இயற்கை மரபுகள்
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَاسْتِنْشَاقُ الْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ " قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ زَادَ قُتَيْبَةُ، قَالَ وَكِيعٌ: " انْتِقَاصُ الْمَاءِ: يَعْنِي الِاسْتِنْجَاءَ " ) أخرجه مسلم 261 )
ஹதீஸின் பொருள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இயற்கை மரபுகள் 10 உள்ளன. மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, மிஸ்வாக் செய்வது, (வுழூவின் போது) மூக்கினுள் நீர் செலுத்தி சிந்திவிடுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மடிப்புக்களைத் தேய்த்துக் கழுவுதல், அக்குள் முடிகளை நீக்குதல், மறைவிட முடிகளை அகற்றல், (மலசலம் கழித்த பின்) தண்ணீரால் சுத்தம் செய்தல். (இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும்) முஸ்அப் என்பவர் கூறுகின்றார் : பத்தாவதை நான் மறந்து விட்டேன். அது வாய்கொப்பளிப்பதாய் இருக்கலாம் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆஇஷா (ரலி).
ஆதாரம் - முஸ்லிம் : 261
ஹதீஸ் அறிவிப்பாளர்
உம்முல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தாய்) ஆஇஷா (ரலி) அவர்கள் (இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரும், அருமை நண்பருமான) அபூபக்கர் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வியாவார்கள். நபியவர்கள் ஹிஜ்ரதுக்கு முன் இவர்களைத் திருமணம் செய்து, (ஹிஜ்ரதுக்குப் பின்) மதீனாவில் அன்னையாருக்கு 9 வயதிருக்கும் போது குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டார்கள். நபியவர்கள் மரணிக்கும் போது அன்னாருக்கு வயது 18 ஆகும். மக்களில் மிகச் சிறந்த சட்டவல்லுனராகவும், அறிவாளியாகவும், நல்ல கருத்துள்ளவராகவும் திகழ்ந்தார்கள்.
மேலும் கொடை வழங்குவதில் முன்னுதாரணம் கூறப்படக்கூடியவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) (அவர்களுடன் நீண்ட காலங்கள் வாழ்ந்ததன்; காரணமாக) அவர்களைத் தொட்டும் அதிக நபிமொழிகளை அறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கை 2210 ஆகும்.
அன்னையவர்கள் ஹிஜ்ரி 57 அல்லது 58 இல் ரமழான் அல்லது ஷவ்வால் மாதம் 17ம் நாள் செவ்வாய் கிழமையன்று மதீனாவில் மரணித்து பகியில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களுடைய ஜனாஸாத் தொழுகையை (அவர்களுடைய வஸிய்யத்தின் பிரகாரம்) அபூ ஹூரைரா (ரலி) நடத்தினார்கள்.
ஹதீஸின் சாராம்சம்
நபியவர்கள் இந்த ஹதீஸிலே பித்ரா இயற்கை மரபுகள் 10 என குறிப்பிடுகின்றார்கள். அபூ ஹூரைரா (ரலி) அவர்களுடைய அறிவிப்பில் அவைகள் 5 என இடம் பெற்றுள்ளது. எனவே இவ்விரு அறிவிப்பிலும் பித்ராவுடைய இயற்கை மரபுகள் 10 என்பதிலோ 5 என்பதிலோ சுருங்காது என்பதைக் காட்டுகின்றது. இதை உறுதிப்படுத்த ஹதீஸிலே (عشر ، خمس) என்பதற்கும் பின்னால் (من) என்ற இடைச்சொல் வந்துள்ளது. பித்ரா என்பது நபிமார்களின் ஸூன்னாவில் உள்ளவை. இந்த ஹதீஸில் கூறப்பட்ட அனைத்து குணங்களும் இஸ்லாம் கொண்டு வந்த சுத்தத்தையே காட்டுகின்றது. இதை செயற்படுத்துவது இஸ்லாம் காட்டித்தரும் அழகான விடயங்களில் உள்ளதுடன், மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவும், தூய்மையானவனாகவும் மாற்றி விடுகின்றது. ஏனெனில் சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாக உள்ளது.
ஹதீஸின் படிப்பினைகள்
1. அல்லாஹ் வகுத்துள்ள இயற்கை மரபுகள் மனிதனை நலவின் பக்கம் அழைத்து கெடுதியை விட்டும் தூரப்படுத்துகின்றது.
2. இந்த 10 குணங்களும் அல்லாஹ் விரும்பும், ஏவும் வழிமுறைகளில் உள்ளது. சுத்தசுயாதீனமுடையவர்கள் இதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், இவற்றுக்குப் புறம்பானவற்றை வெறுக்கும் இயல்பைக் கொண்டுள்ளனர்.
3. இஸ்லாமிய மார்க்கம் சுத்தம், அழகு போன்றவற்றை வலியுறுத்துகிறது.
4. மேற்கண்ட விடயங்களைக் கடைப்பிடிப்பதும் அவற்றை விட்டும் பராமுகமில்லாமல் இருப்பதும் அவசியமாகும்.
5. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இம்மரபுகளில் பல மார்க்க, உலக பயன்கள் உள்ளன. தோற்றத்தை அழகுபடுத்தல் உடம்பைச் சுத்தப்படுத்தல், சுத்தத்தைப் பேணல், காபிர்களுக்கு மாறுசெய்தல், அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடத்தல் போன்றன அவற்றில் சிலவாகும்.
6. இன்றைய இளைஞர், யுவதிகள் தங்கள் நகங்களை நீட்டமாக வளர்த்து அழகு பார்ப்பதை அவதானிக்கிறோம். ஆண்கள் தமது மீசைகளை அதிகமாக வளர்ப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளில் உள்ளது. இஸ்லாம் அழகை ஏவுகிறது. மோசமானதை தடுக்கிறது. என்றாலும் ஐரோப்பியர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவது கெட்டதை நல்லதாக மாற்றி நல்லதை கெட்ட ஒன்றாக மாற்றியுள்ளது.
7. கத்னா செய்வது ஆண்கள் மீது கட்டாயமாகும். பருவ வயதடையும் போது வணக்க வழிபாடுகள் கடமையாகுவது போன்று கத்னாவும் கடமையாகின்றது.
8. தாடியை வளர விடுவதும் இயற்கை மரபுகளில் ஒன்றாகும். அதனை வளர்க்கும் படி அறிவிக்கப்பட்டுள்ள பல நபிமொழிகளின் அடிப்படையில் 'தாடி வளர்ப்பது வாஜிபாகவும், அதனை மழிப்பது (ஷேவ்) ஹராமாகவும்' உள்ளது. யூத, கிறிஸ்தவ, மற்றும் சிலை வணங்கிகளுக்கு மாறு செய்வதற்காக நபியவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளார்கள்.
வினா இல - 19

தாடி வளர்ப்பது , தாடியை மழிப்பது ( ஷேவ் ) போன்றவற்றின் மார்க்கச் சட்டம் என்ன ?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.