எமது அல் இமாம் முஹம்மத் பின் சுஊத் இஸ்லாமிய பல்கலைகழகத்தின் மார்க்க அடிப்படைகள் ( குல்லியதுல் உசூளுத்தின் ) பீடத்தின் ஹிஜ்ரி 1437 – 1438ம் கல்வியாண்டினுடைய இரண்டாம் அரையாண்டில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பல்கலைகழக மார்க்க அடிப்படைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சயாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேற்குறித்த பீடத்தின் பீடாதிபதி பஹத் பின் முஹம்மத் சுவைலிம் கலந்து சிறப்பித்தார். ஏனைய அதிதிகளாக மேற்குறித்த பீடத்தின் முக்கிய பிரிவுகளின் தலைவர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் எனது நாட்டைச் சேர்ந்த mam. முக்ரம் ( ஷாபி ) என்பவர் கலாநிதி சுலைமான் பின் அபல் ஹைல் எழுதிய " மப்ஹூமுல் ஜமாஆ வல்இமாமா " என்ற நூலில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியாக விடையளித்து பரிசாக 2500/- ரியால், சான்றிதலையும் பெற்றுக்கொண்டார்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.