(முஹம்மத் பத்ஹுர் ரஹ்மான்)
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் 1437 - 1438 ஆம் கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ஷேக் முஹம்மத் பின் இப்றாஹீம் மண்டபத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் 61 ஆவது பட்டமளிப்பு விழாவாகிய இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக ரியாத் மாநகரின் அமீர் மதிப்பிற்குரிய பைஸல் இப்னு பன்தர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இது போன்ற பட்டமளிப்பு விழாவில் இவ்வருடம் 23096 மாணவ மாணவிகள் பட்டம் பெற்று வெளியாகினர். இவர்களில் 255 பேர் கலாநிதிப் பட்டத்துடனும் 1616 முதுமானிப் பட்டத்துடனும் 20528 பேர் கலைமாமணிப் பட்டத்துடனும் டிப்ளமோ சிறப்புக் கற்கை நெறியில் 697 பேரும் வெளியாகினர்.
இப்பட்டமளிப்பு விழாவில் இலங்கை மருதமுனையைச் சேர்ந்த பரகஹதெனிய தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யாவின் பழைய மாணவருமாகிய மௌலவி முஹம்மது ஆஸிர் முஹம்மது பரீத் அவர்கள் பொருளியல் மற்றும் முகாமைத்துவம் என்ற பிரிவில் பட்டம் பெற்று வெளியாகினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.