ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 28

வுழூ செய்யும் முறை, அதனை முறிக்கும் காரியங்கள்
வுழூ செய்யும் முறை

1. உள்ளத்தில் நிய்யத்து வைத்தல்.

2. மிஸ்வாக் செய்தல்.

3. வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது 'பிஸ்மில்லாஹ் بِسْمِ اللَّهِ என்று கூறல்.

4. கையை மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்.

5. மூன்று தடவை நீரை அள்ளி, ஒவ்வொரு தடவையிலும் வாய் கொப்பளித்தல், மூக்கிற்கு நீர் செலுத்தி சிந்தி விடுதல்.

6. முகத்தை மூன்று முறை கழுவுதல்.

7. தாடியை குடைந்து கழுவுதல்.

8. மூன்று முறை இரு கரங்களை கழுவுதல், இதன் போது வலது கரத்தை முற்படுத்தல்.

9. தலை முழுவதையும் மஸ்ஹூ செய்வதுடன் இரு காதுகளையும் ஒரு முறை மஸ்ஹூ செய்தல்.

10. மூன்று முறை இரு கால்களையும் கழுவுதல். இதன் போது வலது காலை முற்படுத்தல்.

வுழூ செய்து முடிந்ததன் பின் மேற்கொள்ளும் சுன்னத்தான காரியங்கள்.

01. துஆ ஓதுதல்.

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ. وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ،

நபியவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூ செய்து 'அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீகலஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ' என்ற துஆவை ஓதினால் அவருக்கு சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. (முஸ்லிம் : 234)

02. இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவரொருவர் அழகான முறையில் வுழூ செய்து மனத் தூய்மையோடு இரண்டு ரக்அத்துகள் தொழுகிறாரோ அவருக்கு சுவனம் கடமையாகிறது. (முஸ்லிம் : 234)

வுழுவை முறிக்கும் காரியங்கள்

1. முன், பின் துவாரங்களில் இருந்து ஏதேனும் வெளியாதல்.

2. ஆழமான தூக்கம் அல்லது சுய நினைவற்ற தூக்கம்.

3. திரை இல்லாமல் இச்சையோடு அபத்தை தொடல்.

4. ஒட்டக இறைச்சி சாப்பிடல்.

வுழூ செய்யும் முறை, அதனை முறிக்கும் காரியங்கள்

வுழூ செய்யும் முறை

1. உள்ளத்தில் நிய்யத்து வைத்தல்.

2. மிஸ்வாக் செய்தல்.

3. வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது 'பிஸ்மில்லாஹ் ' بِسْمِ اللَّهِ என்று கூறல்.

4. கையை மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்.

5. மூன்று தடவை நீரை அள்ளிஇ ஒவ்வொரு தடவையிலும் வாய் கொப்பளித்தல்இ மூக்கிற்கு நீர் செலுத்தி சிந்தி விடுதல்.

6. முகத்தை மூன்று முறை கழுவுதல்.

7. தாடியை குடைந்து கழுவுதல்.

8. மூன்று முறை இரு கரங்களை கழுவுதல்இ இதன் போது வலது கரத்தை முற்படுத்தல்.

9. தலை முழுவதையும் மஸ்ஹூ செய்வதுடன் இரு காதுகளையும் ஒரு முறை மஸ்ஹூ செய்தல்.

10. மூன்று முறை இரு கால்களையும் கழுவுதல். இதன் போது வலது காலை முற்படுத்தல்.

வுழூ செய்து முடிந்ததன் பின் மேற்கொள்ளும் சுன்னத்தான காரியங்கள்.

01. துஆ ஓதுதல்.

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ. وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

நபியவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூ செய்து 'அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீகலஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ' என்ற துஆவை ஓதினால் அவருக்கு சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. (முஸ்லிம் : 234)

02. இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுதல்.

நபி அவர்கள் கூறினார்கள் : எவரொருவர் அழகான முறையில் வுழூ செய்து மனத் தூய்மையோடு இரண்டு ரக்அத்துகள் தொழுகிறாரோ அவருக்கு சுவனம் கடமையாகிறது. (முஸ்லிம் : 234)

வுழுவை முறிக்கும் காரியங்கள்

1. முன், பின் துவாரங்களில் இருந்து ஏதேனும் வெளியாதல்.

2. ஆழமான தூக்கம் அல்லது சுய நினைவற்ற தூக்கம்.

3. திரை இல்லாமல் இச்சையோடு அபத்தை தொடல்.

4. ஒட்டக இறைச்சி சாப்பிடல்.

அல்லாஹ் கூறுகிறான் : 'நீங்கள் பெருந்தொடக்கு உடையவர்களாக இருந்தால் குளித்து (சுத்தம் செய்து) கொள்ளுங்கள், (இது) தவிர நீங்கள் நோயாளியாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மலசலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களை தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களை சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்கு நீர் கிடைக்காவிட்டால் (தயமம் செய்து கொள்ளுங்கள் அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்'. (அல்குர்ஆன் - 05 : 06)

வினா  இல - 28
 
வுழுவை முறிக்கும் காரியங்கள் நான்கு குறிப்பிடுக ?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget