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்”(அல்குர்ஆன் 33: 40),
முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையோடு முன்னால் அருளப்பட்ட அனைத்து வேதங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே இவர் கொண்டு வந்த மார்க்கத்தைத் தவிர வேறெதனையும் பின்பற்ற முடியாது. இவர் கூறியதைத் தவிர வேறெதையும் செய்து சுவனம் செல்லவும் முடியாது. அல்லாஹ் கூறுகிறான், “இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.” (அல்குர்ஆன் 03: 85),
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, எனது சமூகத்தில் யஹுதியோ, நஸ்ரானியோ நான் சொல்வதைக் கேட்காமலும், நான் அனுப்பப்பட்ட நோக்கத்தை விசுவாசம் கொள்ளாமலும் மரணித்தால் அவர் நரகவாசியைத் தவிர வேறெவருமில்லை” (முஸ்லிம்).
முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாக சாட்சியம் கூறுவதில் உள்ளடங்குபவை :
1. அவர் ஏவியவைகளை எடுத்து நடப்பதும்
2. அவர் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துவது.
3. விலக்கியவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பதும்.
4. அவர் காட்டித்தந்த விதத்தில் அல்லாஹ்வை வணங்குதல்.
அல்லாஹ் கூறுகிறான், “மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 59: 7),
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 64: 8),
“(நபியே!) நீர் கூறுவீராக: ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்” (அல்குர்ஆன் 07: 158)
(இன்றோடு அகீதா பாடம் முடிவடைகின்றது. நாளை முதல் மிக முக்கிய பாடமாகிய தஜ்வீத் ஆரம்பமாகும்.)
கேள்வி இல 09
முஹம்மத் நபியவர்களை சாட்சியம் சொல்வதில் உள்ளடங்குபவை யாவை?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.