அல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா






(ஹிஸ்புல்லாஹ் அன்வாரி, முஹம்மத் பத்ஹுர் ரஹ்மான் அப்பாஸி)
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் அமைந்துள்ள தலை சிறந்த பல்கலைகழகங்களில் இமாம் முஹம்மத் பின் சஊத் பல்கலைகழகமும் ஒன்றாகும். சுமார் 80 சதவீத சவுதி மாணவர்களையும் 20 வீத வெளிநாட்டு மாணவர்களையும் உள்ளடக்கியுள்ள அரச பல்கலைகழகமாகும். கல்வி ரீதியாக மட்டுமின்றி விளையாட்டு, உட்கட்டமைப்பு, போன்ற பல துறைகளில் முன்னிற்கும் இப்பல்கலைகழகத்திட்கு தற்போதைய வேந்தர் பேராசிரியர் சுலைமான் பின் அப்தில்லாஹ் அபல் ஹைல் ஆவார்கள். 

உள்வாரி, வெளிவாரி, மற்றும் தொலைதூரகல்வி, மின் கற்றல் போன்ற பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டு வருகிறது. 



தோற்றம் 


மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர் ரஹ்மான் ஆலு ஸுஊத், சவூதியின் கிராண்ட் முப்தி அஷ்ஷேஹ் முஹம்மத் பின் இப்றாஹிம் ஆலு ஷேஹ் என்பவரிடம் வேண்டிகொண்டதற்கினங்க கி.பி 1950 ஆம் ஆண்டில் (ஹிஜ்ரி 1370ல்) "ரியாத் அறிவியல் நிறுவனம்" எனும் பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இப் பல்கலைக்கழகத்துக்கான ஓர் துளியாக அப்போது விளங்கியது. அதன் பின்னர் பல கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன.  1953 (ஹிஜ்ரி 1373) ல் ஷரீஆ கற்கை பீடம் துவங்கப்பட்டது. இது இஸ்லாமிய உலகில் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய கலாபீடங்களின் ஒன்றாகத் திகழ்கின்றது. 

அல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் எனும் பெயரைப் பெற்று 1974 (ஹிஜ்ரி 1394) ஆம் ஆண்டு ஒரு மாபெரும் பல்கலைக்கழகமாக மாறும் வரை, பல உயர் கல்வி நிறுவனங்களையும், அறிவியல் நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டு வீறு நடை போட்டது. பல வகையான கல்வித் திட்டங்களை வகுத்து, அவற்றை பல படித்தரங்களில் அமுல்படுத்தி பொதுவான கல்வி நடவடிக்கைகள், கலைமானி, முதுமானி, மற்றும் கலாநிதி பட்டப்படிப்புக்கள் என தமது இலக்கை விசாலப்படுத்தியது. 

இதன் ஆரம்ப கல்வி நடவடிக்கைகளுள் இஸ்லாமிய சட்டவியல் பீடம், இஸ்லாமிய அடிப்படையியல் பீடம், மொழியியல் பீடம், மனிதவியல் அறிவுசார் துறைகள் என்பன உள்ளடங்கலாக இருந்தன.  காலத்தின் தேவை கருதி மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு, பொருளியல் மற்றும் நிர்வாக விஞ்ஞானம், கணனி மற்றும் தகவல் விஞ்ஞானம், விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல், தகவல் மற்றும் தொடர்பாடல் போன்ற பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 

நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வரும் இப்பல்கலைக்கழகம் நீதித் துறைக்கும், இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆலோசனைக்கும் என இரு உயர் கல்வி நிறுவனங்களையும், 12 முக்கிய பீடங்களையும், அரபு அல்லாதவர்களுக்கான அரபு மொழிக் கற்கை நிறுவனத்தையும் கொண்டுள்ளது. அவ்வாறே பெண்களின் கல்விக்கென இரு புனிதஸ்தலங்களின் ஊழியர் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் என்னும் பெயரில் பாரிய நிலப்பரப்பில் தனியான கல்வி நடவடிக்கைகளுக்கான கட்டிடங்களையும். 8 முக்கிய கல்வி சார் முக்கிய பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. 

மேலும் இது பல்வேறு வகையான துறைசார் பொறுப்பு, ஆராய்ச்சி மற்றும் சேவை மையங்களையும், அறிவியல் ஆராய்ச்சி சபைகள் போன்றவற்றை உள்ளடக்கி இருப்பதுடன் சவூதி அரேபியாவின் அல் அஹ்ஸா மாகாணத்தில் பாரிய பல்கலைக்கழக கிளையொன்றையும், ஏனைய மாகாணங்களில் 66 அறிவியல் கல்வி நிறுவனங்களையும், ஜப்பான், ஜிபூதி, இன்தோனேஷியா முதலிய மூன்று நாடுகளில் தனித் தனி கல்வி நிறுவனங்களையும் நிறுவி இயக்கிக் கொண்டிருக்கின்றது. 


நோக்கு 

அல் இமாம் முஹம்மத் பின் ஸவூத் இஸ்லாமிய பல்கலைக்கழகமான இது இஸ்லாமிய வழிகாட்டல் மற்றும் அதன் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்றல், கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சமூக சேவையில் ஈடுபடல் என தலை சிறந்த உலகளாவிய தரத்துடன் இயங்கி வருகின்றது. 


தூது
இஸ்லாமிய போதனைகள் மற்றும் அதன் விழுமியங்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சமூக சேவையில் ஈடுபடல் போன்ற செயற்திட்டங்களின் ஊடாக தலைமைத்துத் திறனைப் பெற்றிடவும், தம் நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பாங்கை வளர்த்திடவும் மாணவர்களின் அறிவு, அவர்களின் செயற்திறன், நற்பண்புகள் போன்றவற்றை வளர்ப்பதில் இப் பல்கலைக்கழகம் முனைப்புடன் செயற்படுகின்றது. 

குறிக்கோல்கள் 

1.இப்பல்கலைக்கழத்தோடு தொடர்புடைய, சிறந்த கலாச்சாரத்துடன் கூடிய பலம் வாய்ந்த ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்புதல். 

2. சமூக தேவைகளையும், தொழிற் சந்தையையும் கருத்திற்கொண்டு நவீன மயப்படுத்தப்பட்ட நடைமுறை சார்ந்த கல்விசார் அமைப்பொன்றை மாணவர்களுக்கு வழங்குதல். 

3. ஆய்வுப் பண்புகளை அபிவிருத்தி செய்து, அவற்றுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காய் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல். அவ்வாறே அனைத்துத் துறைகளிலும் கல்வி நடவடிக்கைகளுக்கும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்குமிடையில் பாரிய ஒற்றுமையை ஏற்படுத்தல். 

4. சவூதி அரேபிய சமூகத்திலும், உலகளாவிய ரீதியிலும் தலைசிறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெறுவதற்கு இப் பல்கலைக்கழகத்திற்கென ஓர் தனித்துவ அடையாளத்தை பதித்தல். 

5. இப் பல்கலைக்கழகத்தின் கனம், பல்துறைசார் கல்வி நடவடிக்கைகள், அதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பணியாட்கள், அவர்களின் பணிகள் என அனைத்தையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான நிர்வாக அமைப்பு முறையை அபிவிருத்தி செய்தல். 

6. அறிவியல் ஆய்வுகளுக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும், நிர்வாக அமைப்பு முறைக்கும் தொழில்நுட்பத் தகவல்களை பயன்படுத்தி, அவற்றை சிறந்த முறையில் அமுல்படுத்துவதில் இப் பல்கலைக்கழகம் தலைசிறந்து விளங்க வழிவகைகளைச் செய்தல். 

7. கற்பித்தலிலும், அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடவும் ஆசிரியர்களுக்குத் தேவையான உள மற்றும் புற ரீதியான செயற்திட்டங்களை வலுப்படுத்தல். 

8. தனது கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்திடவும், சமூகவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கும், தான் படித்த பின் தொழில் ரீதியான வாழ்வுக்காக தன்னை தயார்படுத்திடவும் மாணவனுக்குத் தேவையான உதவுகளை வழங்கல். 

இதுவரை இருந்து வந்த வேந்தர்கள்: 

1.அஷ்ஷேஹ் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆலு ஷேஹ் (1974-1976). 

2. கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்துல் முஹ்ஸின் அல் துர்கி (1976-1993). 

3. கலாநிதி முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் அஜ்லான் (1993-1997). 

4. கலாநிதி அப்துல்லாஹ் பின் யூஸுப் அல் ஷுபல் (1997-1998). 

5. கலாநிதி முஹம்மத் பின் ஸஃத் அல் ஸாலிம் (1998-2007). 

6. பேராசிரியர் கலாநிதி ஸுலைமான் பின் அப்துல்லாஹ் அபல் ஹைல் (2007- தற்போது வரைக்கும்). 

எமது பல்கலைகழத்தின் சிறப்பம்சங்கள் 

1.பல்கலைகழகத்தின் கல்விப்பீடங்களுக்கு மத்தியில் உள்ள மன்னர் பஹ்த் பின் அப்துல் அசீஸ் என்ற பள்ளி வாசல் சுமார் 20000 மாணவர்கள் தொலும் அளவு விசாலமானதாகும். 

2.மாணவர்களின் நலன் கருதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அமீர் சுல்தான் என்ற வாசிக சாலை 54000 சதுர அடிகளை கொண்டது. பலதுறை சார்ந்த 18 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை மின்னணு முறையில் உள்ளடக்கிய மூண்று மாடிகளை கொண்டதாகும். 

3.1600க்கும் மேற்பட்ட ஆசிரியர் தங்குமிட வசதிகளையும், பள்ளிவாசல், விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, வாகன தரிப்பிடம் போன்றவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. 

4.5200 தங்குமிட வசதிகள், பள்ளிவாசல், மாணவர் உள்ளக விளையாட்டு அரங்கு, வாகன தரிப்பிடம், மற்றும் உணவகம் போன்றவற்றை உள்ளடக்கிய மாணவர் விடுதி பல்கலைகழகத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

5.மாணவர்களினதும் ஆசான்களினதும் மருத்துவ நலன் கருதி சகல நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைகழக வைத்தியசாலை எப்போதும் இலவசமாகவே மருத்துவ சேவையை வழங்குகின்றது. 

6.ஒரே நேரத்தில் 10000 க்கும் அதிகமான வாகனங்கள் தரிக்கும் அளவு விசாலமான பல மாடிகளை கொண்ட வாகன தரிப்பிடத்தை கொண்டுள்ளது. 

7.தேசிய கால்பந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், சாரணர் பிரிவு உள்ளடங்கலாக பல விளையாட்டு பிரிவுகளை உள்ளடக்கி கால்பந்து, ஜூடோ, கராத்தே, கூடை பந்து, டெனிஸ், நீச்சல் போன்ற பல துறைகளிலும் தனித்தனியான அணிகளை கொண்டுள்ளது. 

8.60000கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கட்கும் இப்பல்கலைகழகத்தில் 3500 க்கும் அதிகமான ஆசான்களும் கடமை ஆற்றுகின்றனர். 

9.வருடா வருடம் சுமார் 17000க்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர். 

10.இப்பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்ட முதல் இது வரை சுமார் 2 இலட்சத்த்திட்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகி உள்ளனர்.

பட்டம் பெற்று வெளியான சிறப்பு மிக்க உலமாக்கள்

01. ஸாலிஹ் பின் பௌஸான் பின் அப்துல்லாஹ் அல் பௌஸான்
02. ஸாலிஹ் பின் முஹம்மத் அல்லுஹைதான்
03. அப்துர் ரஹ்மான் பின் அப்துல் அஸிஸ் அஸ் ஸுதைஸ்
04. அலி பின் அப்துர் ரஹ்மான் அல் ஹுதைபி
05. ஸுஊத் பின் இப்றாஹிம் ஆலு ஸுறைம்
06. முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அல் அரிபி
 


பீடங்களும், சிறப்புப் பிரிவுகளும் 


1. ஷரீஆ பீடம் (இஸ்லாமிய சட்டவியல் பீடம்):

a. இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படைகள் பிரிவு.

b. இஸ்லாமிய சட்டக்கலைப் பிரிவு.

c. இஸ்லாமிய கலாச்சாரப் பிரிவு.

d. சட்டப் பிரிவு

2. உஸூலுத்தீன் பீடம் (இஸ்லாமிய அடிப்படையியல் பீடம்):

a. அல்குர்ஆன் மற்றும் குர்ஆனிய அறிவியல் பிரிவு.

b. ஹதீஸ் மற்றும் ஹதீஸ் அறிவியல் பிரிவு.

c. இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் நவீன கால சித்தாந்தங்கள் பிரிவு.

3. அரபு மொழிப் பீடம்:

a. அரபு இலக்கியப் பிரிவு.

b. சொல்லாட்சி, விமர்சனம் மற்றும் இஸ்லாமிய இலக்கிய முறைமைப் பிரிவு.

c. இலக்கணம் மற்றும் வரலாற்றாய்வுப் பிரிவு.

4. சமூக விஞ்ஞானப் பீடம்:

a. உளவியல் பிரிவு.

b. சமூகவியல் மற்றும் சமூக சேவைகள் பிரிவு.

c. வரலாறு மற்றும் நாகரீகம்.

d. நிர்வாகம் மற்றும் கல்வித் திட்டமிடல் பிரிவு.

e. பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைப் பிரிவு.

f. அடிப்படைக் கல்விப் பிரிவு.

g. சிறப்புக் கல்விப் பிரிவு.

h. புவியியல் பிரிவு.

5. ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடம்:

a. பத்திரிகை மற்றும் மின்னணு வெளியீட்டுப் பிரிவு.

b. வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் பிரிவு.

c. மக்கள் தொடர்புப் பிரிவு.

d. மீடியா மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்புப் பிரிவு.

e. கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியாப் பிரிவு.

f. தகவல் நிபுணத்துவப் பிரிவு.

6. பொருளியல் மற்றும் நிர்வாக விஞ்ஞான பீடம்:

a. பொருளியல் பிரிவு.

b. வணிக நிர்வாகப் பிரிவு.

c. கணக்காளர் பிரிவு.

d. நிதி மற்றும் முதலீட்டு பிரிவு.

e. வங்கிப் பிரிவு.

f. இன்சூரன்ஸ் மற்றும் அபாய மேலாண்மைப் பிரிவு.

7. விஞ்ஞான பீடம்:

a. கணிதம் மற்றும் புள்ளியியல் பிரிவு.

b. இயற்பியல் பிரிவு.

8. மருத்துவ பீடம்:

a. குழந்தை மருத்துவப் பிரிவு.

b. அக மருத்துவப் பிரிவு.

c. மருத்துவக் கல்விப் பிரிவு.

d. மருந்தாக்கல் பிரிவு.

e. உடற்கூறியல் பிரிவு.

f. குடும்ப மற்றும் சமூக மருத்துவப் பிரிவு.

g. பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவு.

h. பெண்கள் மற்றும் மகப்பேற்று பிரிவு.

i. கண் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பிரிவு.

j. தோல் நோய்ப் பிரிவு.

k. எலும்பியல் பிரிவு.

l. மூக்கு, காது மற்றும் தொண்டைப் பிரிவு.

9. கணனி மற்றும் தகவல் விஞ்ஞானப் பீடம்:

a. கணனி அறிவியல் பிரிவு.

b. தகவல் அமைப்புகள் பிரிவு.

c. தகவல் மேலாண்மைப் பிரிவு.

d. தகவல் தொழில்நுட்பப் பிரிவு.

10. பொறியியல் பீடம்:

a. சிவில் இன்ஜினியரிங் பிரிவு.

b. இயந்திரப் பொறியியல் பிரிவு.

c. மின் பொறியியல் பிரிவு.

d. இரசாயன பொறியியல் பிரிவு.

e. கட்டிடக்கலைப் பிரிவு.

11. மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு பீடம்:

a. ஆங்கில மொழி மற்றும் ஆங்கில இலக்கியப் பிரிவு.

கருத்துரையிடுக...

ما شاء الله جهود مباركة

جهود مباركة وسعي مشكور. ووفقكم الله للمزيد

اللهم آمين
جزاكم الله خيرا

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget