ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 24

இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள்
 
1. வாஜிப் (கட்டாயக் கடமை) - இது அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் கட்டாயமாக செய்ய வேண்டும் என்று ஏவப்பட்ட விடயங்களாகும். அவற்றை செய்வதனால் நன்மை கிடைக்கும். விடுவதனால் தண்டனைக்குள்ளாகுவார். (உதாரணம் : தொழுகை)

2. சுன்னத் (விரும்பத்தக்கவை) - இது அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் அவசியம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படாத விடயங்களை குறிக்கும். அதனை செய்வதனால் நன்மை கிடைக்கும். விடுவதனால் பாவம் கிடைக்காது. (உதாரணம் : சுன்னத்தான தொழுகை)

3. ஹராம் (விலக்கப்பட்டவை) - அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் தடுக்கப்பட்ட விடையங்கள். அதனை செய்பவர் தண்டிக்கப்படுவார். (உதாரணம் : பெற்றோரை நோவினை செய்தல்)

4. மக்ரூஹ் (வெறுக்கத்தக்கவை) - இது அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படாத விடையங்களை குறிக்கும். (உதாரணம் : இடது கையால் வாங்குதல், கொடுத்தல்)

5. முபாஹ் (ஆகுமானவை) - ஒரு குறிப்பிட்ட விடயத்தில் நேரடியாக ஏவலோ, விலக்கலோ இடம்பெறாதவற்றை குறிக்கின்றது. (ரமழான் கால இரவுகளில் சாப்பிடுதல்)



வினா இல -24
 
மக்ரூஹ் (வெறுக்கத்தக்கவை) என்றால் என்ன என்பதை ஓர் உதாரணம் கூறி விளக்குக .

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget