ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – அகீதா, நாள் 07)



பாடம் - 07
7.1. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று சாட்சியம் கூறுதல்
வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கோட்பாட்டை மனதால் ஏற்று, அதில் உறுதியாய் நின்று, செயலில் கொண்டுவருவதையே இக்கோட்பாடு குறித்து நிற்கின்றது. இதன் சரியான விளக்கத்தைப் பின்வருமாறு கூறலாம் : இப்பூமியில் உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நம்பிக்கை, சொல், செயல் அனைத்திலும் உறுதிப்படுத்துதல். இங்கு நாம் "உண்மையாக" என்ற வார்த்தையைச் சேர்த்தக் காரணம் இப்பூமியில் அசத்தியமாக வணங்கப்படக்கூடிய கடவுள்கள் நிறைய உள்ளன.
(لا إله): லா இலாஹகடவுள் தன்மை அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் இல்லையென மறுப்பதுடன், அவனையன்றி வணங்கப்படக்கூடிய எல்லாவற்றையும் கண்டிப்பாக நிராகரிக்க வேண்டும்.
(إلا الله): இல்லல்லாஹ்அல்லாஹ்வுக்கென்றே உரிய கடவுள் தன்மையை, உறுதிப்படுத்துவதுடன், அனைத்து விதமான வணக்கங்களையும் அவனுக்கு மாத்திரமே நிறைவேற்றுவதன் மூலம் ஒருமைப்படுத்த வேண்டும்.
(الله): அல்லாஹ் என்ற சொல் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரிய பெயராகும். இது அவனையன்றி வேறு எவருக்கும் சொல்லப்படமாட்டாது. இது (إله) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் வணக்கத்திற்குரியவன் என்பதாகும். அவனே உள்ளங்களை விருப்பம், மகத்துவம், மேன்மை, தாழ்மை, பலம், மேலெண்ணம், நம்பிக்கை போன்றவற்றால் வளம் பெறச் செய்து, அவனிடமே அதை மீளவைக்கவும் செய்கின்றான்.
பல கடவுள்களை மறுப்பதும், ஒரு கடவுளை ஏற்றுக்கொள்வதும் அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன்என்ற சாட்சியத்தின் இரு பிரதான நிபந்தனைகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்,: “ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார்” (அல்குர்ஆன் 02:256). இதில் எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்துஎன்ற பகுதி முதலாவது நிபந்தனையாகவும், “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோஎன்ற பகுதி இரண்டாவது நிபந்தனையாகவும் இருக்கின்றது.

7.2. இவ்வாறு சாட்சியம் சொல்வதன் நிபந்தனைகள்
எனவே லாஇலாஹ இல்லல்லாஹுஎன்ற வாசகத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின் அவர் பின்வரும் நிபந்தனைகளைப் பேணி நடந்திட வேண்டும்,
1.            அதன் பொருளை அறிந்திருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக”. (அல்குர்ஆன் 47: 19)
2.            அது எதை வலியுருத்துகின்றதோ அதில் உறுதியாக இருக்கவேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளமாட்டார்கள்”. (அல்குர்ஆன் 49: 15)
3.            அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், ஏனையவற்றை விட்டுவிடவேண்டும்என கூறப்படுபவற்றை உள்ளத்தாலும், நாவாலும், உறுப்புக்களாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லைஎன்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.”. (அல்குர்ஆன் 37: 35,36)
4.            அக்கூற்றுக்கு உறுப்புக்களாலும், செயற்பாடுகளாலும் வழிபடவேண்டும், அல்லாஹ் கூறுகிறான், “எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான்.”. (அல்குர்ஆன் 31: 22)
5.            அக்கூற்றில் உண்மையாளராக இருக்க வேண்டும், நபி

(ஸல்) அவர்கள் கூறினார்கள், ”யார் ர்  அடியான் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மத் r அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என சாட்சிகூறி, அதை தன் உள்ளத்தால் உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிடுகின்றான்”. (ஆதாரம்: அஹ்மத்)

6.            அக்கூற்றில் உளத்தூய்மையுடன் செயற்படவேண்டும். நபி

(ஸல்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்று கூறி, அல்லாஹ்வின் திருமுகத்திற்காக வேண்டி யார்  அதை நிறைவேற்றுவாரோ அல்லாஹ் அவருக்கு நரகை ஹராமாக்குகிறான்” (புஹாரி, முஸ்லிம்)

7.            அக்கூற்று கூறுபவற்றையும், அதை செயற்படுத்துவோரையும் அதன்பால் அழைப்போரையும் விரும்புவதுடன், அவற்றுக்கு முரணானவற்றை வெறுக்க வேண்டும், அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்”. (அல்குர்ஆன் 02: 165)

கேள்வி இல 07
அல்லாஹ் என்ற சொல்லின் மூலச் சொல் யாது? அச் சொல்லின் கருத்து என்ன?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget