“ கிராஅத் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் “

 (முஹம்மது முக்ரம் முஹம்மது அலி)

வரைவிலக்கணம் :

அல் குர்ஆனில் இடம்பெற்றுள்ள சொற்களை எவ்வாறு மொழிவது அவற்றிலுள்ள வேறுபாட்டையும் அவ்வேறுபாட்டை யார் அறிவித்துள்ளார்கள் என்பதையும் அறிவதுதான் கிராஅத் கலை எனப்படும் .

உதாரணம் : ஸூரா அல் பாதிஹாவில் “ மாலிகி “ ( مَالِكِ ) என்று வருகிறது . இதனை சிலர் “ மலிகி “ (مَلِكِ ) என்று “ மீம் “ க்கு பின் ஓர் “ அலிப் “ ஐ சேர்க்காது ஓதியிருக்கின்றனர். இந்த இரண்டு வார்த்தைக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு என்ன ? போன்ற விடயங்களை அறிவதுதான் கிராஅத் கலை எனப்படும் .

· இக்கலையின் பயன்பாடு :

1. அல் குர்ஆனை ஓதும் போது இடம்பெறும் பிழைகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம் .

2. ஒவ்வொரு வித்தியாசமான கிராஅத்தையும் எந்த இமாம்கள் ஓதி யிக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம் .

3. அவ்வாறு வரக்கூடிய வித்தியாசமான கிராஅத் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ளலாம் .



· இக்கலையின் சிறப்பு :

கிராஅத் கலை அல்லாஹ்வின் பேச்சுடன் தொடர்புபடுகின்றது என்பதால் அல் குர்ஆனுக்கு உள்ள சிறப்புகள் அனைத்தும் இதற்கும் இருக்கிறது .


· இக்கலையை தோற்றுவித்தவர் :

1. இக்கலையை தோற்றுவித்தவர்கள் இக்கலையின் முன்னோடி இமாம்கள் .

2. இன்னும் ஒரு அறிவிப்பில் இக்கலையை தோற்றுவித்தவர் அபூ உமர் ஹப்ஸ் இப்னு உமர் "அத்தூரி" என்பவர் ஆவார் என கூறப்பட்டுள்ளது.


· இக்கலையை படிப்பதன் மார்க்க தீர்ப்பு :

இக்கலையை கற்பதும் கற்பிப்பதும் பர்ளு கிபாயா ஆகும் .


· நபி ( ஸல் ) அவர்கள் கூறிய “ அல் குர்ஆன் ஏழு எழுத்துக்களில் – விதங்களில் – இறக்கப்பட்டுள்ளது “ என்ற இந்த ஹதீஸுக்கும் ஏழு கிராஅத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு :


பொதுவாக இன்று மக்கள் ஏழு கிராஅத் என்று கூறப்படும் இக்கலை நபி ( ஸல் ) அவர்கள் கூறிய “அல் குர்ஆன் ஏழு எழுத்துக்களில் – விதங்களில் – இறக்கப்பட்டுள்ளது “என்ற இந்த ஹதீஸைத்தான் குறிக்கும் என எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இக்கருத்து தவறானது ஏனெனில் இந்த ஹதீஸின் விளக்கம் யாதெனில் அல் குர்ஆன் அனைவருக்கும் ஓத கூடிய முறையில் இறக்கப்பட்டது. ஏழு எழுத்துக்கள் என்றால் ஏழு விதங்கள் ஏழு அரபு உச்சரிப்புகள் எனப்படும் .

வானவர் ஜிப்ரீல் (அலை ) அவர்கள் ஒரே வசனத்தை பல முறை வெவ்வேறு முறையில் நபியவர்களுக்கு ஓதி காட்டினார்கள். இறுதியாக அல் குர்ஆன் குரைஷிய பாசையை மையமாக வைத்து தான் ஒன்று திரட்டப்பட்டது.

இதனை மையமாக நோக்கும் போது தற்பொழுது எம்மிடத்தில் இருக்கும் அல் குர்ஆன் குரைஷிய பாசைக்கு தோதுவானதாக காணப்படுகின்றது .

ஏழு கிராஅத் என்று கூறப்படும் இக்கலை அல் குர்ஆன் ஒன்று திரட்டப்பட்டதற்கு பின் உருவானது என்பதும் நாம் அறிந்தவிடயமாகும் . காரணம் ஏழு கிராஅத்துடைய ஸ்தாபகர்கள் ஹிஜ்ரி 2 ம் நூற்றாண்டில் வாழ்தவர்கள் .

சுருக்கமாக கூறுவதாக இருந்தால் தற்போது ஓதப்படும் முறைகள் நபி (ஸல்) அவர்கள் ஹதீஸில் கூறிய ஏழு முறைகளில் ஒரு முறையாகும் .

· இக்கலையின் வளர்ச்சி :

அல் குர்ஆன் ஒன்று திரட்டப்பட்டதற்கு முன் நபி ( ஸல் ) அவர்கள் சில பிரதேசங்களுக்கு அல் குர்ஆனை கற்பிப்பதற்கு அதில் தேர்ச்சிப்பெற்ற ஸஹாபாக்களை அப்பிரதேசத்துக்கு அனுப்பி வைத்தார்கள் . நபியவர்களிடம் எவ்வாறு கேட்டார்களோ அவ்வாறே படித்தும் கொடுத்தார்கள் – அவர்களின் மொழிக்கு ஏற்றால் போல் –


அதே போன்று உஸ்மான் (ரலி) அவர்களும் சில ஐந்து முக்கிய இடங்களுக்கு அல் குர்ஆனையும் அதனை கற்பிப்பதற்கு ஒரு ஸஹாபியையும் அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்றவர்கள் அவர்கள் நபியவர்களிடம் கேட்டது போன்று ஓதி காண்பித்தார்கள் .

அந்த ஸஹாபாக்களிடம் படித்த மாணவர்கள் தான் பிரபலம் மிக்க கிராத் கலையின் முன்னோடிகள் ஆவார்கள்.


· கிராஅத்தின் வகைகள் :

1. முதவாதிரான கிராஅத் .

2. ஷாத்தான கிராஅத் .

1. முதவாதிரான கிராஅத் .

 கிராஅத்திற்குரிய மூண்று நிபந்தனைகள்  :.

1.  அரபு பாசைக்கு தோதுவாக இருக்க வேண்டும் .

2. “ரஸ்முல் உஸ்மானி “உஸ்மானியா எழுத்தனிக்கு தோதுவாக இருக்க வேண்டும் .

3.  அறிவிப்பாளர் தொடர் வரிசை சீரானதாக இருக்க வேண்டும் .


2. ஷாத்தான கிராஅத் .

மேலே கூறப்பட்ட நிபந்தனைகளுள் ஒரு நிபந்தனை இழக்கப்படும் போது அந்த கிராஅத் ஷாத்தான கிராஅத்தாக மாறிவிடுகின்றது .

· குறிப்பு : இன்று அதிகமான நாடுகளில் ஓதும் கிராஅத் “ இமாம் ஆஸிம் அவர்களின் கிராஅத் ஆகும்.






கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget