பாடம் - 08
8.1. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்ற சாட்சியத்தை முறிக்கும் அம்சங்கள்
“ஈமான் கொண்டோரே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்! மேலும் (அவனுடைய) தூதருக்கு கீழ்படியுங்கள்! (மாறு செய்து) உங்கள் அமல்களை வீணாக்கிவிடாதீர்கள்!” (அல்குர்ஆன் 47:33)
மேற்குறிப்பிட்ட சாட்சியை முறிக்கும் செயல்களில் மிகவும் ஆபத்தான, மக்கள் மத்தியில் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பத்து விஷயங்களை அஷ்ஷைக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) மற்றும் அவர்களைப் போன்ற அறிஞர்கள் தொகுத்தளித்துள்ளார்கள். அவைகளை விட்டும் தாங்களும் விலகி, பிறரையும் எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் அவைகளை விட்டும் முற்றிலும் பாதுகாப்பு பெறவேண்டும் என்பதற்காகவும் சிறிய விளக்கங்களுடன், சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றது. அவை:
01. அல்லாஹ்வுக்காக மட்டுமே நிறைவேற்ற வேண்டிய வணக்க, வழிபாடுகளில் பிறரை இணையாக்குதல்.
உதாரணமாக, இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது, அவர்களிடம் பாதுகாவல் தேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அவர்களுக்காக பிராணிகளை அறுத்துப்பலியிடுவது.
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்”.(அல்குர்ஆன் 4 :48)
மேலும், “எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவுபவர் எவருமில்லை”. (அல்குர்ஆன் 5:72)
02. அல்லாஹ்வுக்கும் தமக்கும் மத்தியில் இடைத்தரகை ஏற்படுத்தி, அவர்களிடம் பிரார்த்திப்பவன், இறந்தவர்களிடம் பரிந்துரைக்க வேண்டுபவன், அவர்கள் மீது தவக்குல் நம்பிக்கைவைப்பவன் எவ்வித கருத்து வேறுபாடின்றி நிச்சயமாக அவன் நிராகரித்து விட்டான்.
03. இணைவைப்பாளர்களை இறைநிராகரிப்பாளர்கள் என கருதாவிட்டாலோ, அல்லது அவர்களின் நிராகரிப்பை சந்தேகித்தாலோ, அல்லது அவர்களின் மதங்களை சரிகண்டாலோ அவனும் நிராகரித்தவன் ஆகிவிட்டான்.
04. நபி r அவர்களின் வழிகாட்டுதலை விட பிறரின் வழிகாட்டுதல் பரிபூரணமானது என்றோ, நபி r அவர்கள் வகுத்தளித்த சட்டங்களை விட பிறருடைய சட்டங்கள் சிறந்தது என்றோ கருதினால் அவனும் நிராகரித்தவனாகி விட்டான். நபி r அவர்களின் சட்டங்களை விட ஷைத்தான் - தாகூத் - களின் சட்டங்களை சிலர் மேன்மைப்படுத்துவதும் இதில் அடங்கும்.
05. எவரேனும் நபி r அவர்கள் கொண்டுவந்தவற்றில் எதையேனும் ஒன்றை வெறுத்தால் நிச்சயமாக அவனும் நிராகரித்தவனாகி விட்டான். அவ்வெறுப்புடன் அவன் அதனை செய்து கொண்டிருந்தாலும் சரியே!
அல்லாஹ் கூறுகிறான்: “ஏனெனில் நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமையால் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கிவிட்டான்.” (அல்குர்ஆன் 47:28)
06. நபி r அவர்களின் வழிகாட்டுதலில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது - மார்க்கத்தின் - தண்டனையையோ, கூலியையோ கேலிசெய்பவனும் நிராகரித்தவனாகி விட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. காரணம் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள்”. (அல்குர்ஆன் 9:65-66)
07. சூனியம்: நல்ல தொடர்புகளை பிரிப்பதற்காகவோ, தீயவற்றை ஆசையூட்டவோ சூனியம் செய்வது.
உதாரணமாக, ஒருவன் தன் மனைவி மீது கொண்டுள்ள அன்பை கோபமாக மாற்றுவது, அல்லது அவன் விரும்பாதவற்றை ஆசையூட்டுவது.
இவை அனைத்தும் ஷைத்தானுடைய வழிமுறைகளிலேயே செய்யப்படுகின்றன. எனவே யாரேனும் இதனைச் செய்தாலோ, அல்லது அதனை பொருந்திக் கொண்டாலோ அவனும் நிராகரித்தவனாகி விட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் இருவரும் "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை. (அல்குர்ஆன் 2:102)
08. இணைவைப்பாளர்களை ஆதரிப்பதும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவுவதும் இஸ்லாத்தை முறித்துவிடும்.
அல்லாஹ் கூறுகிறான்: “முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய உதவியாளர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர் உங்களில் எவரேனும் அவர்களை உதவியாளர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான் நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்” .(அல்குர்ஆன் 5:51)
09. ஹிழ்ர் அவர்களுக்கு மூஸா u அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கு அனுமதியிருந்தது போன்று இச்சமுதாயத்தில் (குறிப்பிட்ட) சிலர் நபி r அவர்களின் மார்க்கத்திலிருந்து வெளியேற அனுமதியுள்ளது என்று நம்புபவன் நிராகரிப்பாளனாகிவிட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்: “இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்”. (அல்குர்ஆன் 3:85)
10. அல்லாஹ்வின் மார்க்கத்தை முற்றிலும் புறக்கணித்து, அதனைக் கற்றுக் கொள்ளாமலோ, அதன்படி செயல்படாமலோ இருப்பதும் இஸ்லாத்தை முறித்துவிடும்.
அல்லாஹ் கூறுகிறான்: “எவர் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.” (அல்குர்ஆன் 32:22)
அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்ற சாட்சியை முறிக்கும் மேற்கூறிய செயல்களை வேண்டுமென்றே செய்வதற்கும் விளையாட்டாகவோ, பயந்தோ செய்வதற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் கிடையாது. நிர்ப்பந்திக்கப்பட்டவரை தவிர.
இவை அனைத்தும் மிகக் கொடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய, நம் சமுதாயத்தில் அதிகமாக மலிந்து கிடக்கும் செயல்களாகும். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவை தம் வாழ்வில் நிகழ்ந்து விடக்கூடாது என மிகவும் பயப்பட வேண்டும்.
கேள்வி இல 08
மூஸா நபியின் மார்க்கத்தை பின்பற்றாமல் இருப்பதற்கு யாருக்கு அனுமதி வழங்கப்பட்டது?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.