நாளும் ஒரு நபிமொழி - 01 || மொழியாக்கம் : Assheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

- 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே' -

(1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணை மணப்பதை நோக்கமாகக் கொண்டால் அவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது". 

அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி).
ஆதாரம் : புஹாரி : 54, முஸ்லிம் : 1907 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

ஹதீஸ் அறிவிப்பாளர்: 

அபூ ஹப்ஸ் என்ற புனைப்பெயருடனும் அல்பாரூக் என்ற சிறப்புப் பெயருடனும் அழைக்கப்பட்ட உமர் பின் கத்தாப் (ரலி) இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் கலீபா நுபுவ்வத்தின் பின் 6ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார் அவரின் வருகை இஸ்லாத்திற்கே வெற்றியாக அமைந்தது. மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து நபிகளாருடன் அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார். அல்குர்ஆன் அவரின் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாத பல சந்தர்ப்பங்களில் இறங்கியது. நபியவர்களைத் தொட்டும் 537 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். ஹஜ்ரி 13ம் ஆண்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது மரணத் தருவாயில் இஸ்லாமிய உம்மத்தின் அடுத்த கலீபாவாக அவரை நியமித்தார். பல நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கினார்கள். ஹிஜ்ரி நாட்காட்டியையும் அவரே உருவாக்கினார்கள். மக்களிடையே நீதமான ஆட்சி நடத்தினார்கள். ஹிஜ்ரி 23ம் ஆண்டு பஜ்ருத் தொழுகையில் வைத்து அபூலுஃலுஆ என்ற நெருப்பு வணங்கியினால் கொலை செய்யப்பட்டு அன்னை ஆயிஷாவின் அறையில் நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவருடைய ஆட்சிக்காலம் 10 வருடங்களும் 6 மாதங்களுமாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

(1) நாம் செய்யும் நற்செயல்களுக்கு நற்கூலி கிடைக்க நல்ல எண்ணம் (உளத்தூய்மை) அவசியமாகும்.

(2) நிய்யத்தின் இடம் உள்ளமாகும். எனவே அதை (வாயால்) மொழிவது மார்க்கமாக்கப்பட மாட்டாது.

(3) அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மை நற்செயல்கள் ஏற்றுக்கொள் ளப்படுவதற்கான நிபந்தனைகளுள் ஒன்றாகும். ஏனெனில் இறைவன் அவனுடைய திருமுகத்திற்காகவும்இ நபியவர்கள் காட்டித்தந்த பிரகாரமும் செய்யப்பட்ட அமல்களை மாத்திரமே ஏற்றுக்கொள்கிறான்.

(4) முகஸ்துதியை விட்டும் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget