ஹதீஸ்துறைக்குப் பங்காற்றிய நான்கு மத்ஹப்களின் அறிஞர்களும் அவர்களின் கிரந்தங்களும்
முஸ்னத் அபீ ஹனீபா
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கு சேவை செய்தோரில் கூபாவில் ஹி.80ல் பிறந்து பக்தாதில் ஹி150ல் மரணித்த 'இமாமுல் அஃழம்' அபூ ஹனீபா நுஃமான் இப்னு ஸாபித் அவர்களும் ஒருவர்.
பிக்ஹூ கலையில் அதிக கவனம் செலுத்தியதால் ஹதீஸ்துறையில் பங்களிப்பு குறைந்தாலும் இவர்கள் அறிவித்த பொன்மொழிகள் சுமார் 14 அல்லது 15 பேர் முஸ்னத் என்ற பெயரில் அறிவித்துள்ளனர். எனினும் அவர்களுடைய சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு ஹஸன் என்பவர் தொகுத்த முஸ்னத் மாத்திரமே தற்போது அச்சிடப்பட்டு நமது கைகளில் தவழ்கின்றது. அதில் 524 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் முல்லா அலீ அல்காரீ அவர்கள் 'ஷரஹ் முஸ்னத் அபீ ஹனீபா' எனும் பெயரில் இதற்கு விரிவுரை எழுதியுள்ளார்கள்.
முவத்தா மாலிக்
'இமாமு தாரில் ஹிஜ்ரா' என்றழைக்கப்படக்கூடிய அபூஅப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் அவர்களால் இயற்றப்பட்ட கிரந்தம் முவத்தா ஆகும். இவர்கள் ஹி.97ல் பிறந்து ஹி.179ல் மரணித்தார்கள்.

இதில் நபி அவர்களுடைய ஹதீஸ்கள் உடப் ட ஸஹாபாக்கள், தாபிஈனக் ளது கூற்றுக்களும், மார்க்கத் தீர்ப்புக்களும் அடங்கியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். சுமார் 1720 ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ள இக்கிரந்தம் பல அறிஞர்களால் விரிவுரை செய்யப்பட்டுள்ளது. இதில் இப்னு அப்துல்பர் அவர்களால் எழுதப்பட்ட 'அத்தம்ஹீத்' மற்றும் 'இஸ்தித்கார்' என்ற விரிவுரை நூற்கள் பிரசித்திபெறற் வையாகும்.
முஸ்னத் அஷ்ஷாபிஈ
'ஆலிமு குறைஷ்' என அறியப்படும் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாபிஈ அவர்கள் பலஸ்தீனிலுள்ள காஸ்ஸாவில் ஹி150ல் பிறந்து எகிப்தில் ஹி.204ல் மரணித்தார்கள். அவர்கள் தொகுத்த ஹதீஸ்களே முஸ்னத் அஷ்ஷாபிஈ என்றழைக்கப்படுகிறது. இமாம் மாலிக் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களில் இமாம் ஷாபிஈயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்நூலை இமாம் ஷாபிஈ அவர்கள் தொகுக்கவில்லை. இமாம் ஷாபிஈ அவர்களிடமிருந்து இவர்களுடைய சிரேஷ்ட மாணவரான ரபீஃ பின் ஸுலைமான் அல்முராதீ கேட்ட ஹதீஸ்களை அவரிடமிருந்து அபுல் அப்பாஸ் அல்அஸம்மு என்பவர்; தொகுத்ததே முஸ்னத் அஷ்ஷாபிஈ என்ற நூலாகும்.
எனினும் இந்நூலில் இடம்பெறாத, இமாம் ஷாபிஈ அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் இன்னும் ஏராளம் உள்ளன. 1859 ஹதீஸ்கள் உள்ள இந் நூலிற்கு ஷாபிஈ மத்ஹபின் பிற்கால அறிஞர் இமாம் ராபிஈ அவர்கள் 'ஷரஹ் முஸ்னத் அஷ்ஷாபிஈ' எனும் பெயரில் விரிவுரை எழுதியுள்ளார்கள்.
முஸ்னத் அஹ்மத்
ஹி.164ம் ஆண்டு பிறந்து ஹி.241ல் மரணித்த 'இமாமு அஹ்லிஸ் ஸூன்னா' அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களால் எழுதப்பட்ட கிரந்தமே முஸ்னத் அஹ்மத் ஆகும். இவர் இமாம் ஷாபிஈ அவர்களின் முக்கியமான மாணவர்களுள் ஒருவராவார்.
ஏனைய ஹதீஸ் கிரந்தங்களைப் போல் பாடங்கள் அடிப்படையில் ஹதீஸ்கள் தொகுக்கப்படாமல் ஓர் அறிவிப்பாளர் (ஸஹாபி) வேறுபட்ட தலைப்புக்களில் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் நபித்தோழர்களின் பெயர்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதால் இந்நூலில் ஹதீஸ்களைப் தேடிப் பெற்றுக் கொள்வது சற்று சிரமமாகவே காணப்பட்டது. அதனை இலகுவாக்கும் விதத்தில் சென்ற நூற்றாண்டில் எகிப்து நாட்டில் வசித்த அஹ்மத் அஸ்ஸாஆதீ என்பவர் இந்நூலிலுள்ள ஹதீஸ்களை ஏனைய நூற்களைப் போன்று பாடங்கள் அடிப்படையில் ஒழுங்குபடுத்தி 'அல்பத்ஹூர் ரப்பானீ' எனும் பெயரில் தொகுத்துள்ளார்கள்.
வினா இல - 14

இமாமு அஹ்லுஸ் ஸுன்னா என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட அறிஞர் யார் ?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.